எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

லெனின் மரணத்துக்கு யார் பொறுப்பு? ################################################## ரி லையன்ஸ்...

லெனின் மரணத்துக்கு யார் பொறுப்பு?


##################################################

ரிலையன்ஸ் நிறுவனமே பல வங்கிகளுக்கு ரூ. 1,25, 000 கோடி  கடன் பாக்கி வைத்திருக்கும்போது, அந்நிறுவனத்திடமிருந்து இந்தக் கடனை வசூல் செய்யும் வேலையை 
ஸ்டேட் வங்கி போன்ற  பொதுத்துறை வங்கி எப்படி கொடுக்கமுடியும். 

@@@@@

லெனின் என்ற வேலையில்லாத பட்டதாரி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது அதிர்வலைகள் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்டேட் வங்கியிடம் பெற்ற கல்விக் கடனை வட்டியுடன் கட்டச் சொல்லி ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பலமுறை தொலைபேசி அச்சுறுத்தல் வந்ததாகவும் அதனால் அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது ஏழைப் பெற்றோர்கள் கூறுகிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தமிழகத்துல் உள்ள பல பெற்றோரிடமும், மாணவர்களிடம் தொழிற் கல்வி பற்றி சரியான புரிதல் இல்லை. இன்று கல்வியிலும் மதிப்பெண் வழங்குவதில் தாரளமயமாக்கல் கொள்கை நிறைவேற்றப்படுவதால்  கடுமையாக உழைக்கும் மாணவர்களில் பலர் 100/100ஐ வாரிக் குவிக்கிறார்கள். அடிப்படையே தெரியாத மாணவர்கூட முதல் வகுப்பில் (60%) தேர்ச்சி பெறும் அவலநிலை ஏற்படுகிறது. அந்த முதல் வகுப்பு தாத்தா காலத்து 30%க்குக்கூட சமமாக இருக்காது என்பது ஆசிரியர், பெற்றோர்க்கே தெரிவதில்லை. கல்வியில் தேர்ச்சி விகிதம் எந்த அளவுக்கு உயர்த்தப்படுகிறதோ அந்த அளவுக்கு கல்வித்தரம் உயரவில்லை. 

#@@###

பெரும்பாலான பெற்றோரும் மாணவர்களும் தொழிற் கல்வி பயின்றால் அதிகச் சம்பளத்துடன்கூடிய உடனடி வேலை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அது தவறல்ல. 80% மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் தொழிற் கல்வியில் சேர்ந்தால் படிப்பு முடியும்வரை கடுமையாக உழைக்கவேண்டும்.    படித்த பாடங்களில் ஆழ்ந்த புலமையும் திறமையும் இருப்பதுடன் ஆங்கில மொழி அறிவில் தேவையான அளவுக்குத் திறமையும் இருக்கவேண்டும்.. இல்லையேல் அவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் ப்யனும் இல்லை. எந்த வேலைக்கும் தேர்வு செய்யப்படமாட்டார்கள். 
@@@@
$$$$$$
ஜேஎன்யு , மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களில் 95%  மதிப்பெண்     சிபிஎஸ்ஸி  பாடத்திட்டத்தில் பெற்ற மாணவர்கூட கலை அறிவியல் கல்லூரிகளில் பொருளாதாரம், வரலாறு பட்டவகுப்பில் சேர்ந்து அறிவை வளர்த்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் பணிக்கு வருகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு மாணவர் நாட்டின்  முதல் 10 இடத்தில்  நான்காவர்து இடத்தில் இருக்கும் ஒரு மைய அரசின் மருத்துவக் கல்லூரியில் எம்டி  3 ஆண்டு படிக்கும்போது ஐஏஎஸ் தேர்வு எழுதினார். ஆனால் நேர்முகத் தேர்வில் பல்டி அடித்தார். காரணம் சமூகம் பற்றியும்  , பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி போன்ற அடிப்படை அறிவு இல்லாததால் அவரால் நேர்முகத் தேர்வை சமாளிக்க முடியவில்லை. அவர் புதுச்சேரியின் மிகச் சிறந்த பள்ளியில் படித்து மாநில அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றவர், 
@@@@
2001ஆம் ஆண்டு மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பி.ஏ சோசியாலஜி படித்த மாணவி தனது இரண்டாவது முயற்சியில் ஐஏஏஸ் தேர்வில் அனைத்திந்திய அளவில் 10ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார். அது எப்படி சாத்தியமாகிறது.குறிக்கோளும் கடுமையான உழைப்பும் இல்லாதவர்கள் உயர்கல்வி கற்கச் செல்வது வீண் வேலை. 
@@@@@@

குறைந்த மதிப்பெண் பெற்று, இடம் கிடைக்கிறதே என்று உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து பட்டம் பெற்ற பதர்களாக இருப்பதைவிட ஒரு தையற் கலைஞர் பணியை ஓராண்டு கற்றுக்கொண்டால் ஒரு  நாளைக்கு ரூபாய் 2000/- வரை சம்பாதிக்கலாம். ஒரு சலவைப் பெட்டியை வைத்துக் கொண்டு பாதையோரம்  துணிகளைத் தேய்த்துக் கொடுப்பவர் கூட ஒரு நாளைக்கு ரூ. 500/-க்கு மேல் சம்பாதிக்கிறார்.  வாகனங்களைப் பழுது பார்க்கும் தொழிலை ஆரவமுள்ளவர் ஓராண்டுக்குள் கற்றுக் கொண்டால் ஒரு நாளைக்கு ரூ. 5000/- வரைகூட சம்பாதிக்கலாம். எனவே பெற்றோர்களும், ஆசிரியர்களும் தொழில் கல்வி பற்றிய தங்கள் அறியாமை இருளை அகற்றவேண்டும். 

பதிவு : மலர்91
நாள் : 28-Jul-16, 7:46 am

மேலே