நந்தலாலா - குமரி வீசிய வலையில் வீழ்ந்து விட்டாயே நந்தலாலா...! விலைபேச முடியா நட்பை விட்டாயோ நந்தலாலா...! அகம் காணாமல் பறந்து வந்தாய் நந்தலாலா..! முகம் காணும் நேரம் மறந்து சென்றாயோ நந்தலாலா..! தேளாய் கொட்டிய தேவன் நன்றா நந்தலாலா..! தோளை கொடுத்த தோழமை கொன்றா நந்தலாலா..! ஒட்டிய நட்பில் வெட்டியது ஏனோ நந்தலாலா..! வெட்டியதும் குரல் ஒட்டி முட்டியதேன் நந்தலாலா..! வேகம் கண்டுதான் மோகம் கொண்டேன் நந்தலாலா..! நகம் போலென்னை வெட்டி விட்டாயோ நந்தலாலா..! விரலுக்கா? நகதுக்கா? விடுதலை யாருக்கு நந்தலாலா..! பகைமைக்கா? நட்புக்கா? பதில் சொல்வாயோ நந்தலாலா..! விடையறிய தவிக்கின்றேனுன் விடுகதையால் நான் நந்தலாலா..! விடை கொடுத்து வழியனுப்பு என்னை நந்தலாலா..! ---நட்போடு குமரி. உண்மை நட்பு


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வைகள் : 127
1
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே