குழலோன்- கருத்துகள்

அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொல்காப்பியம் என்பது எழுத்திலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட இலக்கணம். அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது. எழுத்தில் உள்ள 'காற்று' என்பது, பேச்சில் 'காத்து' ஆகிறது. அது முயற்சிச் சிக்கனத்தால் ஏற்பட்டது. இலக்கண வரம்பு மீறல் பேச்சு வழக்கில் இயல்பானதொன்று. வந்துகொண்டிருந்தான் என்று எழுதும் நாம், பேசும்போது, 'வந்துகிட்டிருக்கான்' என்கிறோம். அதை இலக்கண வழுவமைதி என்று சொல்லக்கூடாது. அறியாமையால் நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லை! புற்றரை என்பதை புற்தரை என்றும் , முட்செடியை முள்செடி என்றும் எழுதி அதற்கு அமைதி சொல்லத் தொடங்கிவிட்டோம். பிழைநீக்கி நல்ல தமிழில் எழுதப் பெருமுயற்சி தேவையில்லை. இலக்கணத்தை முறையாகப் பயின்றாலே போதும். தமிழ் அறிந்த நல்லோர் அதற்கு வழிகாட்டி உதவுதல் நன்று. அன்புடன்.

வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதற்காகச் சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது. அதுவும் பிரிக்கும்போது, தெண்+ திரை என்று பிரித்தல் பிழையாகும். தெள் + திரை என்பதே தெண்டிரை என்று ஆகும். இராமாயணத்தில் நாட்டுப்படலத்தில் இடம்பெறும் பாடலின் மூலவடிவம் கீழே தந்துள்ளேன். மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும் என்னும் தொல்காப்பிய நூற்பாவே நினைவிற்கு வருகிறது!! பிழையின்றித் தமிழ் வளர்ப்போம்! அன்புடன்,

மருதமாகிற மன்னனின் திருவோலக்கம்

35. தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்
வீற்றிருக்கும் மாதோ!

இனிய நண்பருக்கு, தகவலுக்கு நன்றி! குளிர்ச்சியான தலை என்று பொருள் கொண்டாலும் அதைப் பிரித்து எழுதும் வழக்கில்லையே என்பதே என் ஐயம்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றது;

தண்டலை மயில்கள் ஆட,
தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்
பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -
மருதம் வீற்றிருக்கும் மாதோ.

தண்டலை மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆடவும்;
தாமரை விளக்கம் தாங்க- தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி
நிற்கவும்; கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல
ஒலிக்கவும்; குவளை கண் விழித்து நோக்க- குவளைக் கொடிகளில்
மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்கவும்; தெண் திரை எழினி
காட்ட- நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்டவும்;
தேம் பிழி மகர யாழின்- தேனை ஒத்த மகர யாழ் இசை போல;
வண்டுகள் இனிது பாட- வண்டுகள் இனிமையாகப் பாடவும்; (இவ்வாறு
இசையும் கூத்தும் பொலிகின்ற அரங்கிலே)- மருதம் வீற்றிருக்கும்-
மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது.

எழுத்து வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் நிரம்ப வேறுபாடுண்டு. பேச்சு வழக்குச் சொற்கள் பலவும் இலக்கண வரம்பிற்குள் நிற்காது. காற்று என்பதைக் காத்து என்றுதான் உச்சரிப்பார்கள். இதுபோல வட்டார வழக்குகளிலும் நிறையச் சொல்வழக்குகள் பயிலப்படுகின்றன. பேச்சுக்கு ஏற்புடையதாய் அமையும் அவை எழுத்தில்வழுவெனக் கொள்ளப்படுகின்றன. மரபுவழக்கில் சிலவற்றறை வழுவமைதி என்று கொள்ளலாம். ஆனால், தண் + தலை - என்பது குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலை! அதை தண் தலை என்று எழுதுவது பிழையன்றோ! அதுபோல, முதல் + படி என்பதையும் முதற்படி என்றே எழுத வேண்டும். முதல்படி என்னும் சொல் வழக்கும் உண்டு என்று கொள்வது இலக்கண வரம்புக்கு உட்படாது என்பது என் கருத்து. சொல்வழக்கு என்று கூறி வழுச்சொற்களுக்கு இடந்தந்தால் மொழியில் பல இடர்ப்பாடுகள் தோன்றிடும்! கருதிப் பார்க்கவும். அன்புடன்.

வாழ்த்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி நட்பே!

செயற்பாடு புணர்ச்சிவிதிப்படி அமைகிறது எனின், செயல்பாடு எப்படிச் சரியான பயன்பாடாக அமையும். திருத்திக்கொள்ள வேண்டாவா?

சபதம் என்பதற்குத் தமிழில் வஞ்சினம் அல்லது சூளுரை என்பனவற்றைக் கொள்ளலாம். ஆணை என்பது பொருந்தாது.

அடிப்படையில் அறியாமைதான் காரணம்! இல்லாத காதலைத் தேடும் பொல்லாத மோகம்!

பெண்ணை தன் காதலைப் பேசுதல் மரபன்று! எனினும், உணர்வை வெளிப்படுத்தும் சொல்லாட்சி நன்று.

ஆமாம் நண்பரே, மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கெல்லாம் வித்தாய் அமைவதே ஆசைதான். அதனாலன்றோ, நம் சான்றோர் 'ஆசை அறு' என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆடையின்றிப் பிறந்த மனிதன் ஆசையின்றிப் பிறக்கவில்லை.

சாவின் விளிம்பில் நிற்பதைச் சாகசம் என்று எண்ணும் பேதையர் வாழ்ந்தும் பயனில்லை!! அஞ்சுவ தஞ்சாமை பேதைமை!!

ஆசை குறித்து மனித இயல்பு என்ன தெரியுமா? ஒன்று கிடைக்கும் வரை அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்து, அது கிடைத்தபின் மற்றொன்றை நாடும் மனம். அதுதான் ஆசை கொண்ட மனித மனத்தின் இயல்பு. இந்நிலை உடைமைக்கும் மட்டுமன்று; உறவுக்கும் அப்படித்தான்!!!!

நவம், தசம் என்பவை 9 10 என்று வடமொழியில் பயிலப்பட்டாலும், இந்த வரிசையில் அவற்றைப் பொருத்திப் பார்க்க இயலாது. ஒன்பதின்மர், பதின்மர் என்னும் வழக்கைச் சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.

தமிழில் சொல்லுக்குப் பஞ்சமில்லை; பால்கனி என்றும், உப்பரிகை என்றும், மேன்மாடம் என்றும் பல சொற்கள் உண்டு.

வல்லரசாகும்! ஆனால், அது நல்லராய் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை!!?

ஊக்கத்திற்கு நன்றி உரித்து.


குழலோன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே