எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி லட்ச தீபம்திருவண்ணாமலை...

shrilordsivasakthi அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி லட்ச தீபம்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி லட்சதீப பெருவிழா நடைபெறுகிறது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி , அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
லட்சார்ச்சனை, லட்ச தீபம்: அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பகல் 12.05 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் நடைபெறுகின்றன.மேலும், மாலை 5 மணி முதல் கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் நான்காம் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி அருகே உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் மாலையில் திரளும் பெண்கள், சிறுவர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
நான்கு கால அபிஷேகம்: மகா சிவராத்திரியன்று நான்கு கால அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரருக்கு முதல் கால அபிஷேகம், இரவு 11 மணிக்கு 2-ஆம் கால அபிஷேகம், சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. கோயில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை அணிவித்து நடத்தப்படும் சிறப்புப் பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகின்றன.
கலை நிகழ்ச்சிகள்: வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் சனிக்கிழமை காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சங்கல்பத்துக்கு 150 பேர் அனுமதி: லட்சார்ச்சனையின் முதல் பகுதியாக சங்கல்பத்துக்காக 150 பேர் சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகே அனுமதிக்கப்படுவர். லட்சார்ச்சனைக்கான அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் பக்தர்கள், துர்க்கையம்மன் சந்நிதி அருகே சங்கல்பம் செய்து, வில்வ குவளையை அர்த்த மண்டபத்தில் குருக்களிடம் ஒப்படைத்து சுவாமி தரிசனம் செய்ய அனுப்பப்படுவர்   பக்தர்கள் அனைவரும் 2-ஆம் பிரகாரத்தில் வலம் வருவதை தவிர்த்து, 3-ஆம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழ மரத்தை சுற்றி வலம் வரலாம்.
அனைவரும் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அர்த்த மண்டபத்தில் அபிஷேக கட்டளைதாரர்கள் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். லட்ச தீபம் ஏற்ற கிளிகோபுரத்துக்கு வெளியே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது     

நாள் : 24-Feb-17, 7:19 pm

மேலே