எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோற்பத்தி… இப்படி வரிசையாகச்...

பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோற்பத்தி… இப்படி வரிசையாகச் சொன்னால்… ஏதோ மந்திரம் என்று நினைக்கத் தோன்றும். இவை எல்லாம் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள். ஆனால், பாருங்கள், எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. இந்தப் பெயர்களின் தமிழ்ப் பெயர்களாக நற்தோன்றல், உயர் தோன்றல், வெள்ளொளி, பேருவகை, மக்கட் செல்வம்... எனப் பெயர்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், காலண்டர்களில் இந்தத் தமிழ்ப் பெயர்களை யாரும் குறிப்பதில்லை.
தை மாதம்தான் தமிழின் முதல் நாள் என்பவர்களும் உண்டு. இருப்பினும் சித்திரை முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, புத்தாண்டெல்லாம் எப்போது தோன்றியிருக்கும்? 
பழைய கற்காலம் தொட்டே காலண்டர் இருந்திருக்கிறது. 
அது படிப்படியாகச் செம்மையாகி இப்போதுள்ள வடிவத்தை அடைந்திருக்கிறது. சூரியனை மையமாக வைத்துப் பிரித்தல், சந்திரனை மையமாக வைத்து மாதங்களைப் பிரித்தல் என இரு வகையான காலண்டர்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. 
இப்போதைக்கு யாராவது இந்த சித்திரை முதல் நாளில், 'துர்முகி ஆண்டு வாழ்த்துக்கள்!' என்று சொன்னால் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, ஏற்றமான ஆண்டாக இந்த ஆண்டை மாற்றுங்கள்.

~ தினமலர் பட்டம்

நாள் : 12-Apr-16, 9:36 am

மேலே