எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகாய் இருக்கிற யாவும்
உன்னையே நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவு படுத்தும்
யாவுமே அழகாய்த்தான் இருக்கின்றன

-இது தபூ சங்கர்
அவர் காதலிக்காக சொல்லிருப்பார்...
புதுசா எதாச்சும் சொல்லு.......!!

அப்போ அதை நான்
வழிமொழிகிறேன்னு மட்டும்
சொல்லிக்கறேன்........ப்ளீஸ்!!??????

பொழச்சு போய்க்கோ...!!

மேலும்

நன்று 07-Apr-2015 10:40 pm
உங்கள் கவி அழகு தோழியே........!! வழி மொழிந்தது நானல்லவே என்னவன்...!! பாவம் அவன் மன நாட்டில் கவிதைப் பஞ்சம் போலும். வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன் தோழி.....!! 07-Apr-2015 10:15 pm
நன்றி தேவ் 07-Apr-2015 10:14 pm
எதற்கு வழி மொழிய வேண்டும் புதிதாக மொழியலாமே நித்திரை கொள்ளாத நினைவுகள் கனவாய் விரிகின்றன அந்தக் கனவுக்ளில் எல்லாம் நீயே வருகிறாய் 07-Apr-2015 10:10 pm

விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தாய்

பெண் மீன் விழியில்
எனையே *********.................!!

மேலும்

தொலைத்தாய் !! 07-Apr-2015 9:32 pm

நான் நீயாகித்
தோற்கிறேன்
நீ நானாகி
வெல்கிறாய்
பரிசு
இருவருக்குமா,,,?

மேலும்

ஆம் 50 50 நீ பாதி நான் பாதி பரிசு நம்மிருவருக்கும் சரி பாதி அன்பே அன்புடன், கவின் சாரலன் 31-Mar-2015 7:47 am
பகிர்ந்தளிக்கப்படும் பரிசு இருவருக்கும் சர்சமமாய் .....ஆம் 31-Mar-2015 7:07 am
வார்த்தைகள் குறையக் குறைய கவிதையின் வீரியம் அதிகமாகிறது .........! அதற்கு இந்தக் கவிதை ஒரு நற்சான்று ......! 31-Mar-2015 2:23 am
ரஸ்தாளி கதலி அல்ல...மறப்போரை/ மறுப்போரை மன்னிப்போம். குருவியும் பருந்தும் பறக்கிறது...இறக்கிறது. வெற்றி தோல்வி பறப்பதா இல்லை இறப்பதா... எனது ஆய்வில்...முகம் வெற்றி முதுகு தோல்வி ஒட்டிப் பிறந்தவைகள் பிரிக்க முடியாது வள்ளுவன் குறளா/ அவ்வை குறளா...அவரவர் வயிறு பசிக்கு அவரவர் புசிக்கிறார்கள் . அவ்வளவே ! 31-Mar-2015 2:21 am

கிழக்கு வெளுக்காத
நாளெனினும்
வழக்குத் தொடுக்காத
நாளில்லை
இப்பாரினிலே


காதலோ
காமமோ
உறவோ
துரோகமோ
பாவிகளின் கால்தடங்கள்
கொண்டே அஸ்தமிக்கிறது........!!




புதைந்தே கிடக்கிறது
மன்னவன் தாலி
அழுதே விடிகிறது
தேவியவள் வீதி

மேலும்

ஒரு சகாப்தம் முடிந்தது........!!

விரிந்த விழிகளுக்குள்
சுருங்கிக்கொண்டது
வானம்
விளக்கிச் சொல்ல
ஏதுமில்லை

மேலும்

என்னைத் தேடாதீர்...........!!

நாட்குறிப்பின் பக்கங்களில்
பேனா உருகும்போது
மனம் லேசாகிறது

அதே நாட்குறிப்பின்
பக்கங்களைப் புரட்டும்போது
மனம் கனத்து
கண்கள் குளமாகிறது

எனைத் தேடாதீர்
என எழுதிவைத்து விட்டு
வானம் தேடி
மலை உச்சிக்கோ
பூமி தேடி
பாதாளத்திற்கோ
பயணப்படப் போகிறேன்
உங்களுக்கும்
நல் கவி தருகிறேன்
எனைத் தேடாதீர்.........!!!

மேலும்

எண்ணத்தில் எதற்கு இது... ? ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று இது...கவிதை பக்கங்களிலே பதியலாமே. 28-Feb-2015 4:48 pm
ஈரோடு தமிழன்பனின் 3பெயர்களும் முகவரிப் புத்தகமும் எனும் கவிதை நினைவில் .... 28-Feb-2015 4:39 pm
நல்ல கவி தருபவர் எங்களுடன் . ஏன் தேட வேண்டும்? 28-Feb-2015 4:31 pm

ஏதேதோ எண்ணம்

நான் விட்டுச் சென்ற
இடத்தில் இன்னும் நிற்கிறாய்
நான் தான்
தொலைந்துவிட்டேன்
மன்னித்து விடு....!!

கொஞ்சம் மூச்சு
விட்டுக்கொள்கிறேன்

உரக்க உன்னோடு பேசாமல்
மௌனமாகக் கண்ணோடுப் பேசியதில்
பிராண வாயு பற்றாக்குறை

கொஞ்சம் மூச்சு
விட்டுக் கொள்கிறேன்

வரிக்கு வரியோ
வார்த்தைக்கு வார்த்தையோ
இடைவெளி விட விருப்பமில்லை

நீண்ட இடைவெளிக்குப்பின்
எழுதும் இக்கடிதத்தில்


நிலா
வீதி உலா வரும்
பெரு வெளியெல்லாம்
கண்ணாடி சில்லுகள்
வழியெல்லாம் இரத்தப்
படிமங்கள்

பாதங்கள்
கடந்த பாதையதன்
பயணக்களைப்பின்
புன்முறுவல்கள்
துளித்துளியாய்க் கரையக்
(...)

மேலும்

உரக்க உன்னோடு பேசாமல் மௌனமாகக் கண்ணோடுப் பேசியதில் பிராண வாயு பற்றாக்குறை // உரக்க நீ பேசியிருந்தால் உரைத்திருக்கும் ஒரு முறையாவது கண்ணோடு மௌனம் வீசியதால் பிராணவாயு பற்றாக்குறை எனக்கு // எதிராளிக்கே பிராணவாயு அதிகம் தேவைபடுகிறது , நாம் மௌனத்தில் பேசிச் செல்லும் போது ... ஒவ்வொரு வரியும் வருடுகிறது மனதினை .. தோழர் ஜின்னா அவர்கள் கூறியது போல் , கவிதை பிரிவில் கொண்டு சேருங்கள் .. இரையாகட்டும் , கவிப் பிரியர்களுக்கு .. 20-Feb-2015 1:15 pm
கவிதை கலந்கடிக்காதீர்கள் = கவிதையை கலங்கடிக்காதீர்கள் 20-Feb-2015 9:55 am
இவ்வளவு நேர்த்தியான கவிதையை எண்ணத்தில் போட்டு கவிதை கலந்கடிக்காதீர்கள் தோழமையே... தயவு செய்து கவிதை பிரிவில் பதியுங்கள்... எனக்கு ஐந்து புள்ளிகள் சொடுக்காமல் தூக்கம் வராது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Feb-2015 9:37 am
இதயம் பூட்டியே கிடந்து ....சாளரம் மட்டும் திறந்தே இருப்பதால் ....இது போன்ற வலிகள் ....கூடும் . ஏதேதோ எண்ணம் பலரின் இதயத்தை திறக்க வைக்கிறது வித்யா . அருமை 20-Feb-2015 7:51 am

பூத்துக் கொண்டே இருக்கிறது................!!!

விட்டுப்போன இடத்தில் பட்டுப்போன மரமாய் காத்திருக்கும் இதயங்களை ஈரப்படுத்திப் பூக்கச் செய்தது சிறு சாரல் மழை. ஒரு சாமக் கோடாங்கியின் குரல் கேட்டுக் கொண்டு விழித்திருந்தது அன்றைய இரவில் செவிகள் மட்டும். யாரையோ புறக்கணித்து விட்டு விசும்பிக் கொண்டிருந்தது காற்று. சொல்ல வார்த்தைகளற்றுப் போகும் போது மௌனம் புதைத்து அழும் விழி... வலிகள் நிரப்பிய மரபுக் கோப்பைக்குள் உற்சாக பானம்.. அருந்திக் கொண்டிஉந்தது கடவுள். விண்மீன் மழையாய் பொழிய வானம் குடைதேடிக்கொண்டு பூமி வந்ததாய் கதை எழுதுகிறேன்.... நிலவு கோபித்துக் கொள்வதாய் முடிக்கிறேன்.

மேலும்

நிச்சயமாக, நன்றி அண்ணா,, 19-Feb-2015 10:46 pm
கதை எல்லாம் இல்லை ஐயா... என் எண்ணத்தின் வெளிப்பாடுகள் அவ்வளவே. வரவிலும் உரிமையான கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் ஐயா,, 19-Feb-2015 10:45 pm
தங்கள் வரவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஐயா... உங்கள் வரியசைவுகள் என் எண்ணங்களை பிரகாசிக்க வைக்கின்றன. 19-Feb-2015 10:44 pm
பூத்துக் கொண்டே இருக்கிறது................!!! விட்டுப்போன இடத்தில் பட்டுப்போன மரமாய் காத்திருக்கும் இதயங்களை ஈரப்படுத்திப் பூக்கச் செய்தது சிறு சாரல் மழை. ஒரு சாமக் கோடாங்கியின் குரல் கேட்டுக் கொண்டு விழித்திருந்த , அன்றைய இரவில் செவிகள் மட்டும். யாரையோ புறக்கணித்து விட்டு விசும்பிக் கொண்டிருந்தது காற்று. சொல்ல வார்த்தைகளற்றுப் போகும் போது மௌனம் புதைத்து அழும் விழி... வலிகள் நிரப்பிய மரபுக் கோப்பைக்குள் உற்சாக பானம்.. அருந்திக் கொண்டிருக்கும் கடவுள். விண்மீன் மழையாய் பொழிய வானம் குடைதேடிக்கொண்டு பூமி வந்ததாய் கதை எழுதுகிறேன்.... நிலவு கோபித்துக் கொள்வதாய் முடிக்கிறேன். என்னுள் நான் வியந்தப்படியும் விசன விளிம்புக்குள் விழுந்தப்படியும் ... ----------------------------இப்படி இருக்கலாமா தோழர் வித்யா ???உங்கள் எண்ண வீச்சில் உள்ளதா என் வரியசைவுகள் ??? 19-Feb-2015 8:38 am

பாலியல் வன் முறையன்று வரைமுறை வைத்திருக்கிறதாம் உலகம்.......... இதையெல்லாம் எழுத எனக்கு இன்னும் அனுபவம் போதவில்லை. என்ன செய்ய...? கணவனின் அத்துமீறல்கள் மனைவியின் விருப்பு வெறுப்புகளை சார்ந்தது என்பதை இவ்வுலகம் அறியும் வரை பாலியல் வன்முறைக்கு அர்த்தம் தெரியாதவர்களாகவே கருதப்படுவர்.............!!

மேலும்

உண்மைதான் நட்பே 23-Jan-2015 10:56 am
கணவனின் அத்துமீறல்கள் ? தவறாக இருபதாக தோன்றுகிறதே ... 22-Jan-2015 8:47 pm
சூப்பர் டா ....... 3 வரிகள் இருந்தும் அப்பட்டமான உண்மைகள் இது ......... விரிவாய் விளக்கமாய் நெறைய இதை பற்றி பேசினால் இக்கருத்து சிறப்புறும் ......... 22-Jan-2015 8:39 pm
அருமையான விளக்கம் தோழமையே... உண்மை பெண்மை பற்றி பேசுகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Jan-2015 8:34 pm

வரைமுறைகள் தாண்டி
கைகள் நீண்டபோது
தத்துவங்கள் தடுமாறி
நின்றன.........
கவிதைகள் மண்டியிட்டன
அங்கும் ஒரு கவிஞன்
ஆத்திகம்
பேசிக்கொண்டிருந்தான்
நீயோ எனக்கு
நடைவண்டி
பழக்கிக்கொண்டிருந்தாய்

நீ என்பது
காதல் என்றிருந்திருந்தால்
காதலுக்கு முன்
காதலுக்கு பின்
என என்
சுயஅலசல் இருந்திருக்கும்

நீயே
என் வாழ்வான பின்
வாழ்க்கைக்கு முன்
வாழ்ந்ததற்கு பின் என
பிரித்துக் கொள்கிறேன்............!!

இது நீண்ட நாட்களுக்குப் பின் நானெழுதும் உனக்கான பிரத்யேகக் கவி........!!

மேலும்

தத்துவங்கள் தடுமாறி நின்றன........... புத்தனுக்கும்....... 23-Jan-2015 11:50 am
மீண்டும் தொடருங்கள் உங்களது கவியை 23-Jan-2015 10:58 am
மேலும்...

மேலே