சீதளாதேவி வீரமணி- கருத்துகள்


போட்டியில் வெற்றிப்பெறுவதற்காக உருவான கவிதையில்லை...போட்டி ஒரு களம் தானே தவிர முடிவு அல்ல...இங்கு எல்லோரும் கவிஞர்களே பிழை இல்லாமல் எழுதியோர் என்னை எழுதப் பழகும் குழந்தை என எண்ணி அமைதி ஆகிவிட்டனர் என்று நினைக்கிறேன்...அவர்கள் என்னை எதிரியாகவோ அல்லது போட்டியாளர் என்றோ எண்ணுவதாக தோன்றவில்லை...நன்றி சகோதரரே உங்கள் விமர்சனத்திற்கு ஏனெனில் விமர்சனம் மட்டுமே வளர்க்கும்.,எப்படியும் என் கருத்துகளுக்கு விமர்சனம் அனுப்புவீர்கள் என்னை வளர்க்க காத்திருக்கிறேன்

பிழை பொறுக்கவும் என்று கேட்டது என் பண்பாடு...பிழையை சுட்டி காட்டுங்கள் என்று சொன்னது இயலாமை...இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை...நாங்கள் மதிப்பெண்ணிற்காகவும் தகுதியான பணிக்காகவும் உருவாக்கப்பட்ட தலைமுறை முடிந்தால் தவறினை சுட்டி காட்டி ஊக்கப்படுத்துங்கள்.,

என் பாரதியின் நிகழ்வு ஒன்றை நினைவுப்படுத்தி கொள்கிறேன்...என் தாய் மொழி கொண்டு யாரையும் நிந்திக்க மாட்டேன் என்று மகாத்மாவிற்கு கடிதம் எழுதி இருந்தாரே அதை கடைப்பிடித்து தான் கருத்தை பதிவிட்டதாக எண்ணி இருந்தேன்...நீங்கள் அப்படியோ இப்படியோ என்று தன்மையை தயவு செய்து தீர்மானிக்க வேண்டாம்...அது தமிழுக்கும் அழகல்ல தமிழருக்கும் அழகில்ல...

நான் சிவனில்லை என்பதையும் தமிழ் எனக்கு உயிரில்லை என்பதை மட்டுமே படித்தீர்களா? எனக்கு உயர்தொனியிலும் இரட்டை அர்த்தங்களிலும் பேசும் வழக்கம் இல்லை...முக்கியமாக தமிழ் படித்தோரையும் தமிழை நேசிப்பவரையும் காயப்படுத்த விரும்பியதில்லை அப்படி நிகழ்ந்திருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.,இது எங்கள் இயலாமை மற்றும் என் தவறை உணர்கிறேன் என்று நான் குறிப்பிட்டதையும் நீங்கள் பார்க்கவில்லை என்றே எண்ணுகிறேன்...நீங்கள் சகோதரியாக எண்ணி இருந்தால் தவறினை குறிப்பிட்டு இருப்பீர் என்று தோன்றுகிறது

நான் சிவனில்லை என்பதையும் தமிழ் எனக்கு உயிரில்லை என்பதை மட்டுமே படித்தீர்களா? எனக்கு உயர்தொனியிலும் இரட்டை அர்த்தங்களிலும் பேசும் வழக்கம் இல்லை...முக்கியமாக தமிழ் படித்தோரையும் தமிழை நேசிப்பவரையும் காயப்படுத்த விரும்பியதில்லை அப்படி நிகழ்ந்திருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.,இது எங்கள் இயலாமை மற்றும் என் தவறை உணர்கிறேன் என்று நான் குறிப்பிட்டதையும் நீங்கள் பார்க்கவில்லை என்றே எண்ணுகிறேன்...நீங்கள் சகோதரியாக எண்ணி இருந்தால் தவறினை குறிப்பிட்டு இருப்பீர் என்று தோன்றுகிறது

தமிழ் அழிகிறது தமிழ் அழிகிறது என்று சொல்லியே பாதி அழித்து விட்டோம்...தமிழ் வாழவேண்டும் என்று சொல்லுங்களேன்...சாகும் வரை நல்லா இரு என்று வாழ்த்துவது நமது பண்பாடு அன்று...தமிழ் வாழ வேண்டும் நினைப்பவர்கள் அழிவை பற்றி பேசுவதை விடுத்து வாழ்வைப் பற்றி பேசுங்கள்...தமிழ் என் உயிரும் இல்லை உலகமும் இல்லை இரண்டுக்கும் அழிவு உண்டு என்பதால் இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கிறேன் என் தாய் அழிகிறாள் என்பதை வார்த்தையில் சொல்லக் கூட விரும்பாத தமிழச்சி நான்

தவறு என்றால் அதை சுட்டி காட்டி திருத்த சொல்லியிருக்க வேண்டும் சகோதரரே...தமிழர்கள் குற்றங்களை திருத்த முயற்சி செய்யுங்கள்...தமிழ் எனக்கு பொழுது போக்கு என்று நீங்கள் தீர்மானிப்பதில் அர்த்தமில்லை...நீங்கள் தமிழை உயிராக எண்ணினால் பிழைகளை திருத்த சொல்லி கொடுங்கள்...எமது முன்னோர்கள் உன் எழுத்தில் பிழை உள்ளது என்று கூறி தனக்கு தான் தெரியும் என்றும் தமிழை காப்பற்ற நாங்கள் தான் உள்ளோம் என்று பெருமையடித்து கொண்டார்களே தவிர இறுதி வரை குற்றம் சொல்லியே காலம் கடத்தினர்...எங்கள் தலைமுறை குற்றத்தை திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம் முந்தைய தலைமுறைக்கு குற்றத்தை திருத்த பெருந்தன்மை இல்லை என எண்ணுகிறேன்...இது தவறினை நியாயப்படுத்தும் முயற்சி இல்லை சகோதரரே எங்களின் இயலாமை

நன்றி நண்பரே!
பிழை பொறுக்கவும்...
சொல் வழக்கில் கவிதை எழுதினாலும் பிழை கண்டறியும் நேர்மை மிக அருமை...நீங்கள் நக்கீரர் தான்,பிழை இல்லாமல் எழுத நான் சிவன் இல்லை...உங்கள் விமர்சனம் என்னை பாதிக்கவில்லை பக்குவப்படுத்துகிறது...
எனது துறை வேறாக இருந்தாலும்
என் தாய்மொழி எனக்கு இந்த பக்குவத்தை கற்று தந்திருக்கிறது...

தேர்வு செய்தோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி
சக கவிஞர்களுக்கு பாராட்டுக்கள்

எனது துறை கணினி என்றாலும் அது பணம் தருமே தவிர பசி ஆற்றாதே...சோறு போடும் உழவனோட வாழ்க்கைக்கு என்னால் முடிந்த சமர்ப்பணம்


சீதளாதேவி வீரமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே