எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழக இளைய சமுதாயம் வா்ழ்க....மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..தலை...

  தமிழக இளைய சமுதாயம் வா்ழ்க....மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..தலை வணங்குகிறேன் ...
***********************************************************************************சற்று நேரத்திற்கு முன் NEWS 7 தொலைக்காட்சியைக் கண்டேன். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான அளவில் குழுமியிருக்கும் , உரிமைக்காக நான்கு நாட்களாக தொடர்ந்து போராடிவரும் மாணவ மாணவியரை அங்குள்ள அந்த தொலைகாட்சி களப்பணியாளர் ஒருவர் அங்குள்ளவர்களிடம் தனித்தனியாக கேள்விகள் நேர்லையைகக் கேட்டுக்கொண்டிருப்பது நான் காண நேர்ந்தது .ஒரு சகோதரியிடம் கேட்கும்போது அவர் உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் பதில் அளித்தார் அங்குள்ள பாதுகாப்பு பற்றி கேள்விகளுக்கு.ஒரு சகோதரி கூறினார் ஒரு இளம்பெண் இருந்தால் அவரைச் சுற்றி நான்கு மாணவர்கள் அமர்ந்து அரணாக இருந்து காத்து வருகின்றனர் . இதுவே எங்களைபோன்ற பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சி கலந்த பாதுகாப்பு உணர்வை எங்களுக்கு அளிக்கிறது என்று குறிப்பிடும்போது உண்மையில் என் நெஞ்சில் ஓங்கிய உணர்வால் சிலிர்த்து போனேன்.அதே போல மற்றொரு சகோதரியிடம் அதே நெறியாளர் அங்குள்ள பாதுகாப்பைபற்றி கேள்விகள் கேட்டார். உடனடியாக அந்தப் பெண் வேகமாக கூறினார். ஒரு உதாரணம் சொல்கிறேன் சார் ....நாங்கள் இயற்கை உபாதைகளால் , சிறுநீர் கழிக்க வேண்டும் என்றாலே எங்களுடன் சில ஆண்கள் எங்களுக்கு துணையாக உடனே எழுந்து ஒரு அளவு தூரம் வரை அழைத்து சென்று பின்பு திரும்பும் வரை காத்திருந்து பாசமுடன் அழைத்து வந்து அதே இடத்தில் எங்களை அமரவைக்கும் பங்கும் பண்பும் உயர்ந்த எண்ணமும் தமிழன் என்ற அடிப்படை உணர்வால் உதவிடும் உள்ளமுடன் செய்கின்ற காரியத்தை எண்ணிப் பார்க்கும்போது ...உண்மையில் நான் அந்த மாணவ செல்வங்களை அவர்களின் பாதம் தொட்டு தலை வணங்குகிறேன் .இதுதான் தமிழனடா .....இந்த தொப்புள்கொடி உறவும் உணர்வும் என்றும் எதிலும் தொடர்ந்திட வாழ்த்துகிறேன் . 
சுயநலமில்லா தமிழர்கள் இன்னும் நம் சமுத்தாயத்தில் நிறைந்து உள்ளனர் எனபதை நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.அதே போன்று அனைவருக்கும் உணவும் நீரும் கொடுத்து உதவி செய்தது என் கண்கள் கலங்கிட செய்தது உணர்ச்சியால் .இதை மற்ற வட இந்திய சமுகம் அனைவரும் புரிந்து எங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் .தமிழன் என்று சொல்லடா 
தலை நிமிர்ந்து நில்லடா ....உண்மை உண்மை உண்மை ....


பழனி குமார் 

.( நேற்று இரவு 11 மணி அளவில் பதித்தது )Image may contain: one or more people and crowd

நாள் : 21-Jan-17, 8:31 am

மேலே