எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புத்தகங்கள்…!! 1. புத்தகத்தைப் பரட்டிப் புரட்டிப் பார்த்தாள் ஒரு...

                    புத்தகங்கள்…!!     


 1. புத்தகத்தைப் பரட்டிப் புரட்டிப் பார்த்தாள் ஒரு வரி படித்துவிட்டு உதடு விரித்து சிரித்தாள்.

 2. புத்தகங்கள் வாங்கி படிப்பதில் சுவாரஸ்யமில்லை. இரவல் வாங்கி படிப்பதில்தான் சுவாரஸ்யம் என்றாள். 

 3. அவள் படித்த இடத்தில் அடையாளமாக வைத்தாள். காதலன் போட்டோ. 

 4. முக்கியமான கருத்தை கோடிட்டு படித்தாள். தோழிகளுக்குக் காட்டி சிரித்தாள். 

 5. புத்தக அடுக்கில் முக்கியமான புத்தகம் மட்டும் உட்புறம் வைத்தாள். 

 6. தேடிய புத்தகம் கிடைக்காமல் போனதால் தோழிகளைக் கேட்டு நச்சரித்தாள். 

 7. அவள் விரும்பி படிப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். 

 8. அவளொரு அழகிய புத்தகம்…!!   

 ந.க.துறைவன். 

பதிவு : துறைவன்
நாள் : 12-Jan-17, 6:12 am

மேலே