எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 15"காதல் என்பது...

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 15"காதல் என்பது அனுமதியின்றி மனதின் நிலத்தில் ஆசை எனும் தூண்களால் வாழ்க்கையின் கோபுரத்தை முழுமையாக கட்ட முயல்கிறது.வாழ்க்கையில் காதலை கடக்காதவர்கள் யாரும் இல்லை..அப்படி கடக்காமல் இருந்தால் அவர்கள் கண்ணிருந்தும் பார்வை அற்றவர்கள்..நவீன இலக்கணம் காதலை காமமாக மாற்றி தீக்குச்சி இன்றி இருளை எரித்து கசக்கி விட்டு போகிறது..ஆனாலும் சில காதல் மட்டும் நெஞ்சுக்குள் வாழும் வரை உயிரோட்டமாக இருந்து கொண்ட இருக்கிறது..அது இறைவன் எழுதிய உணர்வுகளின் இலக்கியம்.


பல வருடகாலமாக காதல் செய்து தனிமைகள் கிடைத்தும் முத்தம் கூட காமம் என்று கண்களால் அன்பை பகிர்ந்து மரணம் வரை ஒன்றாக பயணிக்க என்னும் இரு மனங்கள் காலத்தின் காற்றாடியில் வான் நோக்கி பறக்கும் வழியில் சாதி எனும் விதியின் செயலால் நூலறுந்து போகிறது.பெண் நடக்க முடியாத அறைக்குள் கிடக்கிறாள்.ஆண் கடலில் மூழ்கியும் மரணம் இன்றி தவிக்கிறான்..கவிஞர்கள் காவியம் எல்லாம் இன்று பொய்யாகி போனதோ என்று இருவரின் மனதுக்குள்ளும் யுத்தங்கள்..

காலங்கள் படிப் படியாக நகர்கிறது..இவர்கள் செய்த காதல் நெஞ்சுக்குள் நினைவாக உயிரோட்டம் பெற்று வாழ்ந்தாலும் பெண் இன்னொருவன் மனதை ஏற்று திருமணம் செய்கிறாள்.ஆனால் ஆண் அவள் நினைவுகளின் கண்ணீரில் அவளை குழந்தையாக எண்ணி வாழ்க்கை வாழ்கிறான்.

இருவரும் வாழ்க்கையில் பட்ட காயத்தை ஆற்ற முடியாமல் எழுத்துக்களை நாடி காவியம் எழுதும் சந்தையில் மனதை விலையாக கொடுத்து காதலை கவியாக வாங்குகின்றார்கள்.இருவரும் வேறு வேறு ஊரில் வாழ்ந்த போதிலும் ஓர் இலக்கிய மேடையில் தாடி வைத்த கவிஞனாய் இவனும் சிவந்த கண்ணின் காரிகையாக இவளும் இலக்கியத்தின் தரத்தால் கெளரவிக்கப்படுகின்றனர்.

நாள் கணக்கா பேசிய இதழ்கள் மணிக் கணக்காய் கூட வார்த்தையின்றி கண்களை பார்க்கிறது..பிரிந்து செல்லும் பாதையில் அவர்கள் காதலின் சின்னமாய் பெயர் பதித்த ஒரு தூணில் கை வைத்து கல்லை அணைக்கும் நேரம் அவனின் கையும் அவளின் கையும் ஒன்றாய் இணைகிறது..நொடிகளில் அவள் கைகளை எடுத்து கொள்கிறாள் அவள் இன்னுமொருவன் துணையை பெற்ற பெண்ணின் இலக்கியம் என்பதால் ஆனால் தாடி வைத்த காதலன் அங்கே உறைகிறான்..அவள் மனம் தாங்காமல் வாய் விட்டு பேச அவன் தோள்களில் கை வைக்கும் நேரம் அவனும் இறந்து சில நொடிகள் ஆகி போகிறது.

இந்த காட்சிகள்  உங்கள் மனதில் நிச்சயம் காதலை நினைவு படுத்தினால் இந்த காட்சிக்கு   மனதின் வார்த்தைகளால் இலக்கியம் எழுதுங்கள்..தோற்ற காதலின் காயத்தில் அஞ்சலி செலுத்துங்கள்..


நாள் : 27-Jun-16, 10:13 pm

மேலே