எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நூல் ஓர் அறிமுகம் - தென்னங்கீற்றுகளின் சாட்சியாக :...

நூல் ஓர் அறிமுகம் - தென்னங்கீற்றுகளின் சாட்சியாக :


இணையதளத்தில் படிப்பது எனக்கொரு வசதி தேவையான விடயத்தை மட்டும் படித்து விட்டு கருத்தை எழுதிவிடுவேன், சமீபத்திய ஒரு உதாரணம் இலக்கிய முரசு திரு அகன் அவர்கள் இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டியும்  அதனால் இந்திய பொருளாதாரம் எப்படி முன்னேறும் என்றும் ஒரு சிறு கட்டுரையை பகிர்ந்திருந்தார்,  இதே போல் திரு.மலர்1991 போன்றோர்களும் சமூக,பொருளாதார/மொழி சார்ந்த விடயங்களை எழுதி வருகிறார்கள் ,  இதென்ன எப்போதும் போராளிபோல என்று நினைத்தாரோ தெரியவில்லை காதல் கவிதைகள் நிறைந்த ஒரு நூலை காயத்ரி தேவி என்பவர் எழுதியுள்ளார் அவர் சம்மதித்ததின் பேரில் நானே (மங்காத்தா பதிப்பகம்) வெளியிடப்போகிறேன் என்று இந்த புத்தகத்தை பாருங்கள் என்று எனக்கு அனுப்பி வைத்தார் பார்த்தேன், படித்தேன் பிரமித்தேன் அட்டை முதல்  ஒவ்வொரு பக்கத்திலும் வண்ண மலர்களாலும், நவீன பெண் ஓவியங்களால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது அதில் உள்ள படைப்புகளும் எனக்கு ஒரு புது வித அனுபவத்தை தந்தது என்பது உண்மையே (ஒரு வேலை முதல் முறையாக ஒரு புத்தகம் முழுவதும் காதல், காதல்.. காதல்... என்பதாலோ என்னவோ) எப்படி இருப்பினும் அணிந்துரை, முன்னுரையில் இருந்து ஒவ்வொரு கவித்தலைப்பும்  கவி வரிகளோடு இணைந்தே வந்துள்ளது, இந்த எழுத்தாளர் எனக்கு அறிமுகம் இல்லாதவர் அன்றியும் இவர் படைப்புக்களை பார்த்தால்  இவரோட சொந்த உள்ளுணர்வுகளின் வெளிப்பாடோ? என்று எனக்கு தோன்றுகிறது அதிலும் ஒரு துளி 'காத்திருக்கும் விடியல்' என்ற தலைப்பில் நடுவில் வரும் வரிகள் " அடுத்த மாதம் ஆடியாமே? ஆவணியில் தேதி வைக்க அவசரமாய் தாக்கல் ஒன்றை இப்பொழுதே சொல்லி விடு, முந்தி வரும் கார்திகயோ, பிந்தி வரும் தை மாதமோ, மணநாளை நீட்டி வைத்து உன்னோடு என் வாழ்நாளை தேய்ந்து போக வைக்காதே'  இன்னும் நிறைய படித்ததில் பிடித்த வரிகள் உள்ளன இதில்,   ஆசிரியர் காயத்ரி தேவிக்கும், வெளியிடப்போகும் மங்காத்தா பதிப்பகத்தாருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் வாழ்த்துக்கள்.

மு.ரா. 

நாள் : 3-Jan-16, 4:16 am

மேலே