எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

😈Reliance fresh (VS) 👵🏾கூடை வியாபார பாட்டி: Reliance:...

😈Reliance fresh (VS) 
👵🏾கூடை வியாபார பாட்டி:

Reliance: ஒரு மாதத்திற்கு முன் கொள்முதல் செய்யப்படும் பழம் 🍉🍇🍅🍈🍑🌽deep freezerல் அழகாக லேபிள் ஒட்டி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பாட்டி: அன்று காலை சந்தையில் வாங்கிய பழத்தை இரவுக்குள் விற்று நாளை புதிய பழம் 🍏🍎🍐🍋🍑வாங்கி வருவர்

Reliance: ஒரு கிலோ ஆப்பிள் 🍏🍎100 ரூபாய் பேரம் பேச முடியாது , 90 ரூபாய்க்கு வேணும்னா ஒரு வாரம் கழித்து தோல் சுருங்கிய மிச்சமான ஆப்பில் offerல வரும்போது வாங்கிகலாம்.

பாட்டி: ஒரு 2நிமிஷம் பிடிவாதம் பிடித்தால் 100ரூவா ஆப்பிள🍏🍎 90ரூவாக்கி குடுத்துட்டு போயிடும்.

Reliance: உங்களால ஒரு பத்து ரூபா லாபம் கிடைத்தால் , அந்த நிறுவனம் கெட்டும் புதிய கட்டிடத்தின் ஒரு செங்கல் ஆகும்.🏦🏪🏙

பாட்டி: உங்களால் கிடைத்த 10ரூபாய் லாபம் , அன்று இரவு பாட்டி வீட்டு உணவாக ஆகலாம் 🍲, தன் பேரன் ரொம்ப நாள் கேட்ட விளையாட்டு பொருள் ஆகலாம் 🎾🎭🚗, ஒரு ஏழை மாணவியின் புத்தகமாக ஆகலாம்📚🖊✒ , காய்ச்சலால் வாடிய குலந்தையின் மருந்தாக கூட ஆகலாம் 💔
-------------------

வியாபாரம் என்பது பொருளாதார பகிர்வு , ஒரே இடத்தில் செய்யும் வியாபாரம் , ஒரே இடத்தில் பதுக்கப்படும்    பொருளாதாரம் 
இவை நாட்டுக்கு கேடு.

சிறு குறு விவசாயிகளை வியாபாரிகளை வாழவைப்போம்

பதிவு : ஜெகன் ரா தி
நாள் : 10-Feb-17, 8:39 pm

மேலே