எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரபல இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அலைபேசி எண், ஆனந்த விகடனின் புண்ணியத்தால் ஒரு முறை எனக்குக் கிடைத்தது. அப்போது நான் என் தோட்டத்தில் சில காய்கறிகளைப் பயிரிட்டிருந்தேன். ''இந்த தக்காளிப் பொண்ணு பூவெல்லாம் உதிர்த்துடறா.. அந்த வெண்டைக்காய்ப் பையன் நல்லா வளரந்தவன் சோம்பி நின்னுட்டான்'' என்று அவரிடம் கூறி என்ன செய்வதென்று விளக்கம் கேட்டேன். இதில் பையன் பெண் என்பதெல்லாம் உரையாடலில் அப்படியே வந்து விட்டது.. பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை. அவற்றின் போட்டோக்களை அனுப்பச் சொல்லி பொறுமையாக பதிலளித்த அவர் கடைசியாக என்னிடம் கேட்டார். ''ஆமாம், ஏன் தக்காளிய பொண்ணுன்னு சொன்னீங்க'' என்றார்.&nbs (...)

மேலும்

ஆடி வெள்ளிக் கிழமையன்று ஒலிப்பெருக்கியில் அழகிய மயிலே அபிராமி..பாட்டு போட்டிருந்தார்கள்..

அதில் வரும் 'ஒன்பது மணியே அபிராமி.. ஓங்காரப் பொருளே அபிராமி..' என்ற வரியைக் கேட்ட என் ஆறு வயது மகன், ''அம்மா, அபிராமி நைன் ஓ க்ளாக்கா??'' என்று  கேட்டான்..
அர்ச்சகருக்கே சிரிப்பு தாங்கவில்லை..! ! ! 

மேலும்

தமிழகத்தை ஊழலிலிருந்து காப்பாற்ற ஒரு வழியுண்டு.


ஊழலை சட்டபூர்வமா ஆக்கிடுங்கப்பா....! ! !???

மேலும்

நான் மருத்துவ மாணவியாக இருந்தபோது இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கதை கவிதைகள் எழுதுவேன். அப்போது அந்த சங்கத்து உறுப்பினர்களால் மிகவும் ரசித்து பாராட்டப்பட்ட கதையிது..! அப்போது அதாவது 1980 களில் இந்த சிந்தனையும் சில சொல்லாடல்களும் புதுமையாகவும் துணிச்சலாகவும் இருந்ததாக பாராட்டப்பட்டேன்..
.............................................................................................................................................................................................................
பத்தி வித்த தர்மம் - வட்டாரத் தமிழ் கிண்டல் குட்டிக் கதை.


கிடுகு கதவைத் தள்ளிக்கிட்டு வெளியே வந்தா ராக்காயி. “தண்ணி வண்டிய வரக் காணோமே? ”

அவ பாத்த நேரமே தண்ணீ லாரி வந்து தெரு முக்கு சின்டெக்ஸ் டாங்க்கைரொப்பத் தொடங்குச்சு...

 “அம்மாடிஆத்தாடி... இன்னும் கொஞ்ச நேரத்துல சனம் கூடிடுமே? ”அவசர அவசரமாக தண்ணீ வேலைங்களை முடிச்சு பாத்திரங்களை காலி பண்ணஆரம்பிச்சா ராக்காயி.. 

சின்டெக்ஸ் ரொம்பவும், தண்ணீ லாரி திரும்பிடுச்சு....

ராக்காயி சில பிளாஸ்டிக் குடங்களைத் தூக்கினா. அதுல அந்த மஞ்சக்குடம் ஓட்டை விழுந்து ஓரடி நீளத்துக்கு தண்ணீயப் பீய்ச்சியடிக்கும்.. சின்ன ஓட்டைக்காகஅம்மாம் பெரிய குடத்தை குப்பையில தூக்கிப் போடுற அளவுக்கு ராக்காயி ஒண்ணும் கோடீஸ்வரிஇல்ல..? ? ! !

ராக்காயி சோப்படைச்சு பாத்தா.. புளியடைச்சுப் பாத்தா.. ஓட்டைஎதுக்கும் மசியல. குடத்து தண்ணிய அண்டாவுல ஊத்திட்டு குடத்தை கவுத்தா, அவ மகனுக்குஅதுதான் சேர்..!

நெஜத்துக்கு அந்த பிளாஸ்டிக் குடம் ரொம்ப உதவியாத்தான் இருக்கு...! .கை சேறானால் அப்படியே கழுவிக்கலாம்.. மூனாப்பு குடிசை மலர்விழியக்கா பொறம் பேசும்போதுபிடிக்கிற மட்டும் கேட்டுட்டு பேச்சை முடிக்கணும்னா பிளாஸ்டிக் கொடத்து ஓட்டைய அவ பக்கம்திருப்புனா போதும்.. சல்லுன்னு நோஞ்சான் கைப்புள்ள அடிக்கிற மாதிரி தண்ணி அவ இடுப்புலபட்டுடும்.. அப்புறமென்ன? “ சரி, சரி,எனக்கு இன்னாத்துக்கு மத்தவங்க வெவகாரம்..! தலைக்கு மேல சோலி கெடக்குது, வாரன்..! ” ன்னு அக்கா ஓடிப் போயிடும்..!

 ஆனா, தண்ணி நிக்க மாட்டேங்கு..  

“இன்னாமே,ஒரு புது கொடம் வாங்கியாந்து தரக் கூடாதா? ” ன்னுஅன்னிக்கு “புருசன்பயல் ” நல்ல மூடில் இருக்கச்சொல்ல, ராக்காயி கேட்டா.     “ஓட்டைவிழுந்துடுச்சின்றேன்.. 

“நீ பத்திவித்த தர்மப்படி நடக்கிறவொ-ன்னா ஓட்டை தன்னால அடையும்மே.. ”

புருசன்காரன் சொல்லிட்டு தூங்கப் போயிட்டான்....
 
அத்த தான் ராக்காயியை குழப்பிச்சு....

 “அய்யே,பத்தி வித்த தர்மத்துக்கும் இத்த ஓட்டை கொடத்துக்கும் இன்னா கனெக்சனு?” 

”அப்பால அந்த சேரிக்கு ஒரு சாமியார் வந்தாரு.. சக்தி வாய்ந்த சாமியார்..! நெறைய யானம்..!

ராக்காயி கேட்டாப்பல.. “சாமி..பத்தி வித்த தர்மம்னா இன்னா? ”

சாமி இன்னொரு வாட்டி கேட்டு வெளங்கிகிட்டார்.. “ ஓ ... பதி விரதா தர்மமா? அது ஒண்ணுமில்லே..ஒன் புருசனை மட்டுமே மனசில வச்சு கொண்டாடுற அளவுக்கு அவன் நடந்துக்குறதுதான் பதி விரதாதர்மம்..! ” சாமியார் சொல்ல, ராக்காயி ஆச்சரியப்பட்டா..! 

“நா இன்னாவோநெனச்சேனே..! இவ்ளோ சிம்ப்பிளா? ”

 அன்னைக்கு கொடத்த தூக்கச் சொல்ல, “நா பத்தி வித்த தர்மப்படி நடக்கறாங்காட்டியும்இந்த ஓட்டை அடைஞ்சு போகட்டும் ” னா..

அவ சொல்றதுக்கு முன்னாடியே ஏதோ தண்ணியில கெடந்த தூசு மாட்டினதாலஓட்டை அடைஞ்சி போயிருந்தது...! ! !  

................................................................................................................................................................................................................  

மேலும்

நடமாடும் நதிகளின் தாக்கம் 

நடமாடும் நதிகளின் அணிவகுப்பில் மார்ச் ஐந்தாம் தேதி என் ஹைக்கூவை  பதித்தேன். அன்றிலிருந்து இன்று வரை என் முகப்பு பக்கத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

முகப்பை பார்வையிட்டவர்கள் என்ன நினைத்து பார்த்திருப்பார்கள்?

இவ்வளவு மோசமான ஹைக்கூ எங்கிருந்து வந்தது என்று பார்த்திருப்பார்களோ?  
 

மேலும்

“கனவே கலைந்து போ ” என்ற எனது தொடர்கதையின் நான்காம் பாகம் இரவு இரண்டு மணிக்கு நடக்கும். அந்த நேரத்தின் சூழ்நிலையை உள் வாங்க இரவு இரண்டு மணிக்கு தனியாக உட்கார்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்தேன்.  eகலப்பை போட்டு டைப் செய்து கொண்டிருந்தபோது “ஆ” எழுத்து ரிலீஸ் ஆகாமல் நின்று விட்டது. அவ்வளவுதான். இரண்டு பக்கத்துக்கு ஒரே ஆ...  ஆ.. ஆவாக நிற்காமல் மானிட்டரில் ஓட ஆரம்பித்து விட்டது....! பிறகு ஆ”வின் தலையில் இரண்டு போட்டு நிறுத்தினாலும்,  சே..! நன்றாக பயந்து போனேன்.....!  

மேலும்

கணினி அனுபவம் அருமை நன்றி 08-Mar-2016 5:48 am
நல்ல ஐடியாதான். நன்று தோழமையே. 07-Mar-2016 11:02 am
ஹ ஹா.. இதை வைத்து கூட ஒரு கதை எழுதிவிடலாமே தோழமையே..?!! கிழக்கு பதிப்பகத்தின். ”nhm writer ” உபயோகித்து பாருங்க. 06-Mar-2016 12:54 pm

மருத்துவத்துறை சீரியஸானஒரு துறை என்றாலும் ஈடுபடுபவர்களைப் பொறுத்து நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது.ஒரு இளம்பெண் காதல் தோல்வியில்பேகான் பெய்ட் குடித்து அட்மிட் ஆனாள். அவளை வென்டிலேட்டரில் போட்டு செயற்கை சுவாசமளித்துசெமத்தியாக மெனக்கெட்டோம். ஒரு வழியாக அவள் நார்மலானதும் வார்டுக்கு மாற்றினோம். பொதுவாகஇம்மாதிரி ஆட்களுக்கு மனநல வைத்தியரைக் கொண்டு ஒரு கவுன்சிலிங் கொடுத்து அனுப்புவோம்.மனநல வைத்தியரிடம் ஒரு பாய்சன் கேஸ் என்று மட்டும் சொல்லியிருந்தோம். என்ன பாய்சன் என்று சொல்லவில்லை. சைக்கியாட்ரிஸ்ட் அதிகாலை ஆறரை மணிக்கே வந்து விட்டார். அந்த இளம்பெண்  அந்த நேரத்தில் எங்கள் மருத்துவமனை காண்டீன் காபியை மட்டும் சாப்பிட்டிருந்தாள். ஆச்சா..


இப்போது அவர்களுக்குள்நடந்த உரையாடல்:

டாக்டர்:  என்னம்மா சாப்பிட்டே?

இளம்பெண்: காண்டீன் காபிசார்..

டாக்டர்: காபி சாப்பிட்டதுக்கா வென்டிலேட்டர்ல போட்டாங்க? அவ்வளவு மோசமாயிடுச்சா காண்டீன் காபி? யாரும்மா காண்ட்ராக்டர்?

நர்ஸ் : சார், அது மூட்டைபூச்சி மருந்து...

டாக்டர்: மூட்டை பூச்சி மருந்துக்காரனையா காண்ட்ராக்டரா வச்சிருக்கீங்க?

அந்த இளம் பெண்ணே சிரித்துவிட்டாள்.

டாக்டர்: ஆமா, எதுக்கு மருந்து சாப்பிட்டே?
பெண் மௌனம்.

டாக்டர்: காதல் தோல்வியா?  என்னவோ காதல் தோல்வி சோகமான விஷயம்கிற மாதிரி மருந்து குடிச்சிடறீங்க.. காதல் வெற்றி அதை விட பெரிய சோகம்கிறது எங்களுக்கில்ல தெரியும்? உனக்காவது கொஞ்ச நாள் அவஸ்தை.. எங்களுக்கு  வாழ்நாள் முழுக்க அவஸ்தை.. இனிமே மருந்து சாப்பிடுவே?

இளம்பெண் : ஜென்மத்துக்கும்  மாட்டேன் சார்.. 

இன்னொரு சுவாரசியமான கேஸ்.

குடும்பத் தகறாரில் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். என்ன சாப்பிட்டார் தெரியுமா?

கொசுவர்த்திச் சுருளை பிரில் இங்க்கில் முக்கி, தின்றிருக்கிறார்.. ! ! ! ! 

மேலும்

கொசுவர்த்திச் சுருளை பிரில் இங்க் ///// இந்தக் காம்பினேஷன் கொடுக்கும் சுவையை ஒரு நிமிஷம் முன்னாடியே கற்பனை பண்ணி பார்த்திருந்தா , தற்கொலை எண்ணத்தைக் கை விட்டிருப்பார் அவர் ... :) :) 04-Mar-2016 8:33 pm
மருத்துவத்துறை நகைச்சுவை ; பாராட்டுக்கள் தொடரட்டும் மலரும் நினைவுகள் Illustrated Weekly Kushwanth Singh Jokes , Our Doctor jokes 17-Feb-2016 2:13 am
ஹா ஹா ஹா.. பாய்சன் கேஸ் கூட புத்திசாலின்னு ஒத்துக்கலாம் . இந்த கொசுவர்த்தி கேஸ் வெடியா வெகுளியான்னுதான் புரியல. மருத்துவத் துறையில் சிரிக்க வைத்து கூட நோய் தீர்ப்பார்கள் என்பதில் பெருமிதமே. நன்றி டாக்டர். 16-Feb-2016 6:41 pm
ஹா ஹா!!! 16-Feb-2016 2:01 pm

கஸல் கவிதைகளில் பெரும்பாலும் காதலையும் மரணத்தையும் கோத்து எழுதுவது சுவை சேர்ப்பதற்காக என்று நமக்குத் தெரியும்..  காதல் வயப்பட்ட ரெண்டும் கெட்டான்கள் இதை எந்தளவு உணர்ந்திருப்பார்கள் என்று தெரியவில்லையே? மூட்டை பூச்சி மருந்து, கரப்பான் கொல்லி எல்லாம் மிகச் சுலபமாக கடைகளில் கிடைக்கிறது..!  ராத்திரி இரண்டு மணிக்கு அவசரப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் மருந்து குடிச்ச இளவட்ட கேஸ்கள் சார்பில் ஒரு வேண்டுதல்...! காதலையும் வாழ்க்கையையும் இணைத்துக் கொஞ்சம் எழுதுங்களேன்..!    

மேலும்

டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம்
எப்படியெல்லாம் தாறுமாறாக பரவியிருக்கிறது என்பதற்கு இந்த
ச் சம்பவம் ஒரு உதாரணம்...



டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்
தனது ஏழு வயது மகளை என்னிடம் அழைத்து வந்த நண்பரொருவர் கையோடு
ஒரு டப்பியை எடுத்து வந்து நீட்டினார்..
அதில் நான்கைந்து கொசுக்கள் செத்துக் கிடந்தன..!



அருணை ஜெயசீலி..    

மேலும்

மனிதக் கடியில் ஒரு வசதி உண்டு. திருப்பிக் கடிக்கலாம்.. பல்லாலும், பின்னூட்டமிட்டும்... ஹி.. ஹி.. ( சில சமயம் நான் இப்படித்தான். பயங்கர சுறுசுறுப்பு... உடனே பதில் எழுதி விடுவேன்..) நன்றி நண்பரே . 11-Feb-2016 10:29 am
நாய், பாம்பு, தேள் ,விசப் பூச்சி கடித்தால் இது போல கொண்டுவந்தாலும் நல்லதா? எங்கள் கிராமத்தில் மனிதனும் கடிக்கிறானே ! என்ன செய்ய? 23-Jan-2016 11:58 pm
சரியாகச் சொன்னீர்கள்.. அப்படி நினைத்துத்தான் செய்திருக்கிறார்.. டெங்கு காய்ச்சலை கண்டு பிடிக்க ரத்தப் பரிசோதனைதான் சரியான வழி.. நல்லவேளையாக அவர் மகளுக்கும் காய்ச்சல் குணமாகி விட்டது; அந்த கொசுக்களும் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் அல்ல.. ஏடிஸ் கொசுக்களாக இருந்தாலும் அவற்றின் உடம்பில் வைரஸ் கிருமிகள் இருக்க வேண்டும்... அப்படிப்பட்ட கொசுக்களால்தான் ஆபத்து வரும்..! இது இவ்வாறு இருக்க, பாதுகாப்பான வழி - கொசுக்கள் உங்கள் குழந்தைகளை கடிக்க விடாதீர்கள்... 21-Nov-2015 8:05 pm
பாம்பு கடித்தால், அந்தப் பாம்பைக் கொன்று டாக்டரிடம் எடுத்துச் செல்லச் சொல்வார்கள்.. அப்படியானால்தான், அது விசப் பாம்பா, சாதாப் பாம்பா, என்ன மருந்து கொடுக்கலாம் என்று டாக்டர் தீர்மானிக்க முடியும். அப்படி நினைத்துச் செய்திருப்பாரோ ....! 21-Nov-2015 7:16 pm

நண்பர் சந்தோஷ் குமார் சென்னைத் தமிழ் அகராதியை
வெளியிட்டார். இது என் குழந்தைகளின் பிரத்யேக மழலை அகராதி..



பாட்டா- பேண்ட்



கலர் வா வா - பௌர்ணமி நிலவு



முண்டு ஃபிரி – மிளகு



பான்ஃபிரி – எருக்கு இலை



கொட்டம் பட்ட நுண்டு – கட்டம் போட்ட துண்டு.



மாயா, காஞ்ச்சு - பேய், பூச்சாண்டி



சின்ன பிரஷ் மவம் – பனை மரம்



பெய்ய பிரஷ் மவம் – தென்னை மரம்



ஹேர் டைல் மவம் – ஆலமரம்



ஜூமேசர்- பென்சிலை அழிக்கும் ரப்பர்



மிஸ்கி – மிக்ஸி



படவர் - பவுடர்



செப்பட்டர்- செப்டம்பர்



எளனி மக்கு – கொட்டாங்குச்சி



கம்பர் – கம்யூட்டர்



அப்ப பப்ப பப பபபை – அப் அபௌ த வேல்ட் சோ ஹை...
(ரைம்ஸ்)



சட்ட தீம்பி பாக்குது – சட்டை உள் பக்கம் போட வேண்டியது
வெளிப்பக்கமாக இருக்கிறது..



வீடு தேஞ்சிடுச்சா? – வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சிடுச்சா?



அச்சவழாய நம - அருணாச்சலேஸ்வராய நமஹ.



சுப்பிக் கொடு – குழம்புக்காயை வாயிலிட்டு உறிஞ்சி,
காரமில்லாமல் கொடு



குப்பை – குட் பாய் 

மேலும்

நமக்குப் புரியாவிட்டாலும், அந்த மழலைப் பேச்சுகளுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் இணை எதுவுமாகாது. இதைப் பதிவுசெய்த என் அன்புத்தோழரின் குழந்தை மனதுக்கும், பதிவிற்குக் காரணமான அந்த அன்னைக்கும், அவரது குழந்தைக்கும் நன்றிகள் பற்பல. 18-Nov-2015 8:01 pm
ஹா ஹா.. மழலை அகராதி.. ரசனை. ரசனை.. ரசித்தேன். நான் சென்னை அகராதி வெளியிடவில்லை. தோழர் பிரபாவதி வீரமுத்துவின் பதிவை பகிர்ந்தேன். அவ்வளவே 18-Nov-2015 2:06 pm
மேலும்...

மேலே