M Kailas- கருத்துகள்

அருமையான கவிதை நண்பரே! கைதட்டல்கள்!

அருமை அருமை நண்பரே! பலத்த கைதட்டல்கள்!

அருமையான கற்பனை! எனது கைதட்டல்கள் நண்பரே! காற்று விரைவில் வரட்டும்! நிலவு பூமிக்கு ஒளியூட்டட்டும்!

அருமையான கருத்து!

கவிதை நடையில் அழகான கருத்து நண்பரே!

நன்றி நண்பரே உங்கள் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கு! இப்படி சிந்திப்பதை சந்தோஷமாக வரவேற்கிறேன்!
ம கைலாஷ்

ஐயா,
போட்டி முடிவு ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை?
ம.கைலாஷ்

கவிதை அருமை கணபதி அவர்களே!

அருமையான கவிதை தீபன்!

அருமையான, கருத்து ஆழமுள்ள கவிதை எழுதியிருக்கிறீர்கள் தீபன்! தொடரட்டும்!

நண்பர் நன்னாடன் அவர்களே! நீங்கள் சொன்ன முறையில் திரும்ப திரும்ப முயற்சி செய்ததில் வெற்றி அடைந்தேன்! இரண்டு கவிதைகளும் போட்டியில் வெற்றிகரமாக சேர்ந்து விட்டன! மிக நன்றி!

பதிலுக்கு மிக்க நன்றி நன்னாடன் அவர்களே! பிக் செய்வதற்கு கவிதையின் தலைப்பே முன் போல வருவதில்லை! முன்பெல்லாம் நன்றாக வரும்! இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் "திருத்து" என்று வருவதை தேர்ந்தெடுத்தேன்; பின்பு சமர்ப்பி என்பதை செலக்ட் செய்தேன். படைப்பு பகுதியில் வந்ததேயொழிய போட்டி கவிதைகள் லிஸ்டில் சேரவில்லை! நேற்று எழுதிய கவிதை,இன்று எழுதிய கவிதை இரண்டுமே போட்டியில் சேரவில்லை! எழுத்து தளத்திலிருந்து பதில் வந்தால்தான் தெரியும்! நண்பர் நீங்கள் உடனடியாக பதில் சொல்லி விட்டீர்கள்! மகிழ்ச்சி! எழுத்து தளத்திலிருந்து இன்னும் பதில் வரவில்லை; வந்தால் மகிழ்ச்சி அடைவேன்!

அய்யா,
இந்த போட்டிக்கு நான் பதினைந்து நிமிடங்களுக்கு முன் "புரிதல்கள் யாவும் தோழமையாய்" என்ற தலைப்பில் சமர்ப்பித்த கவிதை போட்டியில் சேரவில்லை! அதை சேர்த்து விடும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ம.கைலாஷ்

வரவேற்கத் தக்க, இன்றைய நிலையில் உபயோகமான கேள்வி ஒன்று கேட்டிர்கள் பிரியா அவர்களே! உறவினரிடம், சண்டையிட, அறிவுரை கூற, இடித்துரைக்க, உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவர் கருத்தும், நம் கருத்தும் உறவினர் என்பதாலேயே ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை உணர்ந்து அவர் கருத்தை மதிக்கவும் கற்க வேண்டும்! அப்படி செய்தால் உறவுகளுக்குள் விரிசல் வராது!

ஆகா! சத்தியமூர்த்தி அவர்களே! கறை நல்லது என்பது ஒரு அருமையான உதாரணம்! சண்டை நல்லதுதான்! உரிமையின் பிரதிபலிப்புதான் அது! இல்லை என்று கூறவில்லை! அதே சமயம் எந்த இருவருமே, அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவாக இருப்பினும், கருத்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தால் விட்டுக்கொடுக்கவும் கற்றுக் கொண்டு மனத்தாங்கல்களை தவிர்க்கவும் முடியும்!

ஆம்! எல்லா உறவுகளிலுமே இந்த பிரச்னை உள்ளது! எல்லா உறவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்! நண்பர்களின் பந்தமும் கூடத்தான்!

மிக்க நன்றி கவின் சாரலன் அவர்களே! மற்றவர்கள் யார் யார் என்ன பதில் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்! முன்பெல்லாம் பூநாகம் என்பது கட்டுக்கதை, அர்த்தமற்ற நம்பிக்கை என எண்ணி இருந்தேன்! ஆனால், உறுதி படுத்தி கொள்ள எண்ணுகிறேன்.

சாலை விதிகளில் புரிந்து கொள்ள கடினம் என்று எந்த விதியும் இல்லை! ஒன்று நாம் அவற்றை மதிக்க தவறுகிறோம். அல்லது அவற்றின் முக்கியத்துவம் புரிந்தும் நம் அவசரமே முக்கியம் என்ற வெறியில் கண்மூடித்தனமாக மீறுகிறோம்; பின் அதன் விளைவுகளையும் சந்திக்கிறோம்; வருந்தி வருந்தி மாய்கிறோம்!


M Kailas கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே