எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிசு அம்மா...! உன் கருவில் உருவானது வருமென்று நினைத்தேன்...

                     சிசு 

அம்மா...! 
உன் கருவில் உருவானது வருமென்று நினைத்தேன் நான்....!
ஆனால் சாபமென்று தூக்கி எரிந்தாயோ?  
நான் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டாமென்று என்னை கருவிலே சிதைத்தாயோ?
பெண்ணாய் மலர்ந்ததும் இல்வாழ்க்கை தொடர  உன்னை பிரிவேனென்று அஞ்சினயோ? நானும் உன்னைப்போல என்னுள் பூக்கும் பெண்சிசுவை-
கிள்ளியெறிவேனேயென்று,  எனற்கு உன் கருவிலேயே கல்லறை கட்டினாயோ?  
கண்ணீருடன் நான், உன்  கண்களில் கரைகிறேன்.....! 
சிகப்பு மலராக, பூக்கும் முன்னே  வாடி உதிருகின்றேன்...!
 போய் ஆண்டவனிடம் சேருகிறேன்...!    


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : Shyamala G
நாள் : 30-Aug-16, 3:34 pm
மேலே