எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கீதை காட்டும் பாதை உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!...

கீதை காட்டும் பாதை உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக உயர்ந்த அறிவுரை. அது கலப்படமில்லாத சத்தியமுமாகும். அவர் சொல்கிறார்:



தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும் இழிவுபடுத்திக்
கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே பகைவன்.

ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த நிலைக்குப் போக இயல்பாகவே ஆசை இருக்கிறது.
ஆனால் பெரும்பாலானோரும் அதை யாராவது தங்களுக்காக செய்து தர
ஆசைப்படுகிறார்கள். கடவுளோ, குருவோ, தலைவனோ, நண்பனோ, அல்லது வேறு யாராவது
செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள்
. இப்படி உயர்ந்த
நிலைக்குப் போகும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஒருவர் தாழ்ந்த
நிலையிலேயே தங்கி விடுவதற்கு நிரந்தரக் காரணமாகி விடுகிறது.

இலக்கை அடையும் ஆவலை இயற்கையாகவே அவனிடம்
ஏற்படுத்திய இறைவன் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியையும்,
சந்தர்ப்பங்களையும் அவனுக்கு ஏற்படுத்தித் தராமல் இல்லை. எது நல்லது எது
கெட்டது என்றும், இலக்கை அடைய எது தேவை, எது தேவையில்லை என்றும்
பகுத்தறியும் அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும்
அவன் அதற்கேற்றாற் போல தன் மனதும், நடவடிக்கைகளும் இருக்கும்படி பார்த்துக்
கொள்ளா விட்டால் அவன் தன்வசமில்லை என்று பொருள். உயர வேண்டும் என்ற
நோக்கமும் இருந்து, அதற்கான வழியும் தெரிந்து, அதன் படி அவனால் நடக்க
முடியவில்லை என்பதால் அவனுக்கு அவனே பகைவன் ஆகி விடுகிறான்.

முழுவதும் படிக்க...

பதிவு : vaishu
நாள் : 14-Oct-15, 12:23 pm

மேலே