எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது...!ஆனால்...
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது.... 
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் , 
அவரது இளமைக்கால வாழ்க்கை :"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ... 
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கொஞ்சம் கடைப்பிடிக்கலாமே...!!!

மேலும்

அருமையான தத்துவ வரிகளை கொண்டுவந்து சேர்த்தமைக்கு நன்றிகள் பல....... 03-Jan-2016 12:20 pm

நனையும் என் தலையணைக்கு தெரியும் சில உண்மைகள்

என் கண்ணாடிக்கு தெரியாமலேயே போய்விடுகிறது

மேலும்

அகத்தில் நம்பிக்கையும்
தேகத்தில் தைரியமும்
இகத்தில் சாதிப்பதற்கு
இன்றியமையாதவை..!!


-பாஸித் மருதான்-
***30-06-2015***

மேலும்

அவள் ஒரு கிராமத்து அம்மா..
நான்பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்...
என்னிடம் வந்தாள். "அய்யா இதுல எப்படி பேசுறது? சொல்லித்தறியா? கையில் புதிய போனுடன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்..... சிகப்பு பட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது.." எவ்வளவு பெருமிதம்!! அந்த அம்மா முகத்தில்...

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்...... மாசம் ஒரு தடவை பேசுவான்.. இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.. அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாருப்பா ...?" என்றாள்...

நான் பார்த்தேன்.. அந்த பையன் call பண்ணவே இல்லை......
நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க..... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..
சாப்டீங்களா அம்மா? என்று கேட்டேன்
எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ?
எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல!!

நான் சொன்னேன் நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்.

அந்த தாய் அழுது விட்டாள். அப்டியா அய்யா சொல்ற இனிமேலே சாப்டறேன்.

எனக்கு அழுகை வந்து விட்டது...

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர /சகோதரிகளே

உங்கள் தாயிடம் பேசுங்கள்....
'அம்மா' என்ற சொல்லுக்காக ஏங்குபவள்..
அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்....

(படித்ததில் பிடித்தது)

மேலும்

வாழ்க்கையை பணப்பிசாசு பட்டாபோட்டுப் பிரித்துவிடுகிறது..! அஞ்சாறு வருஷம் உன் ஆசமுகம் காங்கலையே... பாசம் கண்ணீருஎல்லாம் வெறிச்சோடிப்போன வேதாந்தம் ஆயிருச்சே...! 03-Dec-2015 1:27 pm

ஒவ்வொருவருக்கும் 

சுய கௌரவமும்
 சுய நலமும் 
தற்பெருமையும் எதிரிகள்...
 சுயகௌரவம் உறவினர்களை தூரமாக்கும் 
சுயநலம் நண்பனை தூரமாக்கும்
 தற்பெருமை இறைவனை தூரமாக்கும்
"தெரியாது" என்பனுக்குத்தான் கல்வியும் கௌரவமும் சொந்தம்....
 "கல்வியும் கௌரவமும் மீன் போன்று "தெரியாது" என்பது தண்ணீர் போன்று "

மேலும்

எனக்கென்று ஏன் எழுதவில்லை இறைவன் 

ஏட்டில் இடமில்லை போலும் முடிந்தது வாழ்க்கை.

மேலும்

தத்துவக் கவிதை . பாராட்டுக்கள் அருமையான படைப்பு நன்றி 27-Sep-2015 6:22 pm
" எ(உ )ன்னை எழுத..." ஏடுகள் இரண்டு உண்டு மரண ஏட்டில் இடம் இருக்கிறதே வாழ்க்கை ஏட்டில் இடமில்லை எழுத மறப்பவன் இறைவன் அல்லன் 27-Sep-2015 5:10 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே