எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 19"பள்ளி பருவ...

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 19"பள்ளி பருவ காலத்தில் மனதில் பறந்த பட்டாம் பூச்சியை பலர் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.சிலர் காமத்தின் பால் கவர் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.அந்த வயதில் அவரவர் நிலையை பொறுத்து அவைகள் நியாயமானதாக தென்பட்டாலும் உண்மையில் இரண்டுமே குற்றம் தான்.ஆனாலும் பள்ளி பருவத்தில் வளர்ந்த காதலின் நினைவுகள் கல்லூரி கடந்த பின்னும் அன்று போல் இன்றும் இளமையாக இனிமையாக மனதில் பதிந்த காதலின் உயிரோட்டமான உள்ளங்களின் கதை தான் இது 


உலகம் மிகவும் அழகானது விந்தையானது ஆனால் காதல் அதனை இன்னும் அழகு படுத்துகின்றது 
தாஜ்மஹால் கட்டப்படாத உண்மைக் காதல்கள் பல மண்ணில் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஒரு பெண்ணுக்கு அன்பான காதலன் வாழ்நாள் முழுவதும் நிழலில் துணையாக பயணிப்பதை விட உயரிய தவம் வேறொன்றுமில்லை.இவளின் காதல் மிகவும் புனிதமானது அவனது காதல் அவளை மிஞ்சிய நேசமானது. இரு உள்ளங்களும் கண்களால் மோதிரம் மாற்றிக் கொண்டு கனவுலகில் சுகமான தருணங்களை மீட்டுக் கொண்ட இருந்தது வெகு நாளாக..,அந்த தருணங்களை 
நினைவுகளின் தேர்விலும் காலம் அவர்களுக்கு அதனை பரிமாற்ற வாய்ப்புக் கொடுத்தது 

இவர்களின் காதலுக்கு இரு குடும்பமும் ஆதரவு நல்கியது.ஆனாலும் விதி யாரை தான் விட்டது. அழகான அந்தி வான் வேளையில் அவனது தோளை சாய்ந்த படி இவள் நடந்து கொண்டிருந்த போது
எதிரில் வாகனம் வருவதை காணாத இவளின் கவனயீனம் விபத்தில் முடிந்தது.அன்பான காதலி  இரத்த வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதை கண்ட காதலன் செய்வதறியாது கண்ணீரில் மூழ்கினான். அவளை வைத்தியசாலை கொண்டு சென்ற பின் நீண்ட நேர போராட்டத்தின் பின் அவசர சிகிச்சை
பிரிவிலிருந்து வெளி வந்த வைத்தியர் இவனது தோள்களை பற்றி நான் சொல்வதை ஆறுதலாக கேளுங்கள் என்று சொல்லி இவனின் தோளில் கை வைத்தார்.அப்போது அவன் கண்களிருந்து ஒரு துளி கண்ணீர் நிலத்தில் விழுந்து நூறு துண்டாய் சிதறியது.

வைத்தியர்:விபத்தில் காயப்பட்டவர் உங்களுக்கு யார்?

காதலன்:(மெளனம் காத்த சிறிது நேரத்தின் பின்) என்னுடைய உயிர் என்னுடைய உலகம் என்னுடைய தாய் என்னுடைய குழந்தை என்னுடைய இதயம் மொத்தத்தில் காதலி என்றான் 

வைத்தியர்:(அவனின் தோளை மீண்டும் பற்றி படி) இறைவன் உங்கள் காதலை மிகவும் நேசிக்கிறார் என்று நினைக்கிறேன்.உங்கள் காதலியின் உயிருக்கு ஒரு ஆபத்தும் கிடையாது அவள் பிழைத்து விட்டாள்

காதலன்:(தரையில் முட்டி போட்டவனாய் இறைவனை அழைத்து கதறி அழுதான் ஆனந்தத்தின் எல்லை இது தான் என்று சொல்லும் படி)

வைத்தியர்:(தயக்கத்துடன் )இருந்தும் அவளுக்கு....

காதலன்:என்ன டாக்டர் அவள் உயிர் பிழைத்ததே என்னோடு வாழத்தான் இருந்தும் உங்கள் தயக்கம் என்னை மீண்டும்அச்சப்பட வைக்கிறது என்னாச்சு சொல்லுங்க (மீண்டும் கண்களில் கண்ணீர்)

வைத்தியர்:நான் சொல்வதை பொறுமையாக கேளுங்கள்.விபத்தில் உங்கள் காதலியின் வயிற்றுப் பகுதி அடிபட்டதால் அவளுடைய கர்ப்பப்பை சிதைந்து போய் விட்டது அவளால் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க முடியாது.மேலும் அவள் மரணம் வரை நீங்கள் சொன்ன மாதிரி ஒரு குழந்தை போல் தான் இருப்பாள்.அவளால் உங்கள் துணையின்றி ஒண்ணுமே செய்ய முடியாது 

காதலன்:என் குழந்தையும் அவள் தான் என் நிழலும் அவள் தான் அவளின்றி நானில்லை நானின்றி அவளில்லை ஒரு குழந்தையின் அழுக்கு தாய்மையுள்ள ஆணுக்கு புனிதம் நிறைந்தது என்றுரைத்தான் 

வைத்தியர்:காதல் இந்தளவுக்கு மனிதனை மாற்றுமா? காதல் இந்தளவு விசித்திரமானதா? உங்கள் காதலை உலகம் நேசிக்கும் 

காதலன்:எதற்கு உலகம் எங்கள் காதலை நேசிக்க வேண்டும் அதற்கு நாங்களே உலகம் எங்கள் இதயமே ஆயுள் 

(இவனது வார்த்தைகள் கேட்ட வைத்தியர்  மெய் மறந்து அவனை கட்டி அனைத்து அவளை பார்க்க சென்றுமாறு செய்கை காட்டுகிறார்.அவனும் அவளருகே செல்கிறான்)

 அவளது உடம்பில் போடப்பட்ட கட்டுக்களின் மேல் மென்மையாக கை வைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு ஒரு மணி நேரம் கடந்த பின்னும் வைத்த கண் வாங்காமல் அவளை பார்க்கிறான். அப்போது அவனது உள்ளம் காதில் "இதுவரை பார்த்ததை விட இன்று தான் உன் காதலி மிகவும் அழகாக தெரிகிறாள் ஏனென்றால் அன்று அவள் உன் காதலி; இன்றிருந்து அவள் உன்குழந்தை" நடந்தை வீட்டில் சொல்கிறான் அவளை ஏற்று வாழப்போகிறேன் என்கிறான் குடும்பம் மறுக்கிறது உறவுகள் மறுக்கிறது என் காதலிக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன் உங்களையும் தான் என்று சொல்லியவனாய் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளிவருகிறான்.ஒரு மாதம் கழிந்து போகிறது வைத்தியசாலையிலிருந்து அவளும் வெளி வருகிறாள்.

சூரியன் அவள் கண்களில் படுகிறது அவளும் கண்களை மூடுகிறான் அவள் முன் சென்ற இடமெல்லாம் அவன் காதலனும் பின் வருகிறான்.வாழ்க்கை முன்னதை விட இன்று தான் இவளுக்கு மிகவும் அழகாக தெரிகிறது.பின் திரும்பி அவனை பார்க்கிறாள் அவனும் அன்போடு ஒரு துளி கண்ணீரை மண்ணில் சிந்தினான் அங்கு புதிதாய் ஒரு பூவும் முளைக்கிறது.

என்னுடைய எண்ணம் உங்கள் மனதை தொட்டிருந்தால் உயிரோட்டமான கவிகளை இந்த புனிதமான காதலுக்கு சமர்ப்பியுங்கள் 



நாள் : 28-Mar-17, 12:00 pm

மேலே