நீ எங்கே என் அன்பே

Nee Yenge Yen Anbe Tamil Cinema Vimarsanam


நீ எங்கே என் அன்பே விமர்சனம்
(Nee Yenge Yen Anbe Vimarsanam)

ஹிந்தியில் கஹானி திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு, சேகர் காமுலா தெலுங்கில் அனாமிகா என்ற தலைப்பிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற தலைப்பிலும் இயக்கியிருக்கிறார்.

படத்தின் வலுவான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பில் புதிய முறையை கையாண்டுள்ளார்.அளவாகவும், அழகாகவும் நடித்துள்ளார். வைபவ் காவல் துறை அதிகாரியாகவும், பசுபதி காவல் துறை உயர் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

ஐதராபாத்தில் காத்தாடி திருவிழாவில் குண்டு வெடிப்பு நிகழ்கிறது. அச்சமயம் தன் கணவனைத் தேடி ஹைதராபாத்துக்கு அமெரிக்காவிலிருந்து வருகிறார், நயன்தாரா. காவல் நிலையத்தில் தன் கணவனை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். அதனால் வைபவ் நயன்தாராவின் கணவனைத் தேட உதவுகிறார்.
பசுபதி, நயன்தாராவின் கணவனுக்கும், குண்டு வெடித்ததற்கும் தொடர்பு இருக்கிறது என நயன்தாராவிடம் விசாரணை நடத்துகிறார். இதற்கிடையில் சில தீவிரவாதிகளின் மிரட்டல் நயன்தாராவிற்கு வருகிறது. இதன் பின் அவர் என்ன செய்தார்? கணவனை கண்டு பிடித்தாரா? என்பதை திகிலுடனும், விறுவிறுப்புடனும் படத்தின் இரண்டாம் பாதியை காணலாம்.

நீ எங்கே என் அன்பே - கணவனைத் தேடும் படலம் - படத்தில் விறுவிறுப்போடு தேடலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-02 14:15:34
4 (8/2)
Close (X)

நீ எங்கே என் அன்பே (Nee Yenge Yen Anbe) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே