PRIYA- கருத்துகள்

முதன் முதலில்
'அ" போடும் போது சரியாக வராது சிறிது கோணல் மாணல் தான். இது எனது முதல் சிறுகதை பல பிழைகள் பல தவறுகள் இருந்தாலும் அதையெல்லாம் பொறுத்து சகித்து ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்துரைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பொள்ளாச்சி அபி சார் முதல் கவிதைக்கு ஊக்கம் அளித்த தாங்களே முதல் கதைக்கும் வந்து கருத்துகள் பதிந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இக்கவிதைக்கு கருத்துகள் வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...

வணக்கம் பிரியா... தங்கள் கவிதைகளை படித்திருக்கேன் நன்றாக உள்ளது.. இக்கவிதையில் தங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே, இது போன்ற பல கடுமையான சம்பவங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு ஆய்வு முடிவில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை சராசரியாக 100 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றன. இது போன்ற தருணங்களில் புலம்புவதை விட்டு விட்டு இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது எனபது பற்றி எழுதுங்கள். உங்களால் முடிந்தவரை இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை அளியுங்கள். எதிர்மறை எண்ணம் கொண்ட பதிவுகளை பதிய வேண்டாமே.... மாண்டு போகும் மனிதம் என்ற இக்கவிதைக்கு வேற படங்களை போற்றுக்கலாமே.. தன் காதலை காதலனிடம் கூறி அவரால் காலில் மிதிபடும் இக்காட்சி, இக்கவிதைக்கு பொருந்தாது. மிதி வாங்கும் காட்சியையும் ஒரு ஆனால் அடி வாங்கும் காட்சியையும் இனி பதியாதீர்கள் தோழி. பெண்கள் அடியும் மிதியும் வாங்கியது போதும். நம்மை மித்திப்போரை நாம் மிதித்து செல்லும் காலம் வந்துவிட்டது. கலங்க வேண்டாம்.
அன்புடன் priya .

வணக்கம் நிஷா.... இது மாதிரியான புகைப்படம் எல்லாம் எங்க இருந்து எடுகிரிங்க....? உங்களது தோழி இப்படி ஒரு புகைப்படம் போடும் போது அதை தடுக்க வேண்டுமே தவிர மாறாக அதை ஆதரிக்கலம்மா...? பெண் கொடுமை முற்றிலும் அழியவில்லை உண்மைதான் ஆனால் 1950 வாழ்ந்த பெண்களுக்கும் 2014 வாழும் நமக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? நிஷாம்மா. பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. பெண்கள் சுதந்திரத்தை பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பேசியுள்ளனர்.மகாகவி சுப்பிரமணி பாரதி, பாரதிதாசன்,தந்தை பெரியார், மகாத்மா காந்தி.. இப்படி சொல்லிகொண்டே போகலாம், ஆண்களின் துணை இல்லாமல் பெண் சுதந்திரம் என்பது சாத்தியம் இல்லை. பெண்களின் திறமைகளை பற்றி பாடுங்கள், பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை சேருங்கள். அதை விடுத்து இப்படி சுடர்விடும்
மெழுகுவர்த்திக்கு
சுதந்திரமாய்
சாவு உண்டா
இந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு பெண்ணிற்கு எப்படி தைரியத்தை அளிக்கும். ஆண்கள் அடிக்க பெண்கள் மிதிபடுவதை எத்தனை காலத்திற்குத்தான் காட்ட போறீங்க நிஷம்மா. எந்த காலத்திலும் பெண்களுக்கு விடியல் வராது என்ற இதுபோன்ற எதிர்மறை எண்ணம் கொண்ட கவிதைகளை தயவு செய்து இனி இங்கு பதியாதீர்கள். பெண்ணியவாதியான என்னால் பொறுக்க இயலவில்லை.
பெண்ணியம் பேசவேண்டிய பெண்ணே...
பெண்ணுக்கு எதிரான குற்றங்களை களைய வேண்டிய பெண்ணே ....
பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விந்தைகள் செய்ய வேண்டிய பெண்ணே நீ
சோர்ந்து போய் சொக்கி நின்றால் ஆண்கள் என்ன இந்த உலகமே காலால் மிதிக்குமடி தங்க பெண்ணே........

வணக்கம்.... மாமியாரின் ஆதங்கத்தை உங்கள் வரிகளில் புரிந்து கொள்ள முடிந்தது. பொதுவான சில கருத்துக்களை இங்கு பதிய விரும்புகிறேன் , மருமகளை ஒரு மாமியார் எப்படி வைத்துகொண்டாலும் மருமகள் ஒருபோதும் மகளாக மாட்டார். மகள் மகள் தான்,
மருமகள் மருமகள் தான். ஒரு தாயிற்கு பிடித்த அனைத்தையும் மகள் செய்வதில்லை அதை பெரிதாக எந்த தாயும் எடுத்துக்கொள்வதில்லை, அவளுக்கு அதான் பிடிக்கும் என்று எளிதில் விட்டு விடுவார்கள் அதையே மருமகள் செய்யும் போது தவறாக தோன்றுகிறது. இப்படிதான் இருக்க வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம் என நினைக்கிறன்.மாமியாருக்காக சில விஷயங்கள் மருமகள் விட்டு கொடுப்பதும் மருமகளுக்காக சில விஷயங்கள் மாமியார் விட்டு கொடுப்பதும் இருந்தாலே ஆரோக்கியமான உறவு நீடிக்கும். கட்டாய படுத்தும் போதும் வலுக்கட்டாயமாக திணிக்கும் போதுமே அதை நிராகரிக்கவே தோன்றும்.

மிக்க நன்றி...

நிச்சயம் கிடைக்கும்..
நன்றிகள் பல

நன்றி ராஜ்குமார் அவர்களே...


PRIYA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே