எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெரு நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் மம்மி...

பெரு நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் மம்மி உட்கார்ந்த நிலையில் கண்டெடுப்பு

லிமா(பெரு), டிச. 14-

பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்ட பெண் மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லிமாவிற்கு தெற்கே, பழமையான நகரமான பச்சா கமக்கில் உள்ள கோவிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த 50 வயது பெண் மம்மி புதைக்கப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைமுடி மட்டும் இன்று வரை கொட்டாமல் அப்படியே உள்ளது ஆச்சர்யத்தை அளிக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள முசி டி கான்புளுயன்ஸ் மியூசியம் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் போது அதில் இந்த மம்மி காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இது போன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வயதுகளில் இறக்க நேரிட்டு, பல்வேறு நிலைகளில் புதைக்கப்பட்ட பல மம்மிக்கள் இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

லிமாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பச்சா கமக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு 1000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையை தோண்டிய போது எலும்பு கூடுகளாக 80 மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த மம்மிக்கள் 800 முதல் 1450 ஆண்டுகளுக்கு இடையே உள்ள காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்றும், அவர்கள் பச்சா கமக் என்ற கடவுளை வழிபட்டிருக்கவேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உலகின் முதல் ஆண் மற்றும் பெண்ணை படைத்தது தங்களது கடவுளான பச்சா கமக் தான் என்பது இவர்களது நம்பிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு : தன்சிகா
நாள் : 14-Dec-14, 6:04 pm

மேலே