எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  -மன்சூர் 


ஆதி காலத்தில் யாருக்கு மிக பலம் அல்லது வசதி இருந்ததோ அவர்கள் அச்சுறுத்தலையும் பயத்தையும் காட்டி மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தனர்.
காலம் மாற மாற அவர்களின் யுக்தியும் மாறின.

 இன்று நாம் யார்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் தன்மையை உரிமை என்ற பெயரால் உருவாக்கி விட்டனர்.  

மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சியே சிறந்தது என ஒருவனை தேர்ந்தெடுப்பதும், மக்களால் ஆட்சியையே மாற்றி அமைக்க முடியும் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டாலும் எப்போதும் நம்மை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.


மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:23 pm

ஆங்கிலயேர்கள் நம் நாட்டினை அடிமை அடிமை படுத்த நினைத்த போது எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வடஇந்தியர்களை அடிமை படுத்தினார்கள். அவர்களின் ஆசை பணத்தின் மீதும் ஆங்கிலயேர்கள் தரும் அற்ப பதவிர்க்காகவும் அவர்களின் மொழி கலாச்சாரம் இதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர்களோடு கை கோர்த்து மற்ற இடங்களை பறிக்க இவர்களும் உதவினார். அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தனர் தென் இந்தியர்கள். பணம் பதவி அனைத்தையும் விலை பேசி கூட முடியாத காளையர்கலாய் விளங்கினார்கள். தன் மொழிகாகவும் கலாச்சாரத்துக்காகவும் ரோஷத்திற்கும் உயிரையும் துச்சமாக நினைத்து உயிர் விட்டனர். நம் முன்னோர்களின் இரத்தம் இன்றும் நமக்கு ஓடுவதால் தான் நாமும் நம் மொழிக்காகவும் கலாச்சாரத்துக்காகவும் வடஇந்தியர்களிடம் போராடிக்கொண்டு இருக்கிறோம்..

மேலும்

நூறு புள்ளிகள் உள்ளவர்கள் மட்டும்தானா காணொளி காணொளி பதிய முடியும் இங்கே?

மேலும்

நேற்று இரவு மணி பதினொன்று இருக்கும். முப்பத்தி ஐந்து வயதுடைய ஒரு பெண் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.

இங்கு பஸ் வருமா என கேட்டார்.
மணி பத்திற்குமேல் பஸ் வராது என்றேன்.  செய்வதறியாது திகைத்தார். நான் சொன்னேன் வாருங்கள் என்னுடன் நான் பஸ் வரக்கூடிய பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடுகிறேன் என்று.

போகும் வழியில் சொன்னார் இருபது வயதுடைய அவரின் மகன் குடிக்கு அடிமையாகி தினமும் வீட்டில் தகராறு செய்துகொண்டு இருக்கிறார். ஆதலால் இங்குள்ள மது திருத்தகத்தில் சேர்த்திருக்கிறேன்.  வெளியூரிலிருந்து வந்து தினமும் அவனிடம் பேசி செல்வேன். இன்று நேரமாகிவிட்டது, இந்த குடியால் என் குடும்பமே சீரழிந்து விட்டது என்று கவலையுடன் சொன்னார்.
அனைவரின் குடும்பத்திலும் இந்த குடி பேரிடியாக இருக்கிறது என எண்ணிக்கொண்டேன்.
இறக்கிவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும் என் நினைவுகள் அவர் பஸ் ஏறிவிட்டாரா? வீடு போய்சேர்ந்து விட்டாரா? என்றவாரே இருந்தது.

மது இல்லாத நாடு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருப்பர் நம் நாடு பெண்கள் சிறுவர்களெல்லாம் இன்று அடிமையாகிவிட்டனரே.

மேலும்

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
என்பதை போல மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள்
ஆரோக்கியத்திற்கு உதவாது.

மேலும்


மேலே