சேர்த்தவர் : kiruthiga dass, 18-Feb-15, 1:01 am

இன்னும் சற்று நொடிகளில்

இன்னும் சற்று நொடிகளில் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

**...இன்னும் சற்று நொடிகளில்...**



1 . கவிதைத் தலைப்பு - காக்கைச் சிறகினிலே -

ஒரே ஒரு தலைப்பு மட்டுமே... அந்த ஒரு தலைப்பின் கீழ் சமூகம் , அவலங்கள் , இயற்கை , காதல் , நட்பு , பிரிவு , உறவுகள் , Fantasy என்று எந்தப் பிரிவிலும் கவிதைகள் படைக்கலாம்... ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்...


2 . கவிதைக்கான அளவு : குறைந்தபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்... அதிகப்பட்சம் 24 வரிகள் மட்டுமே இருத்தல் அவசியம்... ஒரு வரிக்கு அதிகப்பட்சம் நான்கு சொற்கள் மட்டுமே... எழுத்துப்பிழைகள் மற்றும் ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப்படுதல் அவசியம்...


3 . போட்டிக்கான கால அவகாசம் - மூன்று மணி நேரம் .. இந்திய நேரப்படி 15 பிப்ரவரி 2015 ஞாயிறு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை... இந்தக்கால அவகாசத்துக்குள் பதிவு செய்யப்படும் கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்...

((மற்றுமொரு அறிவிப்பு : இங்கு போட்டி பகுதியின் கீழ் ஆரம்ப நாள் மற்றும் இறுதி நாள் பகுதியில் குறிப்பிடப் பட்டு இருக்கும் தேதி மற்றும் நேரங்களை தோழர்கள் போட்டி நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... தளத்தின் போட்டி நேரக் குறிப்பில் போட்டி துவங்கும் நாள் மட்டும் முடியும் நாளுக்கு இடையில் குறைந்தது ஒரு நாள் இடைவெளி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டு இருந்தது... அதனால் போட்டி நடக்கும் சரியான நேரத்தை போட்டியின் நேரம் பகுதியில் என்னால் குறிப்பிட முடியவில்லை... நமது போட்டி நடப்பது இந்திய நேரப்படி 15 பிப்ரவரி 2015 ஞாயிறு அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே என்பதைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன் நண்பர்களே))


4 . சமர்ப்பிக்கப்படும் கவிதைகள் படைப்பாளிகள் தம் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்... எழுத்து தளத்தின் இன்றைய உறுப்பினராக இல்லாதவர்கள் , உறுப்பினராகி பின்னர் படைப்பை சமர்ப்பிக்கலாம்...


5 . கவிதைகளைப் பதிவு செய்யும் போது , இறுதியில் 'மற்ற போட்டிக்கு சமர்ப்பிக்க' என்பதை மறக்காமல் சொடுக்குதல் அவசியம்...


6 . படைப்பில் , தலைப்போடு சேர்த்து - "இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை" - என்று தலைப்பில் இணைத்தல் அவசியம்... படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை சமர்ப்பிக்கும்போது , படைப்புகளைப் படிப்பவர்கள் , படைப்புக்களில் கருத்துக்கள் பதிவு செய்ய முடியாதவாறு , 'கருத்துரை அனுமதி இல்லை' என்று சொடுக்கி விடுதல் அவசியம்...


7 . போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான முடிவுகள் போட்டி கால அவகாசம் முடிந்த மூன்று மணி நேரம் கழித்து 15 பிப்ரவரி 2015 ஞாயிறு அன்று மாலை நான்கு மணியளவில் அறிவிக்கப்படும்...


8 . நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது...



வாருங்கள் தோழர்களே ... கரங்கள் கோர்ப்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம் ... இப்படி ஒரு செயலை வெற்றிகரமாக சாதித்துக் காட்டுவோம்...


அன்புடன்...
கிருத்திகா தாஸ்...

பரிசு விவரங்கள்

மொத்தம் மூன்று பரிசுகள் :

முதல் பரிசு : 750 ரூபாய்

இரண்டாம் பரிசு : 500 ரூபாய்

மூன்றாம் பரிசு : 250 ரூபாய்

ஆரம்ப நாள் : 15-Feb-2015
இறுதி நாள் : 17-Feb-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 18-Feb-2015

இன்னும் சற்று நொடிகளில் போட்டி | Competition at Eluthu.com



மேலே