வன்மம்

Vanmam Tamil Cinema Vimarsanam


வன்மம் விமர்சனம்
(Vanmam Vimarsanam)

இயக்குனர் ஜெய் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வன்மம்.

இப்படத்தின் கதாநாயகியாக சுனைனாவும், கதாநாயகர்களாக விஜய் சேதுபதி மற்றும் க்ரேஷ்ணாவும் நடித்துள்ளனர்.

சிறந்த நண்பர்களாக முரட்டுத்தனமானவராக விஜய் சேதுபதி மற்றும் புத்திசாலியாக க்ரேஷ்ணா. பெரும் வசதியுள்ள விஜய் சேதுபதி செய்த தவறை சுட்டிகாட்டி, க்ரேஷ்ணா கூறியதில் மனம் உடைந்து க்ரேஷ்ணாவை விட்டு பிரிகிறார் விஜய் சேதுபதி. பின் இருவருக்கும் பெரும் மோதல்கள் நிகழ்கிறது. சுனைனாவின் அண்ணன் இறந்து போக சுனைனாவின் குடும்பத்திற்கு நிறைய நன்மைகளை செய்கிறார், விஜய் சேதுபதி. ஜெ.பியான ராஜா நண்பர்களை பிரித்து அவர்கள் இருவரும் அடித்து கொண்டு சாக வேண்டும் என்று நிறைய சதிகளை செய்கிறார்.

சிறந்த நண்பர்களாக இருந்தவர்கள் எதிரியானப் பின் மறுபடியும் சிறந்த நண்பர்களாக மாறினார்களா? என்பதையும், சுனைனா இருவரில் யாரை காதலித்து கரம் பிடித்தார்? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

சுனைனாவின் நடிப்பு இயற்கை. விஜய் சேதுபதி மற்றும் க்ரேஷ்ணா நடிப்பும் அழுத்தமானது.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-11-21 15:06:13
(0)
Close (X)

வன்மம் (Vanmam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே