pranavan- கருத்துகள்

. வாசல்தெளித்த விடியல் காலை மண் வாசமும் ,நீண்ட சித்திரத்தை விரித்து வைத்தது போல் அதிகாலை வீதிகளும் ,கோலமிடும் பெண்டிரும் ..அன்றைய த தினங்களின் அற்புதமான விடியல்களை கனவாக்கி முடிந்து விட்ட கலாச்சார மாற்றங்களும் அத்தனையும் ஒரு கவிதையில் .இதை படித்த பின்னால் அடிமனதின் ஏக்கம் பீறிட்டு வெளியானது .
ஒரு சின்ன புள்ளியில் இத்தனை பெரிய கோலமா என்ற வியப்பை தாண்டி கலாச்சார இழப்புகளை மீட்டெடுக்கும் ஆதங்கமாகவும் ,எதையெல்லாம் இழந்தோம் என்பதன் ஆவணமாகவும் இந்த கவிதையை பாராட்ட வேண்டியது பார்வையாளனின் கடமை .

இளையராஜா என்பவர் ஒரு இசை மேதை என்று மட்டுமே அறியப்பட்டாலும் அவர் ஒரு புதிர் ,ஐன்ஸ்டீன் ,கணித மேதை ராமானுஜம் மாதிரி அவரை மனிதப்பிறப்புக்கு அப்பாற்பட்டவராகவே பார்க்கிறேன் .இவர்களெல்லாம் படித்து ,கற்று ஒரு துறையில் போராடி நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதைவிட ( அது ஒரு எல்லை வரை மட்டுமே சாத்தியம் ) மனித ஞானத்துக்கு அப்பாற்பட்ட இறைவனின் படைப்புகள் .ஜான் வில்லியம்ஸ் ,ஜேம்ஸ் ஹார்னர் அவரின் ஆதர்ஷ புருஷர் பால் மாரியட் போன்ற உலகத் தர மேற்கத்திய இசை மேதைகள் வரிசையில் இவர் ஒப்பிடப்பட்டாலும் ,அவர்கள் இசையில் இருப்பது ஒப்பில்லா இசைக்கோர்வை மட்டுமே .அதைத்தாண்டி மனிதனின் உயிர் நாடி தொடும் மேதமை இளையராஜாவின் இசைக்கு மட்டுமே உண்டு . உலகப் புகழ் பெற்ற ஒரு மேற்கத்திய நிபுணர் இளையராசாவின் இசைகோர்வை இந்திய இசையோ மேறகத்திய இசை பாணியோ அல்லது உலகின் வேறெந்த இசை வடிவமோ இல்லை .அது உலகுக்கு இளையராஜா இசை என்ற புது வடிவம் என்று சொன்னது ஞாபகம் வருகிறது .அவர் உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒன்பதாவது இடம் என்று அறிவிக்கப்பட்ட செய்தியை எந்த ஊடகங்களோ ,நமது அரசியலோ மக்களில் பார்வைக்கு எடுத்து செல்லாதது கேவலம் .மூன்று நோட்டில் இசை அமைத்தது ,ஆரோகணம் மட்டுமே வைத்து அவரோகணம் இல்லாது சிந்து பைரவியில் ஒரு பாடல் அமைத்தது போன்ற உலகத்தின் இசை தோன்றிய நாள் முதல் யாரும் செய்யாத சாதனைகளை போகிற போக்கில் சினிமா இசை மூலம் முறியடித்த கலைஞன் .இத்தனை பெரிய பொக்கிஷத்தை தமிழகம் எதற்குமே பயன்படுத்தாமல் குப்பையில் வைத்திருப்பதுதான் தமிழனுக்கான குணத்தின் அடையாளம்.அதைவிட கர்நாடக இசை ஜாம்பவான்களும் ,மேற்கத்திய இசை விற்பன்னர்களும் அதிசயித்து பார்க்கும் ஒரு கலைஞனை வலைத்தளங்களில் அவரை பற்றிய செய்திகளில் படுகேவலமாக வரிகள் எழுதும் மேதைகள் .இந்த பெரிய வேதனைக்கு நடுவே எழுத்து வில் இந்த கவிதை பரிசு பெற்றிருப்பதற்கான் குறுஞ்செய்தி பார்த்து கவிதை பகுதிக்கு வந்தேன் .

நண்பன் நிலாகாண்ணன் அவர்களே உங்கள் கவிதை தேர்ந்தேடுக்கப்படத்தை விட கிடைத்திருக்கும் இத்தனை பெரிய பார்வைகள் மூலம் நீங்கள் இளைராஜாவுக்கு நன்றி செய்திருக்கிறீர்கள் .முயற்சிக்கு நன்றி .ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூட நன்றி சொல்லவேண்டியது கடமையாகிறது .இவர்களின் இந்த தாகம் செத்துக்கிடக்கும் தமிழ் இசையை மீண்டும் புதுப்பிக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

பார்வைக்கு மிக்க நன்றி சபாபதி

பார்வைக்கு மிக்க நன்றி நண்பரே

பாரதிராஜா தென்றலின் கையை பிடித்துக்கொண்டு நந்தவனத்தில் நடப்பது என்பாரே .. அது இதுதான் .முதல் வரியை தாண்டியவுடனே சினிமா மாயை போல் location சரேலென்று shift ஆகி அவசர உலகில் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க ஏங்கும் ....ஏங்கினாலும் கிடைக்காத ரம்மியமான சூழலுக்கு எடுத்துச்சென்றது அபாரம் .சில நொடிகளேனும் நல்ல காற்றை சுவாசித்தது போல் இருந்தது .அதெல்லாம் விட மரபுக்கவிதைகளை விட்டு வெகு தூரம் வந்துவிட்டோமோ என்ற நெடுங்குற்ற உணர்ச்சியை தீர்த்துவைத்த கவிதை . மரியாதைக்குரிய கவிதை ..தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்

பாரதிராஜா தென்றலின் கையை பிடித்துக்கொண்டு நந்தவனத்தில் நடப்பது என்பாரே .. அது இதுதான் .முதல் வரியை தாண்டியவுடனே சினிமா மாயை போல் location சரேலென்று shift ஆகி அவசர உலகில் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க ஏங்கும் ....ஏங்கினாலும் கிடைக்காத ரம்மியமான சூழலுக்கு எடுத்துச்சென்றது அபாரம் .சில நொடிகளேனும் நல்ல காற்றை சுவாசித்தது போல் இருந்தது .அதெல்லாம் விட மரபுக்கவிதைகளை விட்டு வெகு தூரம் வந்துவிட்டோமோ என்ற நெடுங்குற்ற உணர்ச்சியை தீர்த்துவைத்த கவிதை . தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்

பிறப்பும் இறப்பும் அவனை கேளாமல் நிகழும் அடையாளங்கள் . அவன் வாழ்க்கை ஒன்றுதான் அவன் அடையாளம் பதிக்க கொடுக்கப்பட்டது .பெரும்பாலனவர்கள் அதை செய்யாமலே செத்துப்போவதை உணர்த்தும் அற்புத படைப்பு

மனித இனத்தின் கபளீகர புத்தியை பளீரென சொல்லி இருக்கிறீர்கள் . நல்ல வேளை நிலவில் காற்றோ நீரோ இல்லை

மிக்க நன்றி வேந்தன்

பாராட்டுக்கு நன்றி வேந்தன்

இலக்கியத்துக்கான மிக உயரிய விருது
எனக்கு வழங்கப்பட்ட இரவில்

பல தளங்களில் இருக்கிறீர்கள் .. இலக்கியத்துக்கான மிக உயரிய விருது பெற தகுதி உள்ளவரும் கூட .அப்படி பெற்றதன் பெற்றதன் வெளிப்பாடாடுதான் இந்த கவிதையாக இருக்கலாம் .அப்படி எனில் பகிர்ந்து கொள்ளவும்

அசாத்தியமான சிந்தனை .. முழுமை பெற்ற புதுக்கவிதை .. படிப்பதற்குக்கூட ஒரு தகுதி தேவைப்படுகிறது

மிக்க நன்றி நண்பரே

பார்வைக்கு நன்றி நண்பரே

மிக்க நன்றி நண்பரே


pranavan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே