மீனாட்சி மோகன்குமார்- கருத்துகள்

கொசுவின் உச்சகட்ட தொல்லையை..... அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.மன்னிக்க....

பிரித்தால் உடைந்து மட்டுமல்ல பிரிந்தும்
படந்தும் போகும்.
பல+கை-பல கைகள்
பல்+அகை{கிளை}- பல கிளைகள்


'ஐ என்பதை அய் என்று சொல்லிவிடலாம் என்றால் பின் அந்த எழுத்துத் தமிழ் நெடுங்கணக்கில் எதற்கு?' அதுவும் இருக்கட்டும் இதுவும் இருக்கட்டும். வழக்கு நோக்கி எது நிற்கிறதோ அது நிற்கட்டும்-தொல்)
"அகர இகரம் ஐகாரம் ஆகும்”

“அகர உகரம் ஔகாரம் ஆகும்”

“அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”
- என்று பயன் பாட்டிற்கு உடம்பு மெய்,புணர்ச்சியில் மட்டுமல்ல புரிதலிலும் இவ்விரு பயன்பாடுகளும் சரியானது,நிகரானது என தொல்காப்பியரே சொல்லிவிட்டார்.
இச்சொற்களைப் பொறுத்தமட்டில்,
இரு பயன்பாடுகளும் சரியே.

வஞ்சித்தாழிசை......
கொஞ்சி
கொஞ்சம்
கம்பன் காட்டிய "பஞ்சியொளிர், வஞ்சமகள்"
வரிகளை நினைவூட்டுகிறது.
அருமை ஐயா...

அறிந்த விளக்கம்:
தனக்கு லாபம் இல்லாமல் எந்த செயலிலும் இறங்காத மனிதர்களின் தன்மையை குறிக்கும் படி நேரடி பொருளை கொண்ட
பழமொழியாக இது கருதப்படுகிறது .


அறியாத விளக்கம்:
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள்

முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.

அருமை சகோ....
அழகுச்சூடி.........
அழகாய் சூடப்பட்டுள்ளது....
தங்கள் வரிகளில்.....

சேர்ந்தது சகோ....
அவரிடம் என் வரிகள....
என்னிடம்
அஞ்சலில் வந்த
அவரின்
🌹 திருமண அழைப்பிதழ்🌹.....

நன்றி சகோதரரே.......




பெண்ணாய் இது வரை பெருமை கொண்டவள் தான் சகோ நானும்.....
எங்களுக்காய் உம் போல் சகோதரர்கள் இருக்க
இந்நிலையில் அவர்களுடன் நிற்க இயலஆத என் இயலாமை எனைக் கண்டு சிரிக்கிறது......
இத்தனை நாட்கள் சென்று வந்த என்னால் இன்றைய பிரச்சனையில் உடனிருக்க முடியவில்லை என்று என் மீதான என் சினத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை......
காலை முதல் வீட்டில் சிக்குண்டு கிடக்க நான் பெண் என்பது மட்டுமே காரணமாய் கூறப்பட, கண்கள் குளமாகிறது.......முதல் முறை பெண்ணாக பிறந்தது தவறோ என சிந்திக்கிறது மனம்....

நன்றி ஐயா

பார்த்த மாத்திரத்தில் பரி(குதிரை)யினும் வேகமாய் போன வார்த்தைகள் எனும் பொருளில் தான் "பரி போன" என்பதாக அமைத்தேன் ஐயா..... (வார்த்தைகள் எப்போதும் பறி போவதில்லை என்பதாக நான் நம்புகிறேன்.


மீனாட்சி மோகன்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே