எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் எழுத்து நண்பர்களுக்கு...

நேற்று ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் எழுத்து நண்பர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்கு மிகுந்த தயக்கத்துடன்தான் சென்றேன். ஆனால் அரங்கத்திற்கு உள்ளே சென்றதும் உறவினர் ஒருவரின் சுபநிகழ்ச்சிக்கு வந்துவிட்டோமோ என்பதான சூழல் நிலவியது. எழுத்து நண்பர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். புகைப்படத்தில் பார்த்ததை விட அவர்கள் நேரில் சற்று வேறுமாதிரி இன்னும் நன்றாகவே இருந்தார்கள். 

விழா அரங்கத்திற்கு வழிதெரியாமல் ரோட்டில் ஒருமணிநேரமாக சுற்றிக்கொண்டிருந்த என்னை ஆற்றுப்படுத்தி அரங்கத்திற்கு வழிகாட்டிய பொள்ளாச்சி அபி சார் அவர்களுக்கும், விழாவிற்கு வந்தே ஆகவேண்டும் என்றும் பாதியிலேயே வேறுஒரு அலுவல்  காரணமாகக் கிளம்ப இருந்த என்னை தடுத்து நிறுத்தி விழாவின் கடைசிவரை  இருக்க வைத்த ஜின்னா அவர்களுக்கும், விழா முடியும்வரை கூடவே இருந்த குமரேஷன் கிருஷ்ணன், கனா காண்பவன், மனோ ரெட், அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

அகன் சார், ராஜன் சார், திரு கருணாநிதி அவர்கள், திரு முரளி அவர்கள், திரு பழனிகுமார் அவர்கள் , புதிய கோணங்கி, சந்தோஷ் குமார், கவிஜி, ஆசை அஜித், சுஜய் ரகு, சேகுவேரா கோபி,   சியாமளா மேடம், சாந்தி மேடம், புலமி, இவர்களைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி.
 
பேராசிரியர் க அன்பழகன் அவர்களையும் இனமான தலைவர் கி வீரமணி அவர்களையும் ஈரோடு தமிழன்பன் அவர்களையும் மற்றும் சில பிரபல்யங்களையும் அருகே பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதில் பெருமகிழ்ச்சி. 

கவிக்கோ அரங்கத்தில் இருந்து குமணன்சாவடிவரை தன்னுடைய பைக்கில் ட்ராப் பண்ணினார் ஆசை அஜித். அவருக்கும் நன்றிகள்.

நண்பர் ராம்வசந்த் அங்கே வந்திருந்தால் விழா எனக்கு இன்னும் முழுமை பெற்றிருக்கும். ஆனால் அவர் ஹைதராபாத்தில் இருந்துகொண்டு அடம் பிடிக்கிறார். 

ரொம்பநாட்கள் கழித்து நேற்றிரவு நல்ல வெளிச்சமான ஓர் உறக்கம் வாய்த்தது`

நாள் : 19-Oct-15, 9:16 am

மேலே