வடகறி

Vadacurry Tamil Cinema Vimarsanam


வடகறி விமர்சனம்
(Vadacurry Vimarsanam)

இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில் ஜெய் மற்றும் சுவாதி நடித்து வெளியாகியுள்ள படம், வடகறி.

ஜெய் நடுத்தர குடும்பத்து இளைஞனாகவும்,ஜெயின் அண்ணனாக அருள்தாஸ் மற்றும் அண்ணியாக கஸ்தூரி நடித்துள்ளனர்.

நண்பனாக ஆர் ஜே பாலாஜி நடித்துள்ளார்.பாலாஜியின் எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணின் அழகு தோழியாக சுவாதி நடித்துள்ளார்.சுவாதியை ஒரு சந்திப்பிலே காதல் கொள்கிறார், ஜெய்.

ஜெய் தனது சம்பளத்தில் நல்ல கைப்பேசி வாங்க நினைக்கிறார்.ஆனால் சந்தர்பங்கள் அதற்கு ஏற்றார் போல் இல்லை.அதனால் கைப்பேசி மீது மிகவும் ஆசையோடு இருக்கிறார். ஒரு நாள், அழகான கைப்பேசி ஒன்று ஒரு இடத்தில் யாருமற்று இருப்பதை கண்டு அதை கைப்பற்றுகிறார். அக்கைப்பேசியினால் ஜெய் என்ன ஆனான்? என்பதையும், சுவாதியுடனான காதல் கைகூடியதா? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

பாடல்கள் பரவாயில்லை.யுவனின் இசையில் ஒரு பாடல் மற்ற பாடல்களை விவேக் சிவா,மெர்வின் சாலமன் இசையில் கேட்கலாம்.

வடகறி - உணவு வடகறியைப்போல் இல்லை.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-06-20 12:23:15
2 (4/2)
Close (X)

வடகறி (Vadacurry) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே