சதுரன்

Sathuran Tamil Cinema Vimarsanam


சதுரன் விமர்சனம்
(Sathuran Vimarsanam)

ஆட்டோ டிரைவர் நாயகன் ரஜாஜ். காளி வெங்கட் மற்றும் ரஜாஜ் நண்பர்கள். ரஜாஜ் அதே ஊரில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்க்கும் வர்ஷாவை காதலிக்கிறார்.

இந்நிலையில் வர்ஷா வேலை பார்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு ஒரு மர்ம நோய் தாக்கப்பட்டிருப்பதை அறிகிறார். இதை விஷயத்தை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களிடம் சொல்லுகிறார். ஆனால், டாக்டர்கள் இதை பெரிதுபடுத்தாமல் அலைக்கழிக்கிறார்கள்.

இதனால், மருத்துவமனையின் டீனை அணுகி அவரிடம் இந்த விஷயத்தை சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் பலனளிக்காமல் போகிறது. இதனால், மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு போன் செய்து ஒரு இடத்திற்கு வரவழைத்து அவர்களிடம் மர்ம நோய் பற்றிய தகவல்களை கொடுக்கிறார் வர்ஷா.

இந்த நான்கு பேரில் ஒருவர் வராமல் இருக்கிறார். இதற்கிடையில், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் கூலிப்படையினர் மூலம் நோய் பாதிக்கப்பட்ட நபர்களையும் வர்ஷாவையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதன்படி நான்கு பேரில் இரண்டு பேரை கூலிப்படையினர் கொலை செய்து விடுகின்றனர்.

மீதமுள்ளவர்களையும் நாயகி வர்ஷாவையும் கொலை செய்ய கூலிப்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இறுதியில் கூலிப்படையினர் நோய் பாதிக்கப்பட்டவர்களையும், வர்ஷாவை கொலை செய்தார்களா? ரஜாஜ், வர்ஷாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.


சேர்த்த நாள் : 2015-10-19 12:44:41
(0)
Close (X)

சதுரன் (Sathuran) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே