எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*அன்னையர் தினம்* Sunday, May 14, 2017 “அ”வெனும்...

அன்னை மலர்ப்
பாதம் அடிதொழுவேன்


 *அன்னையர் தினம்* 
 Sunday, May 14, 2017 “அ”வெனும் எழுத்தில்லை யென்றாலெதிலும்
ஆரம்பமே இல்லையென்றாகி விடுமம்மா..!

அகரவரிசை எழுத்தில் முதலெழுத்தே..
அம்மாவிற்கும் ஆரம்ப எழுத்து..!

“அம்மா” இல்லையென்றால் பிறகு
“அனாதை” என்றாகி விடுமன்றோ..?

அடிபட்டால் அவசரமாக வரும்சொல்
“அம்மா” வெனுமலரல் வார்த்தைதானே..!

சொந்த மென்றே சொல்லே
பந்தமுடன் அம்மாவிடம்தான் பிறக்கும்..!

உறவனைத்துக்கும் ஒரு பாலம்
உண்டென்றால் அது “அம்மா”..!

ஆயிரம் உறவுகளுக் கொரேயொரு
அர்த்தம் சொல்வதும் “அம்மாதான்”..!

தந்தை உயிரெனும்கரு கொடுப்பாரதற்கு
தாயென்பவள் வடிவம் கொடுப்பாள்..!

தாயில்லையேல் நமக்கு தந்தையுமில்லை..!
தாயின்றியெதுவும் இங்குயிர்கள் பிறந்ததில்லை..!

அன்னையர் “தினம்” என்றில்லாமல்..
உன்னை “யுகமிருக்கும்” வரையில்..

மகத்தான சக்தியுடைய “அம்மாவை”.. 
மறவாமல் மண்ணுயிர்கள் அனைத்துமே..

கொண்டாடவேண்டும் “அம்மா”..!

அன்புடன் பெருவை பார்த்தசாரதி      


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : PERUVAI PARTHASARATHI
நாள் : 14-May-17, 12:35 pm
மேலே