அன்புடன் மித்திரன்- கருத்துகள்

உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டதா இல்லையா? உங்கள் பெயர் காட்டப்படவில்லை.

என் உணர்வை தாங்கள் மதிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. உங்கள் உணர்வை மதிக்கிறேன். அதே நேரத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 350 ரூபாய் தினக்கூலிக்கு என்னை போல் வேலை செய்தால் உங்களுக்கு என் உணர்வு புரிந்து இருக்கும். நான் அரசியல் வியாதி அல்ல, இங்கு இரக்கத்தை வேண்டி சாதித்துக் கொள்வதற்கு. தாங்கள் கூறுவது போல் தமிழ்நாட்டில் உண்மையாக உழைப்பவர் கிடையாது. ஆனால், கட்டிடங்கள் உயருகிறது. முதலாளியின் பணப்பெட்டி நிறைகிறது. உழைப்பவர்கள் இவ்வளவு இழிவாக உங்களுக்கு தெரிகிறார்கள். இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவீர்கள் போலும். என் உணர்வை இங்கு எழுத எவர் அனுமதியும் எமக்கு தேவையில்லை. கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

இலக்கணப் பிரியர் ஐயா பழனி ராஜன் அவர்களுக்கு, என் உணர்வை எழுதுவதற்கும், அதை கவிதை வடிப்பதற்கும் எனக்கு இலக்கணம் தெரிந்து இருக்க வேண்டும் என்று என் தமிழ் அன்னை கோபம் கொள்ளவில்லை. நான் இப்படித்தான் இதைத் தான் எழுத வேண்டும் என்று கூறி எம்மை, எம் உணர்வுகளை இழிவு செய்ய தமக்கு உரிமை இல்லை. உங்கள் உணர்வை மதிக்கிறேன். கருத்தளித்தமைக்கு நன்றிகள்.

நன்றிகள் சகோ. சகலமும் அன்பின் படைப்பு.
எனது பார்வை வேறு.
தங்கள் பார்வை வேறு.
மீண்டும் நன்றிகள் அன்பு சகோ.

கண்ணின் மணியாக நினைப்பதெல்லாம் காண முடியாத நிலையில் பிரிந்திருக்கிறது.
உள்ளம் தொட்ட வரிகள்.

கருவறை பந்தம் கல்லறை வரை நெஞ்சில் வாழும்.

என்ன சொல்லியும் மூடர்களின் மனதை திருத்தவது இயலாததாக உள்ளது.

தொடர்ந்து எழுதுங்கள்.

சாபங்கள் விரைவில் நிறைவேற்றப்பட்டால் குற்றமுள்ள நெஞ்சில் பயம் உண்டாகும்.

இசை வெள்ளத்தில் மிதக்கும் உணர்வைத் தரும் கவிதை. அருமை.


அன்புடன் மித்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே