எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 12" தாயின்...

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 12"தாயின் அன்புக்கு இந்த உலகத்தில் இணையாக எதுவும் இல்லை.பத்து மாதம் மடி சுமந்து எத்தனையோ சுமைகள் தாங்கி ஒரு உயிரை உலகின் மடியில் புதிதாய் பிறக்கச் செய்கிறாள்  அம்மா. பிரவசம் என்ற சொல்லை உயிரோடு மரணம் என நினைத்தும் ஒரு தாய் தனக்குள் வாங்குகிறாள்.காலங்கள் கடந்த பின் குழந்தையின் பிஞ்சு விரலின் அன்றைய தொடுகை மரணம் வரை அதே போல் தாயின் உணர்வில் மொழியாகும்.

ஒரு தாயின் கஷ்டத்தை எந்த ஆணும் புரிந்து கொள்வது மிகக் கடினம்.சிறு தூரம் கூட வயிற்றோடு 
கல்லைக் கட்டி நடக்க முடியாது இருக்கும் நேரம் ஒரு தாய் எப்படி அத்தனை நாட்கள் கருவை சுமந்து புன்னகை பூத்து நடந்தாலோ நினைத்தாலே மேனி எங்கும் சிலிரிப்பு.ஒரு தாயின் நிலையை மண்ணில்  பிறந்த மனிதர்கள் அணைவரும் அறிவர்.ஏனென்றால்  எம்மை  சுமந்து வடிவம் வந்த கண் கண்ட தெய்வமும் அம்மா தானே!என் எண்ணம் உங்களை கவர்ந்து இருப்பின் உங்கள் உணர்வின் மொழிகளை தாயின் மகிமை போற்றும் சிற்பமாய் செதுக்குங்கள்.


  என்ன சொல்லி உன்னிடம் கொடுப்பேன்.
என் அன்னையே இந்த மலர் கொத்தை 
கன்னத்தில் முத்தம் வைத்தா இல்லை 
அன்பாக கட்டி அணைத்தா தெரியவில்லை


நாள் : 6-May-16, 8:35 am

மேலே