எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் என்னைப் பார்த்தாள் என்ற ஒரே காரணத்துக்காகவும் காதல்...

அவள் என்னைப் பார்த்தாள் என்ற ஒரே காரணத்துக்காகவும் காதல் வரும் தெரியுமா?? அது ஒரு அற்புதமான வயது. யாருக்கும் சொல்லாமல் மெளனமாய் காதலிப்பதில் உள்ள இன்பங்கள் எத்தனை சுகம்.. எத்தனை அக்காக்கள்.. எத்தனை டீச்சர்கள்.. ஐந்தில் இருந்து ஆறாம் வகுப்புக்கு மாறியபோது நம்மைவிட்டு பிரிந்த பனிமலர்கள் எத்தனை..
பக்குவமான பின்னரும் பக்குவமில்லாமல் ஒரு காதல் வரும், நாம் தேடுகின்ற தேவதைகள் நமது கண்களுக்கு எட்டவே மாட்டார்கள்.. காய்ந்து கருகிப்போன நாட்களில் அவளுடய தரிசனம் கிடைக்கும்..
காதலைச் சொல்வதற்குள் கண்ட கருமாந்தரங்கள் எல்லாம் வந்து தொலையும்..
மூச்சு முட்டும்.. தொண்டை அடைக்கும்.. நெஞ்சுக்குள் ஹிட்லர் வந்து குடியிருப்பதுபோல் இருக்கும்.. ஒற்றைத்தலையணையில் எத்தனை ஆனந்தக் கண்ணீர் துகள்கள்.. கட்டிலில் கட்டிய கோட்டைகளுக்குத்தான் அளவிருக்குமா?.. இளையராஜாவை முத்தமிடாத குறைகள் தீருமா??
சுக்விந்தர் சிங் போல "உலக அழகி யாரும் உன் அழகில் பாதி இல்லை" என்று மூக்கால் கனைத்துக்கொண்டு அழைந்திருப்போம்..
எல்லாமாகி
நொந்து நூலாகி, அந்து அவலாகி, சோகப்பாடல்களில் மெய் மறந்து, (அப்போதும் அதே இளையராஜாதான்) வாழ்கையே போச்சு என்று குப்புற படுத்து, கடவுளை வஞ்சித்து, தலையணைகளை ஈரமாக்கி, சொல்லமுடியாமல், மெல்லமுடியாமல் சோகமாய் வதைபட்டது எவ்வளவு பேரானந்தம்..
காதல் ஒரு கடல் மச்சான் என்று சொல்லி திரும்பும் போதே ஒரு பாட்டி தாத்தாவுக்கு மூக்கு கண்ணாடி சொருகி விடுகிறார்..
இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒரு தாத்தா எப்போதும் பளிச்சென்ற வெள்ளை ஆடையோடு சதா பழைய காதல் பாடல்களையே பாடிக்கொண்டிருப்பார், பாட்டி இறந்த பின்னும், காடு வா வா என்றழைக்கின்ற வயதில் அவருக்குள் இருப்பது எந்தவகைக்காதல்??.. அவர்தான் குசும்புக்கார தாத்தா..
நமது அம்மாக்களின் காதலை நாம் யாராவது உணர்ந்ததுண்டா??.. நமது அப்பாக்களின் காதல்??.. எத்தனை ஆறுதல்கள் அவர்களுக்குள் அவர்களை இணைத்திருக்க வேண்டும்? ஒரு வாரமாய் சண்டையில் அழுதுகொண்டு ஆக்கிப்போடும் அம்மாக்களினதும், கோபம் கலைக்க துடிக்கும் அப்பாக்களினதும் மன நிலைகளை நாம் உணர்ந்ததுண்டா??..
அம்மாக்களும் அப்பாக்களின் பனிமலர்கள்தானே..
இதைவிட நமக்கு வேறு ஏது காதல் காவியம்..

பதிவு : றிகாஸ்
நாள் : 4-Dec-16, 11:08 pm

மேலே