எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நந்தினி |சூர்யா| ஜாஸ் ஏ நந்தினி இங்க பாரேன்......

நந்தினி |சூர்யா| ஜாஸ்

ஏ நந்தினி
இங்க பாரேன்...

செல்லரிச்சு போன இந்த மரம்
செம்மையா வளந்திருக்கு
எப்புடி?

செதஞ்சி போன 
இந்த நாட்கள்ள
சரியாமா 
மிச்சம் மீதி 
ஒட்டிட்ருக்க உயிரோட
கலந்திருக்க
நம்ம நட்பு மாதிரி.....

ஓ...

நண்பர்கள்ளாம் 
காலையில இருந்து
ஒன்னா இருந்தாலும்
ஏன் விட்டுட்டு போகும்
போது
பாதி தூரம் போய்ட்டு 
திருப்பியும் ஓடி வந்து 
பாத்துகறாங்க.....

இந்த கடல் அலையும் 
மண்ணும் நம்மள
மாதிரியே தான்...

அலை அதோட 
நண்பன பாக்க
வேகமா வந்து 
அப்படியே கட்டி 
அணைச்சிக்கும்...
விட்டு பிரியர 
அந்த நொடி 
அங்கயே உயிர விட்ரும்
நுரை தப்பி 
வெறும் உடல்
மட்டும் போகும்...
அந்த உடலும்
திருப்பியும்
ஏன் நண்பன பாக்கபோறனு 
பல ஆயிரம் மடங்கு உயிர உள்ள 
கொண்டு வந்திடும்...

திருப்பியும் திருப்பியும்
போய்டு சலிக்காம
பாத்துட்டே இருந்தாலும்
விட்டு பிரிஞ்சு வர
அந்த நொடி 
தான் உயிர மண்ணோட 
கரைச்சிட்டு வெறும்
உடம்ப மட்டும்
பாரமா சுமந்திட்டு வரும்.....


அதே மாதிரி பல நாட்கள் இல்ல
பல வருஷம் ஒன்னா
இருந்த 
நண்பர்கள்
விட்டு பிரிஞ்சு போகும் 
போது மனச கல்லாக்கிட்டு 
போனாலும்
ஒரு நாலு எட்டு எடுத்து வச்ச உடனே 
திருப்பியும் ஓடி வந்து 
பாத்து கட்டிபிடிச்சிக்கறாங்க...

அப்ப ரெண்டு பேரும் இப்படிதான் 
யோசிச்சிப்பாங்கனு நெனைக்கறன்...
" ரெண்டு பேரும் வீடும் பக்கத்துல பக்கத்துல இருக்கலாமில்ல"

அவங்க ரெண்டு பேரும்
விட்டு பிரியர அந்த தருணம் ...
அவங்க சேந்து நிக்கற அந்த இடத்துலயே 
ரெண்டு பேரோட உயிரும் போய்டுச்சி...

இப்ப வெறும் உடம்ப சுமந்துகிட்டு நடபொணமா (நடை பிணமா) சந்தோஷத்த எல்லாம் மறந்து அவங்க அவங்களுக்கான பாதையில சருகா நடக்க ஆரம்பிச்சிட்டாங்க...

சருகு சாம்பலாகறதுங் காட்டியும் 
ஒரு தடவ உன்ன பாக்கணும் N|SJ




நாள் : 24-Feb-16, 6:53 pm

மேலே