எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ர, ற வார்த்தைகள் வரும்பொழுது எனக்கு நிறைய தவறுகள்...

ர, ற வார்த்தைகள் வரும்பொழுது எனக்கு நிறைய தவறுகள் ஏற்படுவது உண்டு... சற்று ஆழ்ந்து படிக்கலாம் என்று துவங்கிய பொழுது அகர வரிசையில் உள்ள வார்த்தைகளே மலைப்பை உண்டாக்கியது .... படித்ததை பகிர்ந்துள்ளேன் .... மேலும் படிக்க பகிரலாம் என்றுள்ளேன் ....

சொல் - பொருள்

அர்க்கம் - தானிய விலை
அற்கா - நிலைக்காத
அற்கு - நிலையான

அர்ச்சி - அர்ச்சனை செய்
அற்சிரம் - முன் பனிக் காலம்

அர - பாம்பு
அற - முழுவதும், மிகவும், நீங்க

அரக்கு - சிவப்பு மெழுகு, Rub
அரங்கு - நாடக மேடை
அறக்கடை - பாவம்

அரம் - இரும்பைத் தேய்க்கும் கருவி
அறம் - தருமம்

அரயன் - அரசன்
அரவம் - ஓசை, பேரொலி, பாம்பு
அரவர் - தமிழர்
அரவு - பாம்பு
அறவன் - தருமவான்
அறவி - புண்ணியம் தேடு

அரள் - திகைப்படைந்து அச்சமுறு
அறள் - அறுந்து பிரிதல் severance

அரி - நெற்கதிர், கள், பனங்க்கருக்கு
அறி - தெரிந்துகொள், உணர்

அரன் - சிவபெருமான், கடவுள்
அறன் - அறம், தரும்ம்

அரா - பாம்பு, ஆயிலியம் என்ற நட்சதிரம்
அறா - நீங்காத, எப்பொதும் உள்ள்

அரிமணை - காய்கறிகளை ந்றுக்க உதவும் கத்தி
அறிமடம் - அறிந்தும் அறியாத்து போல் வாளாவிருத்தல்

அரிய - அருமையான, விலை மிகுந்த
அறியாமை - மடமை

அரு - உருவமற்றது
அறு - இடையில் விட்டுப் போ

அருகம் - சமண மதம், தகுதியுடையது
அறுகம்புல் - ஒருவகை புல்

அருகல் - குறைதல்
அருகு - குறைந்து போ
அறுகை - அறுகம் புல்
அறுகு - அறுகம் புல், சிங்கம், புலி, யாளி

அருத்தி - மிக்க ஆசை
அறுதி - முடிவான, வரையறை, எல்லை, உரிமை

அரும்பு - மொட்டு, அரிசி, முகிழ்தல், தோன்று
அறும்பு - கொடுமை, பஞ்சகாலம்

அருவர் - தமிழர்
அறுவர் - ஆறு பேர்

அரை - பாதி, இடுப்பு, அரைத்தல், தேய்ந்து போ
அறை - அடித்தல், வீட்டின் ஒரு பகுதி, விடை

அரைகுறை - முற்றுப்பெறாமை
அறைகூவு - போருக்கு அழை

பதிவு : முரளி
நாள் : 30-Aug-15, 12:32 pm

மேலே