எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரபல ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷயரின் ஓவியக் கண்காட்சி :...

பிரபல ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷயரின் ஓவியக் கண்காட்சி : மெக்ஸிகோ நகரில் துவக்கம்
பிரபல ஓவியரான ஸ்டீபன் வில்ட்ஷயரின் ஓவியக் கண்காட்சி அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோ நகரில் துவங்கியது. பரந்து விரிந்த மிகப்பெரிய நிலப்பரப்பில் உள்ள நகரக் கட்டிடங்களை ஒரு முறை பார்த்தவுடனே எளிதில் வரையும் திறன் படைத்தவர் இவர். பனோரமா ஓவியங்கள் என்றழைக்கப்படும் பரந்து விரிந்த ஓவியங்கள் மூலம், அச்சு அசலாக பல நகரங்களின் உருவ அமைப்பை வரைந்து இவர் சாதனை படைத்துள்ளார். இவரின் நெடுநாள் ஆசை மெக்ஸிகோ நகரில் கண்காட்சி நடத்துவது.  அதன் படி தமது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக மெக்ஸிகோ நகரில் தாமே நேரடியாக ஓவியம் வரைந்து அதனை கண்காட்சியில் வைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இது பற்றி கருத்து தெரிவித்த அவர், முதன்முதலாக மெக்ஸிகோ நகர் வந்துள்ளதற்காக மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். மெக்ஸிகோவை ஹெலிகாப்டரில் பார்வையிட்டு பின் ஓவியமாக வரைவது கடினமாக இருந்ததாக தெரிவித்த அவர் நகரின் உருவ அமைப்பை நினைவுபடுத்தி கொண்டே வரைந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் கண்காட்சியில் ஸ்டீபனின் முந்தைய படைப்புகளான நியூயார்க், ரோம், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களின் பனோரமா இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக கண்காட்சி யில் பங்கேற்க வந்த அவர், மெக்ஸிகோ நகரை ஹெலிகாப்டரில் ஒருமுறை பார்வையிட்டு பின் அதனை ஓவியமாக வரைந்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார். 
மேலும் படிக்க

நாள் : 25-Oct-16, 3:54 pm

மேலே