கப்பல்

Kappal Tamil Cinema Vimarsanam


கப்பல் விமர்சனம்
(Kappal Vimarsanam)

இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் ஜி. கிரீஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., கப்பல்.

இப்படத்தின் கதாப்பாத்திரங்களில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜுனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வைபவ், கருணாகரன், அர்ஜுனன் மூவரும் சிறுவயது முதலே லட்சியம் ஒன்றை வைத்து நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர், ஆனால் வைபவ் மட்டும் அந்த லட்சியத்தை விடுகிறார். தன் நண்பர்களை பிரிந்து வேலைக்கு போக வேண்டும் என்று சென்னை வந்து விடிவி கணேஷுடன் தங்குகிறார். விடிவி கணேஷுடன் சேர்ந்து அடிக்கும் நகைச்சுவை நன்று. காதலிக்க வேண்டும் நோக்கத்தில் இருக்கும் வைபவ் மது அருந்த போகும் போது சோனம் பஜ்வாவைப் பார்த்து காதலில் விழுகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். ஊரிலிருந்து சென்னை வரும் நண்பர்கள் வைபவை வெறுக்கிறார்கள்.

எதற்காக வைபவை வெறுக்கிறார்கள், நண்பர்களின் லட்சியம் தான் என்ன? என்பதை இப்படத்தில் நகைச்சுவையுடன் காணலாம்.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-26 11:49:11
(0)
Close (X)

கப்பல் (Kappal) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே