எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தினமும் விழிக்கிறோம் அன்றாட கடமைகளை செவ்வனே செய்கிறோம். காய்கறி...

தினமும் விழிக்கிறோம் அன்றாட கடமைகளை செவ்வனே செய்கிறோம். காய்கறி கடையில் இரண்டு நாள் முந்தைய பழையதை புதிய காய்கறி என்று வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்து உண்கிறோம். இதுவே உண்மையில் சுவையான உணவென்று ருசித்து உண்கிறோம். 
உண்மையில் உணவின் ருசி எதுவென்று தெரியுமா, நம் கைகளால் மண்ணை கிளறி விதையிட்டு, நீர் விட்டு, வளர்த்து துளிர்த்து வளர்ந்த செடி எந்த ரசாயனமும் இன்றி நம் பராமரிப்பில் விளைந்த காய்கறி அப்போதே பறித்து சமைத்து சூடான சோற்றோடு இட்டு சுடச்சுட உண்ணும் போது தெரியும் உண்மையில் சுவையான உணவு எதுவென்று தெரியும். 
பழையதை வாங்கி தின்றுவிட்டு, நீ தின்றதை விளைவிக்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்க உனக்கு தைரியம் இருக்கிறதென்றால், உன் வயிற்றுக்கு உணவிட இனி விவசாயம் செய்ய போவதில்லை என விவசாயி உன் வயிற்றில் அடித்தால் தாங்க மாட்டாய்...

நாள் : 26-Feb-17, 4:07 pm

மேலே