எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருக்குறள் _________ இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்...

திருக்குறள்
_________


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

-திருவள்ளுவர்

->385வது குறள்(39வது அதிகாரம்)
->பொருட்பாலில் முதல் அதிகாரமான "இறைமாட்சி"யில் 5வது குறள்
->இறைமாட்சி என்றால் அரசனது சிறப்பு என்று பொருள்.
->தமிழ்நாட்டு மக்களின் குடும்ப அட்டையில்(Family Card) வரும் முதல் குறள்.


திருக்குறள் விளக்கம்
__________________

பொருள்வரும் வழிகளை உண்டாக்குதலும்,சேமித்தலும்,பாதுகாத்தலும் ,பயன்தரத்தக்க வழியில்
செலவழித்தலும் சிறந்த அரசின் பண்புகளாகும்.

என் கருத்து
__________

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலும் அரசனும் (அரசியல்வாதிகளும் )
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை வகுத்துவிட்டார் திருவள்ளுவர்.
ஆனால் இன்றோ அரசியல்வாதிகள் தமிழன் தமிழன் என்று மார்த்தட்டிக்கொள்ள திருவள்ளுவருக்கும் ,திருக்குறளுக்கும்
அங்கீகாரம் கிடைத்தாக வேண்டும் என்று போராடுவது போல் நடிக்கிறார்கள்.
திருக்குறள் கூறும் வழிமுறைகளை கேட்காமல் ,திருவள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்து என்ன பயன்.
தமிழன் தமிழச்சி என்று வெறும் வாய் வார்த்தை கூறாதே! மனதளவில் மனிதாபிமானத்துடன் நடந்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் தமிழனே...
அரசியல்வாதி எவனுக்கும் தமிழன்/தமிழச்சி என்று கூறிக்கொள்ள அருகதை கிடையாது...

தமிழ் நாட்டு மக்களின் குடும்ப அட்டையில் வரும் இரண்டாவது குறள்
_________________________________________________________


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.


-திருவள்ளுவர்

->322வது திருக்குறள்(33வது அதிகாரம்)
->அறத்துப்பாலில் கொல்லாமை எனும் அதிகாரத்தில் 2வது குறள்

விளக்கம்
________

கிடைத்த உணவைப் பலரோடு பகிர்ந்து உண்டு
உயிர்களைக் காப்பாற்றுதல் தலைசிறந்த அறமாகும்.


கருத்து
_______
தான் மட்டுமே நன்றாக வாழ வேண்டும்,
தனக்கு மட்டுமே அனைத்தும் கிடைக்க வேண்டும்
என்று சாதாரணமாய் நினைக்கும்
சாதாரண மனிதர்கள் வாழும் பூமி இது.
நாங்கள் என்ன மிருகங்களா ?
பகிர்ந்து உண்பதற்கு ...
மனிதர்கள் !
பிறர் கையில் இருப்பதை பறித்துச் செல்வோம்...


-பிரபாவதி வீரமுத்து




நாள் : 12-Mar-15, 7:59 pm

மேலே