எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆயிரம் எழுதினாலும் அவரவர் வேலை அவரவர்க்கு ________________________________________ கேள்வி...

ஆயிரம் எழுதினாலும் அவரவர் வேலை அவரவர்க்கு
________________________________________
கேள்வி தொடுத்தாய் சீதையை!
வேள்வி ஏறினாள் சீதையும்!
அன்றைய தினமே!
வேள்வி ஏறாமல்
கேள்விக்கு கேள்வி
பதில் ஆகியிருந்தால்!
கிடைத்திருக்குமோ 33%
இன்று...

33% என்பது
சமஉரிமை அல்ல!
எங்களின் அடையாளம்!

ஒவ்வொரு
வீட்டிலும்
தாயாகவும்,
மனைவியாகவும்,
மகளாகவும்,
தங்கையாகவும்,அக்காவாகவும் (சகோதரி)
அண்ணியாகவும்,
மாமியாராகவும்,
அத்தையாகவும்,
பள்ளியிலும் கல்லூரியிலும்
வேலைபார்க்கும் இடங்களிலும்
தோழியாகவும் ,
உங்களுக்கு உற்ற துணையாக
இருக்கும் பெண்களின்
அடையாளத்தை
ஏன்
அவர்களுக்கு தர
மறுக்கிறீர்கள்
என்று புரியவே இல்லை...

33%
என்பது
சமஉரிமை கூட அல்ல!
1/3(மூன்றில் ஒரு பங்கே!)

உங்கள் வீட்டு
பெண்களுக்கு
நீங்கள்
அங்கீகாரத்தை
கொடுக்க
ஆரம்பித்தால் தான்
என்றைக்காவது
ஒருநாள்
எங்கள் கனவும்
நிறைவேறும்...

ஆயிரம் ஆயிரம்
புதுமைப்பெண்கள்
இங்கே உண்டு...
ஆனால்
பாரதி இல்லையே!





நாள் : 4-Jul-15, 1:05 pm

மேலே