எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர்களுக்கு மட்டும் பாரம்பரியம் கிடையாதா? @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ பெரும்பாலான இந்திய...

தமிழர்களுக்கு மட்டும் பாரம்பரியம் கிடையாதா?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


பெரும்பாலான இந்திய மொழிகள் தோன்றாத காலத்திலேயே உன்னத இலக்கியம் கண்ட

 மொழி நம் செம்மொழி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ங்க காலத்தில் இருந்தே ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டு    தமிழர்களின் பாரம்பரிய

 விளையாட்டாக தொய்வின்றி நடக்கும் விழா, ஏறுதழுவதல் மதம் சார்ந்த விழா அன்று.

 பொங்கல்  திருநாளின் சிறப்பே ஏறுதழுவதல் தான். அது தமிழ் இனத்தின் பண்பாடு

 சம்பத்தப்பட்ட நிகழ்வு. இதைதான் ஜல்லிக்கட்டு என்பர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காளையின் கொம்பில் சல்லிக்

 காசைக் கட்டி    தமிழ் இளைஞர்கள்       ஏறுதழுவி     அதை எடுப்பதே      


    சல்லிக்கட்டு.      

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 சல்லிக்கட்டு பின்னாளில்            பிற மொழிகளின்

 தாக்கத்தால் ஜல்லிக்கட்டாக மாற்றப்பட்டுள்ளது. 
########################################################

முதலில் ஜல்லிக்கட்டு என்ற பெயரை தூக்கிவிட்டு ஏறுதழுவுதல் என்ற தமிழ்ப் பெயரைச்

 சூட்ட ஆவண செய்யவேண்டும். 

####################################################################################

னவிலங்கான யானைகளை  கோயில்களில்    சங்கிலியால்                    கட்டி வைப்பதும் 

தெருக்களில் காட்சிப் பொருளாக நடக்கவைப்பதும்,

 யானைகள்     அடங்காத போது அதை அங்குசத்தால் குத்துவதும், சங்கிலியால் கட்டி 

வைப்பதும்

 வன்கொடுமை ஆகாதா?

விலங்குகளோடு மதத்தை இணைத்துப் பார்ப்பது சரியல்ல. எந்த இறைவன் யாரிடம்

 கட்டளையிட்டார் யானைகளை மத நிக்ழச்சிகளில் பங்கேற்க வைக்கவேண்டும் என்று?




விழாவின் பெயரில் பட்டாசு வெடித்து உயிரினங்களை அச்சுறுத்தாலாம்; இடிமுழக்க ஓசை

 வெடிகளால் பச்சிளங்குழந்தைகள், முதியோர், பிணியாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள்

 ஆகியோருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதுடன்  இதய நோயாளிகளை விரைவில்

 எமலோகம் அனுப்பி வைக்க இடியோசையை மிஞ்சும் வெடி வெடிக்கலாம். இதற்கெல்லாம்

 சட்டம் அனுமதி கொடுக்கும். வெடி வெடித்து காற்றின் தூய்மையைக் கெடுக்கும் கந்தகப்

 புகையை நாடு முழுவதும் எழுப்பலாம் பண்டிகையின் பெயரால்: சட்டம் அனுமதிக்கும்;



 விழாவின் பெயரால் லட்சக்கணக்கானோர் வண்ணப் பொடிகளைக் குறிப்பிட்ட நாளில் தூவி

 காற்றின் தூய்மையைக் கெடுக்கலாம: இதையும் சட்டம் அனுமதிக்கும்.

ஆனால் ஏறுதழுவதல் மட்டும் ஏளனமாகப் போய்விட்டது.  


உச்சநீதிமன்ற ஆணையை பல

 தடவை மதிக்காத கர்நாடக மாநிலத்தைத் தட்டிக் கேட்க சட்டத்தில் இடமில்லையா?



முதலில்,  வெளிநாட்டில் இருந்து விலங்குகள், பறவைகள், விதைகள் ஆகியவற்றவை

 இறக்குமதி செய்வதற்கு தடை   விதிக்க வேண்டும்,


  நம் நாட்டு விலங்கினத்தையும், மண்ணிற்கேற்ற விதைகளையும் நாம்

 இழக்க அனுமதிக்கக் கூடாது. ஜெர்சி மாடுகளுக்கு வெளி நாட்டு நாய்களுக்கும் தடை

 போடவேண்டும். 

பாரம்பரியம் பற்றிப் பேசும் தேசியக் கட்சிகளுக்கு தமிழர்களின் வரலாறு, இலக்கியம்,

 பண்பாடு, பாரம்பரியம் பற்றி என்ன தெரியும்?  

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழை

 அழிக்கும் முயறிசி நடந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் தமிழின் வளர்ச்சியை யாராலும்

 தடுக்க முடியவில்லை. 

இந்தியாவில்   ஆறு கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் ஒரே செம்மொழி

 நம் தமிழ் மட்டுமே. 

எனவே தமிழர்களுக்கும், தமிழர் பண்பாடு, மொழி, பண்பாடு,

 பாரம்பரியம் ஆகியவற்றிற்கு உரிய மதிப்பைக் கொடுத்து ஏறுதழுவதலுக்கு      விதி க்கப்பட்ட

 தடையை நீக்க உரிய      அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தவேண்டும். 

தமிழகத்தில் பணியாற்றும் நடுவண் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் தினத்தை விடுமுறை

 நாளாக அறிவிக்க வேண்டும் 

பதிவு : மலர்91
நாள் : 9-Jan-17, 2:07 am

மேலே