எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன ஒருஆணவப்  பேச்சு .......Rk நகர் தொகுதியில், விஞ்ஞான திருடன் என்று நீதிபதி சர்க்காரியா வால் பாராட்டப்பட்ட கருணாநிதியால் கட்டிக் காப்பாற்றப் பட்டுள்ள குடும்ப கழகத்தின் சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெறுவார்களாம்......அந்த கழகத்தின் செயல் தலைவரின் பேச்சு இது......இவ்வாறு பேசுவதிலிருந்தே தெரிகிறது அவர்களின் தோல்வி............ஏதோ தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் இவர் பின்னால் அணிவகுத்தது போலவும்......பரிசுத்த பிதாமகர் ஆகிவிட்டது போலவும் பீற்றிக் கொள்ளும் இவருக்கு  இதே தமிழ்நாட்டில் இவரிலும் புகழ்பெற்றவர்கள் தோற்றுப் போனதை நினைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.....இரண்டு குடும்ப ஆட்சி கூட்டங்களையும் ஓரங்கட்டி  தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை திரு.கோபாலபுரமும் திருமன்னார்குடியும் ஏப்ரல் 13  முடிவு தேதி அன்று உணர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.புது விடியல் துவங்கி இனி எங்கும் பன்னீர் புஷ்பங்களே.......

மேலும்

அப்பா

அப்பாவின்
விரல்பிடித்து நடந்தபோது
 வராத ஆதங்கம்
மகனின் விரல் பிடித்து
 நடக்கும்போது வெளிவருகிறது
 அப்பா
எவ்வளவு
பொறுமையானவர்.

சுசீந்திரன்.

மேலும்

வருத்தப் படாத வாலிபர் சங்கம்

ஒருபாடு மச்சங்களை
உள்வாங்கி சுத்தமாகிறது ஒரு சமுத்திரம்
இவனின் சின்ன மனக்குளமட்டும்
இன்னும் சில்லறைத் தனங்களில் நிரம்புகிறது
கஞ்சனென்றும்
 காமப்  பிசாசென்றும் கடிந்ததற்காய்
 துஷ்டனென்றும்
துன்மார்க்கக் காரென்றும் துப்பியதற்காய் 
மூர்க்கனென்றும்
 மதவெறியனென்றும் மறுதலித்ததற்காய்
 கனலேந்திய
 கருப்பு நெஞ்சம்
மனிதனென்று யாரும் அழைக்கவில்லையன்று
 வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை
 ஒரு நாளும்.

சுசீந்திரன்.

மேலும்

தீபாவளி

 மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்
மவுன விரத நாள் .

சுசீந்திரன்.

மேலும்

தேடாத பொழுதுகளில்
கூடாகிப் போகிறேன்-உன்னைக்
கூடாத பொழுதுகளில்
காடாகிப் போகிறேன்.

 பாழாகிப் போகிறேன்
வீணாகிப் போகிறேன்
நாராகிப் போகிறேன்
நூலாகிப் போகிறேன்.

சூடாத மல்லிகை
பூவாக வாடுகிறேன்
ஆடாத மேடை
அகலாக ஆடுகிறேன்.

நாடாத நாடாக
நான் தூர இருக்கிறேன்
கூடார கோலாக
குறுகியே கிடக்கிறேன் .

 நாடாளும் மன்னனுக்கு
நான் ராணி ஆகவேண்டும்
வாளாளும் தென்னவனை
வேல்விழியில் கொல்லவேண்டும் .


சுசீந்திரன்.

மேலும்

ஞாபகப் பட்டாசுகள் கொழுத்திய
 வெளிச்ச தேடலில்
தூரத்தில் வறண்ட பக்கங்கள் வாடின தாகத்தில்.

சிலேபி மீன் துண்டமும்
சோளச் சோறும் தாங்கிய
பித்தளை வாளிகள்  ஆடின வெட்கத்தில் .

அரும்பு மீசை முளைக்கத் தொடங்கிய
அப்போதைய பள்ளி பதினாறில்
வளர்ச்சி  அங்கங்களின்
வாலிபம் மறைக்க முடியாத
பள்ளிச் சீருடையின் அரைக்கால் நிக்கர்
அழுது புரண்டது
அழகியதொரு நிக்கருக்காய்.

எந்தை என்ற புண்ணியவான் தோண்டிய இந்த நதி
இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது
எறிந்த எச்சங்களையும் 
எரிந்து மிஞ்சிய அஸ்திகளையும் சுமந்து கொண்டு.

நான் வானமின்றியும் நான் நாணமின்றியும்
ஆவின் அசைபோல
அந்நாட்களை அசை போடுகிறேன்
அஸ்திவாரமில்லாத திரிசங்கு உலகத்தில்
வாழ்ந்து கொண்டும் 
அந்நாளில் என்னைப் போர்த்திய வறுமைச் சட்டை
கழற்ற முடியாமலும். 

இந்த உலகம் எவ்வளவு அழகானது
அனுபவிக்கத்தான்
பணம் என்ற பட்டாம் பூச்சி இருந்திருந்தால் .

சுசீந்திரன்.

மேலும்

புண்ணாற்றுப்படை
 
மலை முகடுகளில் முகிலிடை
படுத்துறங்கிய  நேசம்
என்னுள் பிரவகிக்கிறது.
நரனும் மாமிசனும் என்னை பிய்த்துத்தின்ன
 வரிசையில் நிற்கிறார்கள் 
காகிதத் தாள் வீரர்கள்
கணம் தோறும் காப்பாற்றி
தியாகி ஆகிறார்கள்
என்னை தியாகி ஆக விடாமல் .
வெல்ல பெட்டியிடை 
ஊறிச் சென்ற எறும்புகள்
மொத்தம் திரும்பி வந்தன சொந்த ஊர்
எனக்கான நான்கு பேர்கள்
எப்போதும் வரலாம்
அப்போதாவது அந்த நால்வரில் ஒருவனாக
அன்பான வாசகனே
உன்னை ஆராதிக்கிறேன்.
அகம் துறந்து புறமழித்து திரும்பிப் பார்
அருகாமையில் நானிருப்பேன் .
அப்போது அது அரும்புகள் பனிசொட்டும்
அதிகாலைப் பொழுதாக இருக்கும்.

சுசீந்திரன்.

மேலும்

மாடமும் மங்கை நாணமும் -சிற்பி
கூடமும் ஆன்றோர் பாடமும் யாதும்
பார்க்க ரசிக்க கேட்க பயனே- மேவும்
ஆர்க்கு மருவி சூழ்வள நாடனே !!

தானமும் தண்ணிசை கானமும் -நீர்
பானமும் காயம்காக் கும்ரத்த தானமும்
கொடுத் துதவகோடி நலமே -தேனெடுத்
தெடுத்து வண்டுசோகை புக்கும்கா சூழ்ஊரனே !!

சுசீந்திரன் .       காசூழ் =சோலைகள் சூழ்ந்த

மேலும்

விரிவான விளக்கம் பதிவு செய்தால் அனைவருக்கும் எளிதாக புரியும் .பயன் அடைய முடியும் . 10-Jun-2016 6:20 pm
தங்கள் கவிதை போற்றுதற்குரியது பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கியப் பயணம் நன்றி .. . 10-Jun-2016 6:12 pm

எடக்கு   மடக்கு  

நிலவில்      
பாட்டி      வடை சுடுகிறாளென்று   
 கதைசொன்ன      அம்மாவிடம்  
குழந்தை கேட்டது
ஆம்ஸ்ட்ராங் 
வடை சாப்பிட்டாரா.

சுசீந்திரன்.

மேலும்

இது இருபத்திரண்டாம் நூற்றாண்டு.

மரணச்    செறிவில்  மாறிப்  போகும்  மனம்   
அஞ்சறைப்   பெட்டிக்குள்   ஒளித்து  வைத்த 
ஐந்து  ரூபாயைக்   காணாமல்  அடித்துக்  கொள்ளும் .
    
வந்துவந்து     வளைகாப்பு  நடத்தும்  அலையிடம்      
கரையின்   வேத   உபநிடதங்கள்
கரிச்சான்   குருவிகளாய்  
கவனிப்பாரற்று     போகும் .
 
மலர்களின் வாச   வனாந்தரத்தில்  
சொக்கிப்  போய்  சுகந்தம்  கண்டவரும் 
எதுகை   மோனையென்று
எதையோத்  தேடி  நிராகரித்தார்கள் .
 
அடுத்த   நாள்  செய்தித்  தாளில்
நேற்று  வீசப்பட்ட    அந்த   சுகந்த   மல்லிகைக்கு  
மலர்களிலே    சிறந்ததென்று அங்கீகரிக்கப்   பட்டதாய்  
தலைப்பு   இருந்தது .
 
இன்னும்   இவர்கள்
இந்த குடிசைக்கு அரிக்கேன்   விளக்கையே   
அமர்த்திப்  பார்க்கிறார்கள்   
அவசர    உலகம் புரியாதவர்கள்
அழகு எதுவென்று  தெரியாதவர்கள்.

சுசீந்திரன் .

மேலும்

மேலும்...

மேலே