மதுமதி H- கருத்துகள்

அனைவருக்கும் வணக்கம்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கவிதைப் பயணம், இத்தளத்தில்...
மகிழ்ச்சியும், ஆரோக்யமும் அனைவரின் வாழ்விலும் என்றும் மலர்ந்திருக்க, இறைவனை வேண்டி, வாழ்த்துகள்!

மிக சிறப்பான தூண்டுகோல் வரிகள்! தனிமனித மாற்றமில்லாமல் சமூக மாற்றமோ தேச மாற்றமோ நிகழ்வது சாத்தியமில்லை! நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் ஓர் பகுதி! வருடத்திற்கு இரு முறை கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, கொடிகளை சட்டைகளில் குத்திக்கொள்வதில் இல்லை இந்தியம்!
ஒவ்வொரு நாளும் மாற்றங்களை நோக்கி பயணிக்க வேண்டும், நாடென்று மட்டும் பாராமல், உலகை அரவணைக்கும் தோழமையோடு, மனிதம் பேணும் நல்மனதோடு நம்பிக்கையோடு ஒவ்வொரு பயணத்தையும் துவங்க வேண்டும்!
இளைய சமுதாயத்தின் வீரமிகு, தொலைநோக்கு பார்வை, யதார்த்தம், உண்மை பறைசாற்றும் உத்வேகம்-இவை அனைத்தையும் தங்கள் கவிதையில் கண்டேன்! ஒவ்வொரு வரியும் எழுச்சிமிக்கதாய் உள்ளது!
முரசொலி முழங்க மலரட்டும் தங்கள் வரிகளில் காணும் புதிய தேசம்!
வாழ்த்துகள் பல!

மிக்க நன்றி! ஆம், அத்தகு இனிமை வாய்ந்த இசை, காற்றுடன் கலந்தமையால், பின்தொடர் அனுபவங்களும் இனித்தன!

மிகத் தெளிவாய் இரண்டே வரியில் ஓர் பெரும் தத்துவம் புலர்கிறது தங்கள் கருத்தில்! மிக்க நன்றி!

அழகிய படிமம் கொண்ட மிக ஆழமான படைப்பு!

இருப்பது - வாழ்வது- இரண்டிற்கும் அதிக வித்யாசம் உள்ளது! ஒரு பொம்மையைப் போல் உணர்வுகளற்று உலவி, பொம்மலாட்ட பொம்மைகளைப் போல், நம்மை ஆட்டுவிக்கும் கயிறு வேறொருவரின் பிடியில் இருந்து கொண்டு, வாழ்வின் பல கட்டங்களில் தலையாட்டி வருகின்றோம்!
இறுதியில் கயிற்றின் பிடியிலிருந்து விடுபடும் தருணம், பொம்மைக்கும் காலம் கடந்த நிலை சூழும் வலி நிறைந்த மெய் வெளிப்படும்...
கொள்வோரோ கொண்டாடுவோரோ யார் வரினும், ஏற்கும் நிலையில் இல்லாத பொம்மையாய் மனிதனின் முற்றுப்புள்ளி!

...''பொம்மை கிடைக்காதெனத் தெரிந்தால்
குழந்தைப் பருவத்தில் நாம் அழுததைப் போல
எல்லோரும் நம்மைப் பார்த்து
அழுது கொண்டிருப்பார்கள்
இனி இந்த பொம்மை கிடைக்காதென்று... ''
கண்கள் பனித்திடச் செய்யும் மெய் நிறைந்த ஆழமான வரிகள்!

ஆம், ''ஸ்ருங்காரம்'' என்பது சமஸ்கிருத சொல், ஒப்புக்கொள்கிறேன், இனி தமிழ் தவிர்த்து வேற்றுமொழிச் சொல் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறேன்; கருத்திற்கு மிக்க நன்றி .

சிங்காரம் எனும் சொல், ''அலங்காரம், ஒப்பனை- சிங்காரிப்பு'' என்பதனை குறிக்கின்றது;

ரசங்களில் முதலாவதாக விளங்குவது ''ஸ்ருங்காரம்'' [சிருங்காரம்] இது காதல், அன்பு, நாணம் என்பவற்றை அடிப்படையாக கொண்ட ரசமதனை குறிக்கின்றது; மேலும், இறைத்தன்மை அதிகம் வெளிப்படுத்தும் வார்த்தையாகவும் விளங்குவதால், இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன்.

... ''முதல்துளி இமைகளில் அமர்ந்து கொள்ள
சிலிர்த்தெழுந்தன மனதில் ஸ்ருங்கார வார்த்தைகள்''
அன்பு, காதல் ஆகிய உணர்வுகளின் புனிதம் புலரும் நிலையில், ஆண்-பெண் என்று பாலின வேற்றுமைகள் தாண்டி மிளிரும் இறைமை நிறைந்த 'ஸ்ருங்கார' ரசமுடன் வார்த்தைகள் எழுவதால், இவ்வண்ணம் எழுதலானேன்.

எனினும், தமிழ் மொழி அல்லாத வார்த்தை பிரயோகத்தினை சுட்டிக் காட்டியமைக்கு மீண்டும் நன்றி.
பாராட்டுதல் எப்படி ஒரு படைப்பாளிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்குமோ, அதே அளவு, குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டுதல், வளர்ச்சியின் பாதையை அதிகம் செப்பனிடும், பயணமும் சீராக அமையும்.
அனைத்திற்கும் மிக்க நன்றி.

மிக்க நன்றி! தங்களின் தொடர்ச்சியான கருத்துகளும் ஆலோசனைகளும், மிகவும் ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளன! கவிதைகள் அளிக்கும் இவ்வகை தோழமைக்கு, இறைவனுக்கு நன்றிகள் பல!

மிக்க நன்றி! தங்களின் உற்சாகம் மிகுந்த கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி, ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இனி வரும் படைப்புகளை மேலும் சீராக அமைக்க முயல்கிறேன்.
[ ஸ்ருங்கார - சிங்கார, இரு வார்த்தைகளும் வேறு பொருள் அளிக்கின்றன என்பதை தோழமையுடன் கூறிக்கொள்கிறேன்.]

மிக்க நன்றி! ஆம், நம் உள் பயணங்களின் தொடர்ச்சியே நம் அன்றாட வெளிப்பயணங்களாக அமைகின்றன எனக் கருதுகிறேன்!

மிக்க நன்றி! ஆம், மலர்கள் என்றுமே மகத்தானவை! மலர் போன்ற மனம் படைத்த மனிதர்கள் தான் அரிதாகிவிட்டனர்...

வார்த்தைகளாலான மிக அழகிய மழைப் பொழிவு! பல கோணங்களில் மழையின் விளைவுகளை ஆழமாய் சிந்திக்க வைக்கும் வெளிப்பாடு! அனைத்து வரிகளும் மிக அழகாய் அமைந்துள்ளன, குறிப்பாக:
''குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...''
'' மழையென்பது யாதெனில்
எல்லா நேரங்களிலும்
வெறும் நீராக இருப்பதில்லை
கண்ணீராகக் கூட இருந்து விடலாம்...''
-இவ்வரிகள் மிக ஆழமாய், உணர்வுகளுக்கு, மழை குரல் கொடுத்தது போல் உள்ளன! உளமார்ந்த வாழ்த்துகள்!




மதுமதி H கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே