எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடந்து முடிந்த தமிழக தேர்தல் முடிவுகளில் நோட்டாவிற்கு மாத்திரம்...

  நடந்து முடிந்த தமிழக தேர்தல் முடிவுகளில்  நோட்டாவிற்கு மாத்திரம் 561244 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதாவது 1.3 சதவிகித வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. பல தொகுதிகளில் பல வேட்பாளர்கள் சில நூற்றுக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்கள். அதற்கு நோட்டாவுக்கு பதிவான வாக்குகளும் ஒரு காரணம். இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1.3 சதவிகிதம் வாக்குகள்  பதிவானதிற்கான காரணம் என்ன?  தாங்கள் விரும்பும் கட்சி சரியான வேட்பாளரை நிறுத்தவில்லை என்ற கோபமா? இல்லை தாங்கள் விரும்பும் கட்சி பொருத்தமில்லாத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்ற வெறுப்பா? கட்சிகளின் தாராளமான இலவச அறிவிப்புகளை விரும்பாத காரணமா?  நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற பொருளாதாரத் திட்டத்தை எந்தக் கட்சியும் அறிவிக்க வில்லை என்ற ஏமாற்றமா? நோட்டாவிற்கு பதிவான வாக்குகள் சாதாரண நிகழ்வு அல்ல. அது ஆய்வு செய்யப்பட வேண்டிய நிகழ்வு. அரசியல்கட்சிகள் நோட்டா வாக்குகள் குறித்து சிந்தித்தாக வேண்டும்.      

நாள் : 20-May-16, 7:55 pm

மேலே