எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றளவில் ஒரு மனித உயிராய் நான் என்ன சாதித்து...

இன்றளவில் ஒரு மனித உயிராய் நான் என்ன சாதித்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னையும் சேர்த்து மாற்ற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று (24/2/2017) என் வாழ்நாளில் மறக்க முடியாத பக்கம். 

தினமும் பணிக்கு இரண்டு பேருந்துகள் மாறி தான் பயணிக்கிறேன், இந்த இரண்டாவது பேருந்து மாற பேருந்து நிலையம் வந்து நான் பயணிக்க வேண்டிய பேருந்தில் ஏறிவிட்டேன். அதில் ஒரு ஏழை பெண்மணி வலிப்பு நோயால் கை கால்கள் இழுத்துக் கொண்டு பரிதாபமாக இருந்தார். ஒரு பெண் அவருக்கு கையில் இரும்பு கொடுத்து உதவிக்கொண்டிருந்தார். ஓட்டுநர் தண்ணீர் கொடுத்தார். 
108 ற்கு அழைத்துவிட்டு காத்திருந்தனர். அப்பெண்ணிற்கு எழுந்து அமரக்கூட முடியவில்லை , அந்த அம்மாவை மெல்ல கைத்தாங்களாக தூக்கி இருக்கையில் அமர வைத்தேன். ஆனால் கீழே இறக்கிவிட சொன்னார்கள். ஆண்களுக்கோ மற்ற பெண்களுக்கோ உதவ மனம் இல்லை போலும் வேடிக்கைத் தான் பார்த்தார்கள். நானும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து அப்பெண்மணியை தூக்கி கீழ் இறங்கி நிழலில் அமர வைத்தோம். எனக்கோ அலுவலகம் செல்ல நேரம் குறைவாக இருந்தது. விட்டுவர மனமின்றி கனத்த மனதோடு மீண்டும் அப்பேருந்தில் ஏறி அமர்ந்தேன். 
மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது அன்பர்களே, 
அந்த இன்னொரு பெண்தான் அந்த பெண்ணோடு 108 ற்காக காத்திருந்தார்கள். அந்த அம்மா குழந்தை போல துவண்டு துவண்டு விழும் போது மனது நொருங்கிவிட்டது எனக்கு. 
என்னால் முடிந்த உதவியை செய்தேன். ஆனால் நமக்கு மனித நேயம் இன்னும் நிறைய வளர வேண்டும். உதவும் எண்ணம் இன்னும் இன்னும் நிறைய வேண்டும். 

நாள் : 24-Feb-17, 3:17 pm

மேலே