எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நல்ல ஒரு அரங்கம் ஆனால் கெட்டு குட்டி சுவராய்...


நல்ல ஒரு அரங்கம் ஆனால் கெட்டு குட்டி சுவராய் விட்டது.

மாமியார், மருமகள், நாத்தனார், கொழுந்தியா, மச்சான், பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, அண்ணன், அண்ணி, தம்பி - உறவுகள் குடும்பக்கோயில் கோபுரத்திற்கு படிக்கட்டுகள். அவசியம் உணர்வு பரிமாற்றங்கள் இலக்கிய ரசனைக்கும் மன பிரதிபலிப்புக்கும் ஏற்றது தான்.

ஆனால் நடப்பது என்ன?

இப்படிப்பட்ட உறவுகளின் ஏக்கங்களும் பெருமூச்சுக்களும் ஈகோக்களும் எதார்த்தங்களும் ஏமாற்றங்களும் நடிப்பெனும் நாடகத்திறமையை
ரசிக்கும்படி அமைத்தால் யாவரும் ஏற்றுக்கொள்வர் - ஆனால் வியாபார நோக்கில் விருந்து விஷமாகி விட்டது தான் விஷயம்.

மக்களின் பொறுமையை சோதிப்பது,  இதயத்துடிப்பையும் அதிகரிக்க செய்வது எரிச்சலைத்தான் உண்டு பண்ணுகின்றன. இது போதாது என்று அளவில்லாமல் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்க்கும் போது
மக்களால் சகித்துக்கொள்ளவே முடியாது போகிறது.
 
சென்சார் போர்டு மட்டும் பத்தாது, மனித உரிமை கமிஷன்களும் காட்சி அமைப்புக்களை கதைகருக்களை ஏற்றதா இல்லையா எனப்பார்த்து அனுமதித்தால் மட்டுமே தொலைக்காட்சி இனிக்கும் இல்லை சலிக்கும் தொலைகாட்சி தொல்லைகாட்சியாக மாறி விடலாம். 


பதிவு : செல்வமணி
நாள் : 25-Sep-15, 12:00 am

மேலே