எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!



நான் மூன்று பருவத்தினனாகவும் 
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!

இளங்குளிர் காற்றில்
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !


அவள் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!


ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !
ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !


புரிபடாத அவளின் நகர்வுகள்
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான் 
பயணம் !


பக்கத்தில் ஆறு
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி 
தொடாமல் !


மழை வரும் போலிருக்கிறது
என்கிறேன் ..
குடை வேண்டாம்..
வரட்டும் என்கிறாள் !....கருணா....  

மேலும்

  வளைந்து ஏறி இறங்கி குறுகி பெருகி ஓடும் இந்த ஆஸ்திரேலிய மலைப்பாதையில் கீழே கடல் கூடவே வருவதை ரசித்தபடி பயணம் ..இடையிடையே மழையும் இளம் வெயிலும் மாறி மாறி ..பச்சைப் பசேல் ..மழைக் காடுகள் வலது புறம் மலைச்சாரலில் ..கீழே மகா சமுத்திரம் நீலம்..நீலம் ..மார்பில் வந்து மோதும் சில்லென்ற ஊசிக்காற்று..வேடிக்கை பார்க்க வந்து அச்சத்திலோ வெட்கத்திலோ எகிறித் தாவி ஓடி மறையும் கங்காருகள் ..அழகின் உச்சம் !நீளும்..பாதை 


***


குளிரும் நிலம், காற்று 
வானின் கொடை..குடை!  

மேலும்

ஆஸ்த்திரேலியாவா----நீண்ட பயணக் கட்டுரை எழுதலாமே ! நாலு வரியில் முடித்துவிட்டீர்கள் ! ஆஸ்திரேலியா என்றால் அழகு தாவி ஓடும் கங்காரு சிரிக்கும் பறவை பூமியில் இயற்கையின் சொர்க்கம் கவிஞனுக்கு அருட் கொடை ! 21-Nov-2017 10:20 am

  சந்தோஷம்..மரத்தின் இலைகளை தீண்டும் காற்றுக்கா ..குளிர் தீண்டலில் இன்பம் கண்ட இலைகளுக்கா..? சோர்வு ..கரை தொட்டு திரும்பும் அலைகளுக்கா ..தன்னோடு இருந்துவிட விதியில்லை இந்த அலைக்கு என்று மருகும் கரைக்கா? உனக்கு பதில் தெரியும் ..சொல்லேன்..


***

அலைகளின் தீண்டல்களில் கரை 
காற்றின் தொடுதலில் இலைகள் 
அத்தனையும் எனக்குள் நீயாக !  

மேலும்

திரு.அகன் சார் அவர்களுக்கு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
*************************************

இயல்பான புன்னகை
 
தவழும் இனியவரே 

நலமான ..வளமான 

பெருவாழ்வு ..நீங்கள் 

எந்நாளும்  பெற்று 

எமக்கெல்லாம் 

உளமார்ந்த ஆசிகள் 

வழங்கிடுவீர் ..

உமது  இல்லத்தாரும் 

எப்போதும்  உங்கள் 

அன்புமழைதனில் 

நனைந்திருக்க 

எல்லாம் வல்ல 

இறைவனை  வேண்டுகிறேன் ..

உமது  பிறந்த நாள் 

நூறினைத்  தாண்டிடவே..

வணங்குகிறேன்  !


அன்புள்ள 


அகன் சார் !

*************************************

என்றும் அன்புடனும் நட்புடனும் 

ச.கருணாநிதி 

மேலும்

. இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி காலதாமதத்துக்கு ஏன் கணினிபயன்பாடு காரணம் . ******************************************** 25-May-2016 5:22 pm
கவிஞர் அகன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29-Apr-2016 5:47 pm
என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு அகன் அவர்களுக்கு. இன்று போல் என்றும் இனிதாக வாழ வாழ்த்துகிறேன் ,[ ஹாப்பி பர்த்டே டு அகன் சார் ] 29-Apr-2016 8:26 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா.... 28-Apr-2016 11:58 pm

ஒரு மூங்கிலின் துளைகளில்

***************************

முள்கிரீடங்களை
சுமந்த பிறகே
சிரசிலிருந்து வழியும்
ரத்தங்களில் இருந்தே
சில பயணங்களின் பாதைகளும்
தூரங்களும்
வரைபடமாக்கப்பட்டன ..
உங்களால் !

தொலைந்து போன
திறவுகோல்களுக்கு
தெரியாது
உடைக்கப் பட்ட பூட்டுகளின்
வலியும் வேதனையும் ..
இணை பிரிந்த ஒன்றைத் தவிர
அவைகளுக்கு
இழப்பதற்கு ஏதும் கிடையாது
அவை பயனற்றுப் போவதால்
நட்டமொன்றுமில்லை
வீடுகளின் கூரைகளே
எடுத்தெறியப்பட்ட பின்பு !

தொடர் ஓட்டத்தில்
ஒருவனின் ஓட்டத்தை
இன்னொருவன் தொடர ..
வெற்றிகள்
நிச்சயமற்றுத்தான் போகின்றன
பெருவலியை
அதிலொருவன் பெறும்போது ..!

முள்ளும் கல்லும்
குத்திக் கிழித்த சதையோடு
ரணங்களை தாங்கி ஏறிய
செங்குத்தான மலைப்பாதையில்
கல்பொறுக்க
காற்றோட்டமாய் போகிறான்
என்று பொருள் கொள்ள
இரவல் சிறகுகளோடு
எகிறிப் பறந்து விடுகிறது
எதிர்த்திசையில்
உங்கள் இதயத்தின் மூலைகளில்
உறைந்திருந்த ஈரம் !

இரண்டடுக்கு வீட்டின்
மொட்டைமாடி
எறும்புக்கு இமயமாகும் !

தோகையின் ஓரிழை இழத்தல்
மயிலுக்கு ஒன்றுமில்லை ..
பள்ளிக் குழந்தைக்கோ
அதுவோர் பரவசம்
என்பதால் ..
புத்தகத்தின் நடுவில் வைத்து
பாதுகாக்கும் !

நியமங்களின் ..
கோட்பாடுகளின்.. வழியினில்
நீர்வார்க்கப் படாத ..
பட்டுப் போன செடிகள்
பார்த்தீனியங்கள்
பரவியிருக்கின்றன
உங்கள் தோட்டமெங்கும் ..!

நச்சுக் காற்று மண்டலத்தின் நடுவில்
நந்தவனங்கள்
நீரின்றியும் துளிர்க்கட்டுமே ..
நச்சு நீக்கும்
நல்ல மூச்சுக் காற்றால் ..!

அதுவரை ..
ஒரு மூங்கிலின் துளைகளில்
உள்ளும் புறமுமாக
நுழைந்தபடி நாதமாகத்தான்
இருந்து விடுங்களேன்..!

மேலும்

மிக்க நன்றி நிலா கண்ணன்..! 17-Apr-2016 8:20 pm
மிக்க நன்றி சுஜய் ரகு..! 17-Apr-2016 8:20 pm
மிக்க நன்றி சார்..தங்களது கருத்து ஊக்கமூட்டுவதுடன் மகிழ்ச்சியும் தருகிறது. ! இயன்றவரை எழுதிப் பழகும் முயற்சியில் தங்கள் போன்றவர்களின் கருத்துகள் எனக்கு வழித்துணையாய் வருகின்றன!. 17-Apr-2016 8:18 pm
இல்லை சார்..நச்சு நீக்கும் நல்ல காற்று என்ற முதல் வரியின் தொடர்ச்சி தான் அது ! கருத்துக்கு மிக்க நன்றி. ஞான வாசிட்டத்தின் தற்போதைய பகுதிய முழுதும் உள்வாங்குவதில் உள்ள சிரமத்தில் சற்றே பொறுமையாக எழுதுகிறேன்.. தொடர்வேன்..தங்கள் நினைவூட்டல் மகிழ்ச்சி தருகிறது, மிக்க நன்றி சார்! 17-Apr-2016 8:16 pm

  அருவியின் 

தியானத்தையொத்த 

இடைவிடாத 

விழுதலாய் 

பாறைகள் மீது 

மோதுகின்ற 

புதுப்புனலாய் 

அரிதாய் 

அழகாய் 

வெண்பஞ்சு நுரையோடு 

விஸ்வ ரூபமெடுத்து 

நதியாய் 

நடந்தாய் 

வாழ்வே 

அனு தினமும் 

வடிவம் மாற்றி 

மனதினில் ஊற்றெடுத்து 

விரிந்தாய் 

வெவ்வேறாய்த் 

தெரியும் 

வாழ்வே .. 

பருகுகின்றேன் 

உன்னை 

துளித்துளியாய் 

என்னை நீ 

தொட்டு பரவிடும் 

கணத்தில் எல்லாம் 

வாழ்க்கை 

ஒவ்வொரு கணத்தினில் 

வாழ்வதில்.. 

தானே என்கிறாய் !  

மேலும்

ஒரு வாகனத்தை
ஓவர்டேக் செய்து
கடந்து விடுவது ..

நினைத்த இடத்தில்
நெடுஞ்சாலையின் ஓரத்தில்
வாகனம் நிறுத்திக்கொண்டு
இளநீர் குடிப்பது..

பிடிக்காத திரைப்படத்தின்
இடைவேளையில்
எழுந்து வந்து விடுவது ..

பழக் கூடையில் ..
கலந்து வந்து விட்ட
அழுகிய ஒரு பழத்தை
தூக்கி எறிந்து விடுவது..

எரிச்சலூட்டும் ஒரு நடிகனின்
போட்டோவை பார்க்காமல்
அடுத்த செய்திக்கு
தாவிவிடுவது..

என்பன போல ..
அவ்வளவு எளிதானதல்ல ..
எல்லோருக்கும் ..

ஓட்டுக்கு
பணம் கொடுக்க
வருபவரை
விரட்டுவது ..என்பது !

துளி விஷம் தான்
என்றாலும் கூட
இனிப்பாக சுவைக்கிறது
இந்நாட்டு
மன்னர்களுக்கு!

மேலும்

ம்ம்ம்ம்!!! 09-Apr-2016 1:34 pm



அறிந்து கொண்டவை..
அறிய விரும்பியவை..
அறிய இருப்பவை..

அத்தனையும் இரவல்!

சுயத்தின் அணையாத ஜோதியில்
இரவல்கள் எரிந்துபோக
சுயமே ஜெயிக்கிறது ..!

சுயத்தை தேட
இரவல்களை எரிப்பதைத் தவிர
வேறு வழி இருப்பதாகத்
தெரியவில்லை!

மனத்தின் மரணித்தலில்
தொலைந்து போகும் இரவல்கள் !

சுயத்தை அடையும் 
புறவழிச்சாலை ..
மரிக்கின்ற மனது!!

மேலும்

படித்ததில் பிடித்தது :

ஒரு பெண் அரசியல்வாதி (ஆஸ்டர் ) பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை நோக்கி ..

" நீங்கள் மட்டும் எனக்கு கணவனாக இருந்திருந்தால், உங்களுடைய தேநீரில் விஷத்தைக் கலக்கி விடுவேன்"  என்றார்.

சமயோசிதமாக பதில் சொல்லுவதில் திறமை மிகுந்த சர்ச்சில் உடனே.. 

" மேடம், நீங்கள் மட்டும் என் மனைவியாக இருந்தால், அதை வாங்கி குடித்து விடுவேன்" என்றார்.


(The extremely witty and much-loved British Prime Minister Winston Churchill tops the list with his verbal spat with Lady Astor. The conservative dame forever admonished Churchill for his cigars and alcohol habits, and Churchill was not one to take the insults lying down. Of their famous squabbles, the most memorable is when Astor commented, “If you were my husband, I’d poison your tea.” Churchill’s riposte? “Madame, if you were my wife, I’d drink it.”)

மேலும்

Very significant milestone. Greetings

மேலும்

மேலும்...

மேலே