மாயா

Maya Tamil Cinema Vimarsanam


மாயா விமர்சனம்
(Maya Vimarsanam)

மாயா ஒரு திரில் பேய் கதை. இரு கதைகளை மையமாக கொண்டு தொடங்கி. இறுதியில் இரண்டு கதைகளையும் சாமர்த்தியமாக இணைத்து தெளிவுபடுத்தியுள்ளார் புதுமுக இயக்குனர் அஸ்வின் சரவ ணன்.

இரண்டு கதைகள் திரையில் ஓட ஆரம்பிக்கின்றன. ஒரு கதை, மாநகரின் புறத்தே இருக்கும் ‘மாயவனம்’ என்ற காட்டையும் மனநலக் காப்பகம் ஒன்றின் மர்மங்களையும் பற்றி யது. காப்பகத்தில் கர்ப்பவதியாகச் சேர்க்கப்பட்டு இறந்துபோன ஒரு பெண்ணைப் பற்றி ஆராய்ந்து எழுதப்படும் தொடர்கதையின் கதாசிரியர், அதை வெளியிடும் பத்திரிகை முதலாளி, அவரது மனைவி, அதற்குப் படம் வரையும் ஓவியர் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் வழியே பரபரப்பாக நகர்கிறது அந்தக் கதை.

இரண்டாம் கதையில் கண வரைப் பிரிந்து கைக்குழந்தை யுடன் வாழும் அப்சரா (நயன்தாரா) என்ற பெண் பார்வையாளர் களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறார். கணவன் மீதிருக்கும் மனத்தாங்கல் காரணமாகத் தனித் துப் போராடும் அவருக்குக் கடும் பண நெருக்கடி.

இதற்கிடையில் மாயவனம் குறித்து எடுக்கப்பட்ட பேய்ப்படம் ஒன்று வியாபாரம் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. அதை இரவுக் காட்சியில் தனியாளாகப் பார்ப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு என அறிவிக்கிறார் அதன் இயக்குநர். பண நெருக்கடியால் வாடும் அப்சரா அந்தப் படத்தைப் பார்க்க ஒப்புக்கொள்கிறார். அந்தப் படத்தைப் பார்க்கும் போது அவருக்கு ஏற்படும் அமானுஷ்யமான அனுபவங்கள் தாம் மீதிக்கதை.


சேர்த்த நாள் : 2015-09-21 10:22:34
4 (4/1)
Close (X)

மாயா (Maya) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே