எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில நேரங்களில் புரட்சி கூட வறட்சி நிவாரணமாகிப் போகும் அளவுக்கு  
இந்தச் சமூகம் சீர்கெட்டு நிற்கிறது


- ஜின்னா

மேலும்

சில வெற்றிடங்களை காற்று நிரப்பாது
காலம்தான் நிரப்பும் 


- ஜின்னா 

மேலும்

நேற்று ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் எழுத்து நண்பர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்கு மிகுந்த தயக்கத்துடன்தான் சென்றேன். ஆனால் அரங்கத்திற்கு உள்ளே சென்றதும் உறவினர் ஒருவரின் சுபநிகழ்ச்சிக்கு வந்துவிட்டோமோ என்பதான சூழல் நிலவியது. எழுத்து நண்பர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். புகைப்படத்தில் பார்த்ததை விட அவர்கள் நேரில் சற்று வேறுமாதிரி இன்னும் நன்றாகவே இருந்தார்கள். 

விழா அரங்கத்திற்கு வழிதெரியாமல் ரோட்டில் ஒருமணிநேரமாக சுற்றிக்கொண்டிருந்த என்னை ஆற்றுப்படுத்தி அரங்கத்திற்கு வழிகாட்டிய பொள்ளாச்சி அபி சார் அவர்களுக்கும், விழாவிற்கு வந்தே ஆகவேண்டும் என்றும் பாதியிலேயே வேறுஒரு அலுவல்  காரணமாகக் கிளம்ப இருந்த என்னை தடுத்து நிறுத்தி விழாவின் கடைசிவரை  இருக்க வைத்த ஜின்னா அவர்களுக்கும், விழா முடியும்வரை கூடவே இருந்த குமரேஷன் கிருஷ்ணன், கனா காண்பவன், மனோ ரெட், அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

அகன் சார், ராஜன் சார், திரு கருணாநிதி அவர்கள், திரு முரளி அவர்கள், திரு பழனிகுமார் அவர்கள் , புதிய கோணங்கி, சந்தோஷ் குமார், கவிஜி, ஆசை அஜித், சுஜய் ரகு, சேகுவேரா கோபி,   சியாமளா மேடம், சாந்தி மேடம், புலமி, இவர்களைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி.
 
பேராசிரியர் க அன்பழகன் அவர்களையும் இனமான தலைவர் கி வீரமணி அவர்களையும் ஈரோடு தமிழன்பன் அவர்களையும் மற்றும் சில பிரபல்யங்களையும் அருகே பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதில் பெருமகிழ்ச்சி. 

கவிக்கோ அரங்கத்தில் இருந்து குமணன்சாவடிவரை தன்னுடைய பைக்கில் ட்ராப் பண்ணினார் ஆசை அஜித். அவருக்கும் நன்றிகள்.

நண்பர் ராம்வசந்த் அங்கே வந்திருந்தால் விழா எனக்கு இன்னும் முழுமை பெற்றிருக்கும். ஆனால் அவர் ஹைதராபாத்தில் இருந்துகொண்டு அடம் பிடிக்கிறார். 

ரொம்பநாட்கள் கழித்து நேற்றிரவு நல்ல வெளிச்சமான ஓர் உறக்கம் வாய்த்தது`

மேலும்

அவ்வளவு உடல்நலக் குறைவிலும் அவ்வளவு உற்சாகமாக இருந்தீர்கள் மேடம் , கிரேட் 20-Oct-2015 10:27 pm
விழாவில் அனைவரையும் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி க்ரிஷ்ணதேவ். நான் எனது உறக்கத்தை விழாவின் முன் நாள் இரவு தொலைத்துவிட்டிருந்தேன். வெளியூர் பயணம். நள்ளிரவுதான் சென்னை திரும்பினேன். பிரயாண களைப்பு. மதியம் 2 மணி அளவில் அரங்கம் எங்கிருக்கிறது வந்து பார்த்துவிட்டு சென்றேன். விழா துவங்கும் முன்பாக வரவேண்டும் என்று நினைத்தேன். உடல் நலக் குறைவால் என்னால் நேரத்திற்கு வர இயலாமல் போய்விட்டது குறித்து எனக்கு வருத்தம். 20-Oct-2015 8:59 pm
நான் வர வில்லை தோழரே வர முடியா சூழ் நிலை ... அடுத்த சந்தர்ப்பத்தில் வாய்ப்புக் கிடைத்தால் சந்திப்போம் நன்றி 19-Oct-2015 11:17 pm
வைத்திருந்தால் = வாய்த்திருந்தால் 19-Oct-2015 10:14 pm

நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்மூடி இருக்கும்
நீ கண்மூடி இருக்கும்போது
கனவுகள் விழித்துக் கொண்டிருக்கும்...

- ஜின்னா

மேலும்

ஒரு குழந்தை நம்மை பார்த்து ஏன் சிரிக்க வேண்டும் என்று நாம்
யோசிக்கும் வேளையில் வாழ்கை அங்கே ஒரு ஒளி வட்டத்தை
நிரப்பி விடுகிறது ....

- ஜின்னா

மேலும்

நண்பரே என்ன இது...? இந்த கருத்தை தங்களது கவிதைக்கு நான் போட்ட கருத்து... இதை ஒரு எண்ணமாகவே பதிந்து விட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி... இப்போது நான் எழுதும் கவிதை மட்டுமல்லாது நான் இடும் கருத்தை கூட ரசிக்க ஆள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் மகிழ்கிறேன்.... 16-Jul-2015 8:12 pm
அருமை.. 15-Jul-2015 2:30 pm

வாழ்க்கையென்பதும் ஒரு கண்ணாடி
அதை உடையாமல் பார்த்தால்
ஒன்றாக தெரிவாய்
உடைந்த பின் பார்த்தால்
ஒவ்வொன்றாக தெரிவாய்...

- ஜின்னா

மேலும்

இதற்கு நன்றி எதற்கு ஜின்னா ......... இதை எனது கடமையாகக் கருதுகிறேன் .......... 13-Jul-2015 9:05 pm
தூள் ! 12-Jul-2015 8:09 am
முதலில் தங்களுக்கு எனது முதல் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் தோழரே... காரணம் '' பிரதி எடுக்க முடியா பிம்பங்கள் '' தொடராக எழுதும் எண்ணம் கூட எனக்கு இல்லை முதலில்... அந்த பாடு பொருள்களும் அந்த நடையும் என்னை வசீகரித்தன... அது மட்டும் இல்லாமல் அதை இப்படிப்பட்ட வாசகர்கள் /கவிஞர்கள் அந்த கவிதைக்கு அளித்து வந்த ஆதரவு என்னை இன்னும் கொஞ்சம் யோசிக்க வைத்தது... அதன் தொடர்ச்சியே அதன் இரண்டாம் பாகம் எழுதினேன்... அதற்கும் அவ்வளவு பேர் புரிதல் கருத்திட்டு என்னை திக்கு முக்காடி வைத்து விட்டார்கள்... அதன் விளைவே இது மூன்றாம் பகுதியாக எழுதினேனே.... ஏதோ ஒரு யோசனையில்தான் இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன்... தங்களை போல சிலர் இங்கு தரும் ஆதரவையும் அழிகிய புரிதலையும் பார்க்கும் பொது மனதுக்கு மிக்க நெகிழ்வை தருகிறது... இன்றய இரவு இந்த நெகிழ்ச்சியிலே இருக்கட்டும்... தங்களின் ரசனை என்னை அடுத்த படைப்பை எழுத தூண்டுகிறது... மிக்க நன்றி தோழரே.. இதை தங்கள் எண்ணம் பகுதியில் போட்டு என் கவிதையை சிறப்பித்ததற்கு... 11-Jul-2015 11:29 pm

இன்றைக்கான என்னுடைய இரண்டு கவிதைகளை எழுதி, சகிக்காமல் பிறகு அழித்து விட்டேன் ........

நிம்மதியாய் இருக்கிறது !

மேலும்

உனது அனுமதி சீட்டில் ஒட்டியிருக்கும்
இந்த புகைப்படம் மாதிரி
நீ இல்லை என்றால்
உன்னையே விரட்டி விடுவார்கள்

- ஜின்னா

மேலும்

உங்கள் கவிதைகள் எங்களுக்கு வழிகாட்டி.. காத்திருக்கிறோம் தோழரே.. 10-Jul-2015 12:35 am
காத்திருக்கிறோம் தலைவா 09-Jul-2015 11:19 am
''பிரதி எடுக்க முடியா பிம்பங்கள்"' என்று நான் எழுத நினைத்த போதே இது எல்லோருக்கும் பிடிக்குமா என்ற எண்ணம் எழுந்தது அதனால்தான் இரு கவிதைகளை தொடராக எழுதி விட்டு கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொண்டேன். மீண்டும் அந்த தொடரை தொவங்கலாமா என்று யோசித்த தருணத்தில் நான் முதலில் எழுதிய கவிதையின் உள்ள கடைசி வரிகளை இங்கே ஒரு எண்ணமாக போடும் அளவுக்கு வந்து விட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தோழரே... இப்படி ஒரு தோழர்/தோழமைக்கு எனது வரிகள் பிடிக்கும் பட்ச்சத்தில் எனது தொடர் தொடரும் என்பதில் மகிழ்கிறேன்... மிக்க நன்றி நண்பரே... இதுவரை நான் எழுதிய எந்த படைப்புக்கும் இப்படி எண்ணம் போட்டு நான் பார்க்காததால் இந்த கவிதை உங்களை கவர்ந்ததில் மகிழ்கிறேன்... உங்களை போன்றவர்களுக்காவது கூடிய விரைவில் அடுத்த பாகம்... நட்புடன், ஜின்னா.. 09-Jul-2015 2:18 am

உங்கள் மாலைநேரத் தேநீருக்கு தொட்டுக்கொள்ள இந்தப்படம்

மேலும்

வலி என்பது
எவ்வளவு
வெளிச்சமாக
இருக்கிறது.!
ஒளிந்துகொள்ள
இடமே
இல்லாதபடி.

- மனுஷ்ய புத்திரன்

மேலும்

அருமையான பகிர்வு.. வாசிக்க வாசிக்க பல அர்த்தங்கள் வெளிப்படுகின்றன. 05-Jul-2015 10:03 am
நல்ல பகிர்வு.. இதில் எத்தனை உண்மைகள் எப்படியெல்லாம் ஒளிந்திருக்கிறது பார்த்தீர்களா? 04-Jul-2015 2:59 am
அருமை ..நல்ல பகிர்வு 03-Jul-2015 7:42 pm
தோழா ... ! நல் பகிர்வு ... 03-Jul-2015 7:20 pm
மேலும்...

மேலே