எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மண்ணில் பூத்த வைரமே.... உன் இதழில் இருந்து வரும்...

மண்ணில் பூத்த
வைரமே....
உன் இதழில்
இருந்து வரும்
சொற்கள் எல்லாம்
முத்துக்கள்.....
நீ எழுதும் 
ஒவ்வொரு எழுத்தும்
கவிதை தான்...!
சொந்த மண்ணைவிட்டு
சென்ற நீ
பிறந்த மண்ணை
மீண்டும் வந்து
மிதித்த போது
எத்தனை ஆனந்தபட்டாய்
என்பது
உன் விழிகளில் 
இருந்து சிந்திய
கண்ணீர் துளிகள் 
காண்பித்தன...!
பிறந்த மண்ணை விட்டு
பிரிந்து சென்ற வருத்தமா...?
இல்லை
மீண்டும் வந்ததால் வந்த
ஆனந்த கண்ணீரா...?
உம்மை போன்று
மண்ணை நேசிப்பவனும் இல்லை...
காணும் ஒவ்வொன்றுக்கும்
கவிதை உயிர் கொடுத்து
வாசகர்களின் கண்முன்
உலாவ விடும் கவிஞனும் இல்லை...!

     கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் என்ற இரு நூல்களின் பொருட்டு தேனியில் 4.8.2007 அன்று " இரட்டை காப்பிய திருவிழா " நடந்தேறியது.

     அன்று நானும் அந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது எங்கள் கல்லூரியில் இருந்து அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சி முடியும் தறுவாயில் நான் இக்கவிதையை எழுதினேன் அவரிடம் காண்பித்து அவரது கையெழுத்தை பெற வேண்டும் என்ற (நற்)ஆசையில் ஆனால் விழா முடிந்தது தான் தாமதம் எங்களை உடனே அழைத்துச் சென்றுவிட்டனர். 
இக்கவி கவிஞர் திரு வைரமுத்து அவர்களுக்காக.....

நாள் : 17-Apr-16, 10:58 pm

மேலே